Wednesday 23 January 2019

K.A.CHOKKALINGA BHAGAVATHAR BORN 1907 - 2002 JANUARY 21




K.A.CHOKKALINGA BHAGAVATHAR 
BORN 1907 - 2002 JANUARY 21



கே. ஏ. சொக்கலிங்க பாகவதர்[1] (பிறப்பு: 1907[2] - இறப்பு: ஜனவரி 21, 2002, வயது 92)[3]) ஒரு பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர். திலோத்தமா, துகாராம், வீடு, இந்தியன், சந்தியா ராகம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

ரம்பையின் காதல் படத்தில் நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர். அதன் பின், பாலு மகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் படங்களில் நடித்த பிறகுதான் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.[
வாழ்க்கைக் குறிப்பு
சொக்கலிங்க பாகவதர் சிறு வயதிலேயே நன்றாகப் பாடக்கூடியவர். இவரது குரல் இனிமையைக் கேட்டு 1921-ல் காளி என். ரத்தினம் தான் நடித்துக் கொண்டிருந்த 'மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி'யில் இவரைச் சேர்த்துவிட்டார். 'சத்தியவான் சாவித்திரி' நாடகத்தில் 'காக்க வேணும் ராமா' எனும் பாட்டை பாடினார். அதன் பின்னர் திருப்பாப்புலியூர், பாண்டிச்சேரி போன்ற இடங்களில் நாடகங்களில் நடித்து, இறுதியில் சென்னை வந்து சேர்ந்தார். 1922-இல் 'மதுரை பால மீன ரஞ்சனி சங்கீத சபை'யில் சேர்ந்து நடித்தார்.[4]

இவருடன் சேர்ந்து நாடகங்களில் நடித்து பின்னர் புகழ் பெற்றவர்களில் எம்.ஜி.ஆர், எம். ஜி. சக்ரபாணி, எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா ஆகியோர் குறிப்படத்தக்கவர்கள்.[4]

பாகவதர் பெயர்
1934 ஆம் ஆண்டு சென்னையில் மியூசிக்கல் புராடக்ஸ் லிமிடெட் (Musical Products Ltd.) என ஒரு கம்பெனி உருவானது. இவர்கள் 10 அங்குல விட்டமுடைய இசைத்தட்டுகளை அறிமுகப்படுத்தினார்கள். வழமையான 78 ஆர்.பி.எம். இசைத்தட்டுகள் 12 அங்குல விட்டம் கொண்டிருக்கும். அவற்றில் மூன்றரை நிமிடம் வரையான பதிவுகளை செய்தார்கள். ஆனால் இந்த 10 அங்குல இசைத்தட்டுகளில் நான்கரை நிமிடம் வரையான பதிவுகளைச் செய்ய முடிந்தது. இந்த இசைத்தட்டுகள் புரோட்காஸ்ட் (Broadcast) என்ற (label) லேபிளைக் கொண்டிருந்தன. இதனால் சாதாரண மக்கள் புரோட்காஸ்ட் ரெக்கார்ட் கம்பெனி என இந்த நிறுவனத்தைக் குறிப்பிட்டனர். இந்த நிறுவனம் தனது முதல் வெளியீடாக ஏழு இசைத்தட்டுகள் கொண்ட சீதா கல்யாணம் என்ற தொகுதியை வெளியிட்டது. 7 இசைத்தட்டுகளும் ஒரு உலோகப் பேழையில் பொதியாக்கப்பட்டு 11 ரூபா 4 அணாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சுதேசமித்திரன் பத்திரிகையில் விளம்பரம் வெளியானது.[5] இந்த சீதா கல்யாணம் இசைத்தட்டுத் தொகுதியிலுள்ள பாடல்களைத் தான் பாடியதாகவும் அதனால் அந்த நிறுவனம் தம்மை பாகவதர் எனப்பெயரிட்டு அழைத்ததாகவும் சொக்கலிங்க பாகவதர் ஒரு தமிழ் இணைய இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.[4]

இவர் நடித்த முதல் திரைப்படம் எஸ். சவுந்தரராஜ ஐயங்கார் எடுத்த 'சம்பூர்ண மகாபாரதம்'.[4]

சன் டிவியில் தொடராக வந்த 'குடும்பம்' உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்தார்.[4]

விருது
இவரது 90 வயதில் தமிழக அரசு கலைமாமணி விருதும், குடியிருக்க வீடும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4]

