Tuesday 8 January 2019

S.W.R.D.BANDARANAIKE , I ST PRIME MINISTER OF CEYLON 1899 JANUARY 8-1959 SEPTEMBER 26




S.W.R.D.BANDARANAIKE ,
I ST PRIME MINISTER OF CEYLON
1899 JANUARY 8-1959 SEPTEMBER 26



சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (ஆங்கிலம்:Solomon West Ridgeway Dias Bandaranaike, சிங்களம்: සොලමන් වෙස්ට් රිජ්වේ ඩයස් බණ්ඩාරනායක, சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, S. W. R. D. Bandaranaike, ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

குடும்பம்

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர்.சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார்.[1] இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

அரசியல் வாழ்க்கை

பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.

கொலை
தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

விட்டுச் சென்றவை

1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் பௌத்த பிக்குகளினதும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார்.[2] இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார்.[

இலங்கையின் முதலாவது அரசியல் கொலை

1983ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அடக்கு முறை அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்து அவர்களை இராணுவப் பலத்தையும் தங்கள் கட்சி குண்டர்களை முடுக்கி விட்டும் அடக்கி அடிமைகளாக வைத்திருப்பதற்கு எடுத்த சட்ட விரோத முயற்சிகளின் பக்க விளைவாகவே இலங்கையில் பயங்கரவாத யுத்தம் தோன்றியது.

1983ம் ஆண்டில் கறுப்பு ஜுலை இனக்கலவரம் இலங்கை சிறுபான்மையோரை அழிக்கும் ஒரு நாடு என்ற தப்பான உணர்வை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான அதிகார துஷ்பிரயோகமே பிரதான காரணமாகும். இந்த பயங்கரவாத வன்முறைகளினால் நூற்றுணக்கான தமிழ் சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளின் கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிர் இழந்தனர்.

இந்தப் பின்னணியில் இற்றைக்கு 55 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது அரசியல் படுகொலை பற்றிய விபரங்களை உங்களுக்கு எடுத்துரைப்பது பொருத்தமாக இருக்கும். 1959ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ம் திகதியன்று சரியாக 55 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் உண்மையான மக்கள் ஆட்சியை மலரச் செய்த பெருமைக்குரிய பிரதம மந்திரியாக விளங்கிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா காவி உடை அணிந்த ஒரு மனிதனால் அன்னாரது தனிப்பட்ட இல்லமான பான்ஸ் பிளேஸ் இல்லத்தில் வைத்து ரிவோல்வர் என்ற சுழல் கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்கவை சோமாராம தேரர் என்ற பெளத்த பிக்குவே சுழல் துப்பாகியினால் சுட்டார். உடனடியாக பிரதம மந்திரி அருகில் உள்ள கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்று இலங்கை பெரியாஸ்பத்திரியில் பிரதம சத்திர சிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் பி.ஆர்.அன்தனீஸ் உடனடியாக இருதய சத்திரசிகிச்சை செய்து அவரது உயிர் பிரிவதை தற்காலிகமாக தடுத்து நிறுத்தினார்.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரதம மந்திரி பண்டா ரநாயக்காவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது. இதனால் டாக்டர் அந்தனீஸ் பதற்றப்படாமல் தனது கையினால் பிரதம மந்திரியின் இதயத்தை மசாஜ் செய்து அதனை மீண்டும் இயங்க வைத்தார். முதல் நாள் முற்பகல் 10 மணியளவில் பிரதம மந்திரி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்ட போதிலும் அவர் மறுநாள் காலை வரை உயி ரோடு இருந்து மறுநாள் காலை 8 மணியளவிலேயே அவரது உயிர் பிரிந்தது. இலங்கையின் முதலாவது முதலாளித்துவக் கொள்கையுடன் பதவிக்கு வந்த திரு. டி.எஸ். சேனநாயக்காவை பிரதம மந்திரியாகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் திரு. பண்டாரநாயக்க ஒரு சிரேஷ்ட அமைச்சராக இருந்தார்.

டி.எஸ்.சேனநாயக்காவுக்கு அடுத்தபடியாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு சகல தகுதிகளையும் திரு. எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவே பெற்றிருந்தார். இந்தக் கால கட்டத்தில் சமதர்ம வாதத்தை பின்பற்றும் நம்நாட்டு தேசிய வாதியான திரு. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் தான் தொடர்ந்தும் இருந்தால் இந்நாட்டு பாட்டாளி மக்களுக்கு விமோசனம் கிடைக்காது என்ற நோக்கத்துடன் தமது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார். எதிர்க்கட்சியில் உள்ள முற்போக்குக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் பிலிப் குணவர்தன, டாக்டர் டபிள்யூ.தஹாநாயக்க ஆகியோரை இணைத்துக் கொண்டு அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஏற்படுத்தி மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பின் கீழ் 1956ம் ஆண்டின் பொதுத் தேர்தலில் போட்டியிட்டார்.

