CHIDAMBARAM S.JEYARAMAN,
LENGENDARY SINGER BORN
JANUARY 20,1917-1995 JANUARY 29
சி. எஸ். ஜெயராமன் (20 சனவரி 1917 - 29 சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன.
இளமைக்காலம்
ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன்.
திரைப்படத்துறை பங்களிப்புகள்
நடிகர்
ஜெயராமன் 1917 ஆண்டு தை மாதம் 6 நாள் பிறந்தார்.[1] ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), பூம்பாவை (1944), கிருஷ்ண பக்தி (1948) ஆகிய படங்களில் நடித்தார்.
இசையமைப்பாளர்
உதயனன் வாசவதத்தா (1946), ரத்தக்கண்ணீர் (1954) ஆகிய இரண்டு படங்களுக்குத் தனியாக இசையமைத்துள்ளார். விஜயகுமாரி (1950), கிருஷ்ண விஜயம் (1950) ஆகிய படங்களில் இணை இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
பின்னணிப் பாடகர்
திரைப்படத்துறையில் ஒரு பின்னணிப் பாடகராகவே இவர் புகழ் பெற்றார். இவரது இசைத்திறமை காரணமாக இவர் தமிழிசைச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தமிழில் மட்டுமன்றிச் சில கன்னடப் பாடல்களையும் பாடியுள்ளார்.
சி. எஸ். ஜெயராமன் பாடிய சில பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:[2]
கா கா கா (பராசக்தி 1952) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
நெஞ்சு பொறுக்குதில்லையே (பராசக்தி 1952) - பாடல் : பாரதியார், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
அன்பினாலே (பாசவலை 1956) - பாடல் : அ.மருதகாசி, இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : மார்டன் தியேட்டர்ஸ்
உள்ளம் ரெண்டும் ஒன்று (புதுமைப்பித்தன் 1957) - பாடல் : T.N.ராமைய்யாதாஸ், இசை : G.ராமநாதன், தயாரிப்பு : சிவகாமி பிக்சர்ஸ்
விண்ணோடும் (புதையல் 1957) உடன் பாடியவர் : பி.சுசிலா - பாடல் : ஆத்மநாதன், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
குற்றம் புரிந்தவன் (ரத்தக்கண்ணீர் 1958) - பாடல் : ஆத்மநாதன், இசை : C.S.ஜெயராமன், தயாரிப்பு : நேஷ்னல் பிக்சர்ஸ்
ஈடற்ற பத்தினியின் (தங்கப்பதுமை 1958) - பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி, தயாரிப்பு :ஜீபிடர் பிக்சர்ஸ்
இன்று போய் நாளை (சம்பூர்ண ராமாயணம் 1958) - பாடல் : ஆத்மநாதன், இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : M.A.V பிக்சர்ஸ்
தன்னைத் தானே (தெய்வப்பிறவி 1960) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
அன்பாலே தேடிய (தெய்வப்பிறவி 1960) - பாடல் : உடுமலை நாராயணகவி, இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : கமால் பிரதர்ஸ்
சிரித்தாலும் (களத்தூர் கண்ணம்மா 1960) - பாடல் : கண்ணதாசன், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : AVM
நீ சொல்லாவிடில் (குறவஞ்சி 1960) - பாடல் : R.கிருஷ்ணமூர்த்தி, இசை : T.R.பாப்பா, தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
பெண்ணே உன் கதி (பொன்மாலை 1960) - பாடல் : மாயவநாதன், இசை : R.சுதர்சனம், தயாரிப்பு : மேகலா பிக்சர்ஸ்
வண்ணதமிழ் (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி, இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
காவியமா (பாவைவிளக்கு 1960) - பாடல் : அ.மருதகாசி, இசை : K.V.மகாதேவன், தயாரிப்பு : ஸ்ரீ விஜயகோபால் பிக்சர்ஸ்
மறைவு
ஜெயராமன் 1995 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி காலமானார்.
No comments:
Post a Comment