நடித்த திரைப்படங்கள்
துகாராம் (1938) [6]
ரம்பையின் காதல் (1939)[7]
தானசூர கர்ணா (1940)[8]
வீடு (1988)[9]
சந்தியா ராகம் (1989)[10]
தையல்காரன் (1991) [11]
ஜென்டில்மேன் (1993) [11]
அம்மா பொண்ணு (1993)[11]
சதி லீலாவதி (1995 திரைப்படம்) (1995)[11]
இந்தியன் (1996)[11]
ராமன் அப்துல்லா (1997) [11]
பெரிய இடத்து மாப்பிள்ளை (1997)[11]
வேலை (1998) [11]
Branchie (இத்தாலிய திரைப்படம்) (1999)[12]

கமலஹாசனின் சொந்த தயாரிப்பில் 1995-இல் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடிய “சதி லீலாவதி” படத்தில் ரமேஷ் அரவிந்த்-தின் வயதான தந்தையாக நடித்திருந்தவர் இந்த சொக்கலிங்க பாகவதர். இவர். பழம்பெரும் தமிழ் நடிகர். இவர் இசை நாடக நடிகராகப் பாடியும், நடித்தும் புகழ் பெற்றவர்.

1921-இல் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் காளி என். ரத்தினம் அவர்கள் இவரைப் பற்றி அறிந்து இவரை ‘மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ‘யில் சேர்ந்து கொள்ளச் சொல்லி சேரவும் வைத்தார். அப்போது ஒரு மாத்த்திற்கு ஐந்து ரூபாய் இவருக்கு சம்பளம். ஐந்து ரூபாய் அப்போது பெரிய மதிப்பு மிக்கதாயிருந்தது.

முதன் முதலாக அக்காலத்திய ‘சம்பூர்ண மகாபாரதம்’ படத்தில் ஸ்ரீகிருஷ்ணன் வேடத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார்.

1938-இல் வெளிவந்த “துக்காராம்”, 1939- இல் வெளிவந்த ‘ரம்பையின் காதல்”அல்லது ”யத்ப விஷ்யன்”, 1988- இல் வெளிவந்த ”வீடு” , 1991- இல் வெளிவந்த “சந்தியா ராகம்” மற்றும் “தையல்காரன்”, 1993- இல் வெளிவந்த “ஜெண்டில் மேன்”, இதே ஆண்டில் வெளிவந்த “அம்மா பொண்ணு”, 1996- இல் வெளிவந்த ”இந்தியன்”, 1997- இல் வெளிவந்த “பெரிய இடத்து மாப்பிள்ளை”, 1997- இல் வெளிவந்த “ராமன் அப்துல்லா” போன்ற சுமார் 50 படங்களில் நடித்துள்ளார். 1939 – ஆம் ஆண்டிலேயே ‘ரம்பையின் காதல்’ அல்லது யத்ப விஷ்யன் என்ற படத்தில் நாரதராக நடித்ததற்காகத் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலு மகேந்திராவின் ‘வீடு’ [1989], ‘சந்தியா ராகம்’ படங்களில் நடித்த பிறகுதான் இக்காலத்து ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டார். இந்தப் படங்களில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.

சொக்கலிங்க பாகவதர்
பாலுமகேந்திரா 1989ல் சந்தியாராகம் என்று வயதான சொக்கலிங்கபாகவதர் வார்க்கை பிரச்சனையை மையபடுத்தி ஒரு படம் எடுத்தார்... அது தமிழின் மாற்று சினிமா...

அந்த படம் தேசிய விருது வாங்கியதோடு சரி... அப்படி ஒரு படம் இருக்கின்றது என்பது கூட பலருக்கு தெரியாது... அதுதான் தமிழ் சினிமா...

ஒரு பேட்டியில் இயக்குனர் பாலா... சந்தியாராகம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கும் விழா நடந்து கொண்டு இருந்தது....அப்போது விழாமுடிந்து வெளியே வந்த சொக்கலிங்க பாகவதர் செல்ல ஆட்டோவுக்கு பைசா கூட இல்லாமல் அவர் ரோட்டில் நடந்து போனதாக ஒருபேட்டியில் பாலா சொல்லி படித்ததாக எனக்கு ஞாபகம்....

விருது வாங்கிய கிழக்கலைஞன் தெருவில் நடந்து போனான்.... சொக்கலிங்க பாகவதர் நடித்த வீடு ,சதிலீலாவதி போன்ற படங்களில் அவருடைய கேரக்டர்கள் சிலாகிக்கபட்டன... அனாலும் அதற்க்கான அங்கீகாரம் சரியாக இல்லை என்பதுதான் வருத்தம்

No comments:

Post a Comment