பஞ்ச மகா சக்தியான மகா சங்கத்தினர், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், சுதேச வைத்தியர்கள் ஆகியோரை ஒன்றிணைத்துக் கொண்டு போட்டியிட்ட திரு. பண்டாரநாயக்கா மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பெரும்பான்மை வாக்குகளுடன் 1956ம் ஆண்டு தேர்தலில் வெற்றியீட்டியது. அதையடுத்து பண்டாரநாயக்க ஒரு பெரும் தவறை இழைத்தார். 24 மணித்தியாலங்களுக்குள் சிங்களம் மாத்திரம் சட்டத்தை அமுலாக்குவேன் என்று அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் அவரது அரசாங்கத்தின் மீது வைத்திருந்த அசையாத நம்பிக்கை தளர்ச்சி அடைந்தது.

தமிழ் மக்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் அடுத்தபடியாக தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை அழைத்து அதிகார பரவலாக்கல் ஒப்பந்தம் ஒன்றை அவருடன் செய்து கொண்டார். அந்த அதிகார பரவலாக்கல் ஒப்பந்தம் இப்போது இருப்பது போன்று மாகாண சபைகளாகவோ, மாவட்ட சபைகளாகவோ இருக்கவில்லை. கிராம சபைகளை விட சற்று கூடுதலான அதிகாரத்தை உடைய பிரதேச சபைகளை விட சற்று கூடுதலான அதிகாரத்தை உடைய பிரதேச சபைகளே இவ் ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்படவிருந்தது. அன்று அரசியல் அதிகாரத்தில் கொடிகட்டிப் பறந்த பெளத்த பிக்குமார் பண்டா - செல்வநாயகம் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை கிழித்தெறிவதற்கு இடமளிக்காமல் இருந்திருந்தால் இலங்கையில் பயங்கர வாதமோ வன் முறையோ பிரிவினை வாதமோ நிச்சயம் ஏற்பட்டி ருக்காது.

பெளத்த பிக்கு மார்களின் எதிர்ப்பை பார்த்து அஞ்சிய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா தான் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை தன்னிச் சையாக கிழித்து எறிந்தார். இந்த சம்பவம் இலங்கையின் வரலாற்றில் இரத்தக் கறை படிந்ததாக அமைந்தது. இந்த சம்பவத்துடன் பிரதம மந்திரி பண்டாரநாயக்காவுக்கு பெளத்த மகா சங்கத்தினரின் அழுத்தங்கள் அதிகரித்தது. இதனால் களனி மகா விகாரையின் விகாராதிபதியாக இருந்த சங்கைக்குரிய புத்த ரகித தேரரின் தூண்டுதலின் பேரில் சோமாராம தேரர் திரு.பண்டாரநாயக்காவை அவரது இல்லத்துக்கு வந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் என்று நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் துப்பாக்கியால் சுட்ட வணக்கத்துக்குரிய தல்துவ சோமாராம தேரருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அவர் ஒரு கத்தோலிக்கராக மாறி பீட்டர் என்ற பெயரில் தைரியமாக தூக்கு மேடையில் ஏறி மரணித்தார். இந்த கொலை சம்பந்தமாக கைது செய்யப்பட்ட புத்த ரகித தேரர் சிறையில் வைக்கப்பட்டு 1963ம் ஆண்டில் சிறைக்கைதியாக இருந்த போது அங்கு மரணமானார்.

திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் கொலை பற்றிய விரிவான விபரங்களை இப்போது தருகிறோம். தல்துவ சோமாராம தேரர் பொரளையில் உள்ள அரசாங்க ஆயுர்வேத வைத்தியசாலையில் ஒரு விரிவுரையாளராக இருந்தார். இவர் அமர விகாரையில் தங்கியிருந்தார்.

(தொடரும்...)

இவருக்கு பொரளையில் ஆயுர்வேத கண் சிகிச்சை நிலையம் ஒன்றும் இருந்தது. இவர் பிரதம மந்திரியை சந்தித்து ஆயுர்வேத கல்லூரி எதிர்நோக்கியிருக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கு அவரது உதவியை நாட விரும்பினார். 1915ம் ஆண்டில் தல்துவ ரத்துகம ராலகே வேரிஸ் சிஞ்சோ என்ற பெயரில் சோமாராம தேரர் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிறந்தார்.

