CHIDAMBARAM S.JEYARAMAN, LENGENDARY SINGER BORN JANUARY 20,1917-1995 JANUARY 29
CHIDAMBARAM S.JEYARAMAN, LENGENDARY SINGER BORN JANUARY 20,1917-1995 JANUARY 29 சி. எஸ். ஜெயராமன் (20 சனவரி 1917 - 29 சனவரி 1995) எனப் பொதுவாக அறியப்படும் சிதம்பரம் சுந்தரம்பிள்ளை ஜெயராமன் ஒரு நடிகரும், இசையமைப்பாளரும், பிரபல திரைப்படப் பாடகரும் ஆவார். இவர் பாடிய பாடல்கள் 1940க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான பல திரைப்படங்களில் இடம்பெற்றன. இளமைக்காலம் ஜெயராமன் கோயில் நகரமான சிதம்பரத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சுந்தரம்பிள்ளை பிரபலமான கர்நாடக இசை வாய்ப்பாட்டுக் கலைஞர். இவர் தி. மு. க தலைவரும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதியின் அண்ணனும், மு. க. முத்துவின் தாய்மாமனும் ஆவார். தொடக்கத்தில் கருணாநிதி ஒரு திரைக்கதை எழுத்தாளராக சினிமாவில் அறிமுகமாவதற்குக் காரணமாக இருந்தவர் ஜெயராமன். திரைப்படத்துறை பங்களிப்புகள் நடிகர் ஜெயராமன் 1917 ஆண்டு தை மாதம் 6 நாள் பிறந்தார்.[1] ஜெயராமன், கிருஷ்ண லீலா (1934), பக்த துருவன் (1935), நல்ல தங்காள் (1935), லீலாவதி சுலோச்சனா (1936), இழந்த காதல் (1941), ப...