GOVERNMENT OF INDIA இந்திய அரசின் அதிரடி வரலாறு செல்லாத ரூபாய் நோட்டுக்கள்:
GOVERNMENT OF INDIA இந்திய அரசின் அதிரடி வரலாறு செல்லாத ரூபாய் நோட்டுக்கள்: இந்தியாவில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அரசு அறிவித்து பலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், அரசு இவ்வாறு அதிரடியாக செயல்படுவது இது முதல் முறை அல்ல என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே, இரண்டு முறை இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. 1946-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், ஆயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1954-ம் ஆண்டு, ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோ ட்டுக்கள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், 1978-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், மீண்டும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு ஒரு பின்னணி உண்டு. 1970-களிந் துவக்கத்தில், கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவர, சில ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவிக்கலாம் என வான்சூ கமிட்டி அறிவித்தது. ஆனால், அந்தக் கமிட்டியின் பரிந்துரைகள் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட...