TRICHY LOGANATHAN - SINGER BEGINING WITH.....
TRICHY LOGANATHAN - SINGER BEGINING WITH..... நகைத்தொழில் செய்துவந்த திருச்சி சுப்பிரமணிய ஆசாரி, மலைக்கோட்டை அருகில் நிர்வகித்து வந்த விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கச்சேரி நடத்துவார். அதைக் கேட்டு ரசித்த மகன் லோகநாதனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து, பாட்டில் மோகம் பிறந்தது. நடராஜ பிள்ளையிடம் சேர்த்து, மகனை சங்கீதம் கற்கவைத்தார் சுப்பிரமணியம். பின்னர் தனது அண்ணன் மகன் எம்.எம்.மாரியப்பா மூலம் நாடகத்தில் சேர்த்துவிட்டார். ராஜபார்ட் நடிகராக உயர்ந்தார் லோகநாதன். கலைஞர் கைவண்ணத்தில் வந்த 'ராஜகுமாரி'யில்தான் லோகநாதனின் முதல் குரல்வண்ணம் பளிச்சிட்டது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில், எம்.எம்.மாரியப்பா எம்.ஜி.ஆருக்கு குரல் கொடுக்க, நம்பியாருக்காக பாடினார் இவர். 'காசினி மேல் நாங்கள் வாழ்வதே சுக வாழ்வுதான்...' என்ற பாடல் அது. தொடர்ந்து 'அபிமன்யு' படத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினத்துடன் சேர்ந்து, 'இனி வசந்தமாமே வாழ்விலே...' என்ற பாடலைப் பாடினார். இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்றாலும், இந்தப்பாட்டுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று சொல்லப்படுகிறது. ...