இவரது தந்தையின் பெயர் ரத்துமக ராலகே டேலிஸ் அப்புவாமி தாயாரின் பெயர் இசோ ஆமி. சோமாராம தேரர் தல்துவ இயல பாடசாலையிலும் தெஹியோவிட்ட பாடசாலையிலும் ஆரம்ப கல்வியை பெற்றார். 1929ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதி சாதாரண மனிதராக இருந்த இவர் தனது 14வது வயதில் கண்டியில் துறவறம் பூண்டார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று காலையில் அவர் தனது ரோஸ்மிட் பிளேஸ் இல்லத்தின் முன்விராந்தையில் அமர்ந்து தன்னை சந்திக்க வருபவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். விராந்தைக்குள் ஒரு சிலரே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பேசி முடிந்த பின்னரே மற்றவர்கள் விராந்தைக்குள் அனுமதிக்கப் பட்டனர். சோமாராம தேரரும் அமைதியாக தனது சந்தர்ப்பம் கிடைக்கும் வரை காத்திருந்தார்.

பிரதம மந்திரி பண்டாரநாயக்க நம் நாட்டு மக்கள் அவரது அரசாங்கத்தைப் பார்த்து எங்கள் அரசாங்கம் என்று அழைப்பதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவார். சோமாராம தேரரின் வலது பக்கத்தில் இன்னுமொரு பெளத்த பிக்கு அமர்ந்திருந்தார். இவர் பொலன்னறுவையைச் சேர்ந்த ஆனந்த தேரர் என்பவராவார். தன்னை சந்திக்க வரும் தேரர்களைப் பார்த்தவுடன் பண்டாரநாயக்க அவர்கள் எழுந்து அவருக்கு வணக்கம் தெரிவித்து அமர்ந்து கொள்வார். உங்களுக்கு என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பிரதம மந்திரி கேட்ட போது சோமாராம தேரர் சற்று பதற்றமாக இருந்ததாக அவருக்கு அருகில் இருந்த ஆனந்த தேரர் பொலிஸாருக்கு அறிவித்தார்.

ஆயுர்வேத கல்லூரிக்கு சில உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சோமாராம தேரர் கூறிய போது அது ஒரு சின்ன விசயம். நான் சுகாதார அமைச்சர் ஏ.பி.ஜயசூரியவுக்குக் கூறி அந்த உதவியை உங்களுக்கு செய்து தருகிறேன் என்று சொன்னார். அப்போது நேரம் காலை 9.45 தனது கையில் இருந்த பைலை திறந்து ஏதோ தேடுவதைப் போன்று அவர் இருந்ததாக ஆனந்த தேரர் கூறுகிறார். அந்த சந்தர்ப்பத்தில் சோமாராம தேரர் தனது காவி உடையில் மறைத்து வைத்திருந்த சுழல் கைத்துப்பாக்கியை வெளியில் எடுத்து பண்டாரநாயக்காவின் நெஞ்சுப் பகுதியில் வயிற்றிலும் மிக அருகில் இருந்தவாறு சுட்டார். பலத்து சத்தத்துடன் பண்டாரநாயக்கா அப்படியே கீழே சாய்ந்தார்.

பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து தனது அறைக்குள் செல்ல எத்தனித்தார். இந்த சந்தர்ப்பத்தில் சோமாராம தேரர் ஆனந்த தேரோவை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டிய போது அவர் அம்மோ என்று பயந்து அலறி ஓடினார். பிரதம மந்திரியை விரட்டிச் சென்ற சோமாராம தேரர் மேலும் நான்கு தடவை சுட்டார். அதில் ஒரு குண்டு பிரதம மந்திரியின் கையை காயப்படுத்தியது. இன்னுமொரு குண்டு பிரதம மந்திரியை பார்க்க வந்திருந்த ஆசிரியர் குணரத்னவையும் காயப்படுத்தியது. மூன்றாவது குண்டு அங்கிருந்த கண்ணாடி ஜன்னலை உடைத்து நொறுக்கியது. நான்காவது குண்டு வராந்தாவில் இருந்த மலர் ஜாடியை சுட்டு தகர்த்தது.

இவ்விதம் தனது சுழல் துப்பாக்கியில் இருந்த 6 குண்டுகளையும் சோமாராம தேரர் சுட்டுத் தீர்த்தார். துப்பாக்கிச் சூடு கேட்டு அந்த வீட்டின் முற்றத்தில் இருந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தை வீணாக்காமல் வெளியில் சென்ற ஆனந்த தேரர் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் பிரதம மந்திரியை ஒரு பெளத்த பிக்கு சுடுகிறார் என்று கூறினார்.

அதைக்கேட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் சோமாராமரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் அந்த குண்டு அவரது தொடையில் பட்டு காயப்படுத்தியது. தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டவர்களைப் பார்த்து ஆவேசமடைந்த நிலையில் நான் நாட்டையும், சிங்கள இனத்தையும், பெளத்த மதத்தையும் காப்பாற்றுவதற்காகவே பிரதம மந்திரி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment