B.NAGI REDDY, FOUNDER OF AMBULI MAMA,MAGAZINE, FILM PRODUCER BORN 1912 DECEMBER 2
B.NAGI REDDY, FOUNDER OF AMBULI MAMA,MAGAZINE, FILM PRODUCER BORN 1912 DECEMBER 2 பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (ஆங்கிலம்:Bommireddy Nagi Reddy) (டிசம்பர் 2 1912 - பெப்ரவரி 25 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்[1]. வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். வரலாறு[மூலத்தைத் தொகு] நாகிரெட்டி ஆந்திர மாநிலத்தில் கடப்பை மாவட்டம் பொட்டிம்பாடு என்ற கிராமத்தில் டிசம்பர் 2, 1912-ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் பிறகு சென்னையில் குடியேறியது. இவருடைய தந்தை, வெளிநாடுகளுக்கு வெங்காயம் முதலான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார். இந்த தொழிலில் நாகிரெட்டி தமது 18-வது வயதில் ஈடுபட்டார். ஒரு முறை, வெங்காயம் ஏற்றிச்சென்ற கப்பல் கடலில் மூழ்கியதால் நட்டம் ஏற்பட்டது. எனவே 'பி.என்.கே' என்ற அச்சகத்தை தொடங்கினா...