KALINGARAYAN IRRIGATION PROJECT
KALINGARAYAN IRRIGATION PROJECT ஈரோடு மாவட்டமும் காலிங்கராயன் என்ற பெயரும் பிரிக்க முடியாதவை. மாவட்டத்தின் ஒரு பகுதி முழுவதும் மஞ்சளாக விளைந்து செழிக்க வலுவான காரணம் காலிங்கராயன் பாசன வாய்க்கால். பவானியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து பிரியும் காலிங்கராயன் பாசன வாய்க்காலில் ஆண்டில் பத்து மாதங்களுக்கும் மேலாகத் தழும்பத் தழும்பத் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். இந்த வாய்க்காலுக்குப் பின்னால் வெவ்வேறு விதமான வரலாறுகள். வெறும் கதைகளோ என்றும் எண்ணச் செய்யும் தகவல்கள். ஆனால், மறுக்க முடியாத உண்மை, தொலைநோக்குடன் இந்தத் தடுப்பு அணையைக் கட்டி வாய்க்காலை வெட்டியவர் - காலிங்கராயன். பவானியில் தொடங்கி நொய்யல் வரை கோணல் மாணலாகச் சென்று, வழியெங்கும் கொங்கு மண்ணைச் செழிக்கச் செய்கிறது காலிங்கராயன் வாய்க்கால். இந்தக் கோணல்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக ஒரு காரணம் கூறப்படுகிறது. வாய்க்கால் தொடங்கு மிடத்தில் கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரம். முடிகிற இடமான நொய்யலில் 412 அடி. நேர்க்கோட்டில் தொலைவு 50 கி.மீ. இரண்டுக்கும் இடையேயுள்ள மேடு பள்ளம் காரணமாகத் தண்ணீர் விரைந் தோட...