S.W.R.D.BANDARANAIKE , I ST PRIME MINISTER OF CEYLON 1899 JANUARY 8-1959 SEPTEMBER 26
S.W.R.D.BANDARANAIKE , I ST PRIME MINISTER OF CEYLON 1899 JANUARY 8-1959 SEPTEMBER 26 சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கிலம்:Solomon West Ridgeway Dias Bandaranaike, சிங்களம்: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, S. W. R. D. Bandaranaike, ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். குடும்பம் பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர்.சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து கா...