Showing posts with label RAJAN. Show all posts
Showing posts with label RAJAN. Show all posts

Sunday, 15 May 2022

RAGHURAM RAJAN ,GOVERNOR, RESERVE BANK OF INDIA

 


RAGHURAM RAJAN ,GOVERNOR, 

RESERVE BANK OF INDIA




பணமதிப்பிழப்பின் போது தடைசெய்யப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 15லட்சம் கோடி. அவை அனைத்தும் திரும்பி வந்து விட்டதாக பொய் கூறினோம். ஆனால் உண்மையில் வந்தது 10 லட்சம் கோடிகளே.

நாங்கள் ஏன் பொய் சொன்னோம் என்றால் மீதமுள்ள 5 லட்சம் கோடிகளும் யார் வைத்திருக்கிறார்கள் அவர்களின் அடுத்த நகர்வு என்ன என்பதை கண்காணிக்க தான். 

இந்த உண்மையை வெளிக்கொண்டுவரவே மத்திய அரசுக்கும் எனக்கும் மோதல் போக்கு இருப்பது மாதிரி நாடகத்தை ஏற்படுத்தி நான் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை விட்டு விலகியது. மொத்த பணமும் எங்கிருக்கிறது என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்.இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு புரோக்கரை பிடித்து 5 லட்சம் கோடியையும் பாகிஸ்தானில் பத்திரபடுத்தி வைத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவை அனைத்தையும் செல்லத்தக்க நோட்டாக மாற்றிவிடுவார்கள்.

அதுமட்டுமல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக நாசிக்கில் இருந்து இந்தியபணத்தை அச்சடிக்கும் மெஷினை பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெற்றிருக்கின்றனர். இதற்காக ப.சிதம்பரத்திற்கு மட்டும் 10 கோடி ரூபாய் அன்பளிப்பு கிடைத்திருக்கிறது. 




இந்த மிஷினை வைத்து பாகிஸ்தானில் இந்திய பணத்தை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கு கள்ளபணத்தை அடித்து இந்தியாவிற்குள் மாற்ற திட்டம் போட்டிருந்தார்கள். ரகசிய தகவல் எனக்கு கிடைத்தது. அதை பிரதமர் மோடியிடம் எடுத்து கூறினேன். சற்றும் தாமதிக்காமல் 500,  1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து விட்டார். வேறு யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வேகம் உள்ளவர் அவர்.

அந்த 8லட்சம் கோடி ரூபாயும் நாட்டிற்குள் ஊடுருவியிருந்தால் இந்நேரம் சோமாலியாகவா மாறியிருக்கும்.ஆக கள்ளப்பணம் மொத்தம் 13 லட்சம் கோடி பணம் நாட்டிற்கு வெளியே தயாராக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அது மீண்டும் நாட்டிற்குள் வரும். நாடு வீழ்ச்சி அடையும்.

பணமதிப்பிழப்பு தொடர்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது

ரகுராம்ராஜன்

RBI முன்னாள் கவர்னர்...

Tuesday, 22 June 2021

RAGHURAM RAJAN WHO ?

 



RAGHURAM RAJAN WHO ?



அனல் கக்கும் பேச்சு.. நேர்கொண்ட பார்வை.. யார் இந்த ரகுராம் ராஜன்

மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை மோசமான யோசனை என்றார் ரகுராம் ராஜன்

FOLLOW US: 

ஆர்.பி.ஐ ஆளுநர் பதவி என்பது ஒன்றும் வாக்கு வங்கியை குறிவைப்பதோ, பேஸ்புக்கில் லைக் வாங்குவதோ அல்ல, மக்களுக்கு பணத்தின் மீது நம்பிக்கையை வர வைப்பதே என் பணி, எல்லா முடிவுகளையும் புகழ்வது என் வேலை அல்ல, மாறாக விமர்சனத்துக்கு ஆளாவதும் அதில் இருந்து கற்றுக் கொள்வதுமே என் நோக்கம்” என மோடி அரசுக்கு எதிராக ஒருவர் பேசினார். அவர் பெயர் ரகுராம் ராஜன். இந்தியாவின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் Research and Analysis wing எனப்படும் ரா அமைப்பு அதிகாரியின் மகன். அப்பாவின் வேலை காரணமாக பள்ளிக்கல்வியை உலகத்தின் பல நாடுகளில் கற்றுக் கொண்ட குழந்தைதான் ரகுராம் ராஜன். ஒரு கட்டத்தில் போபாலில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு டெல்லி பொதுப் பள்ளி, ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் என காலம் ஓடியது. பொருளாதாரம் குறித்த பார்வை ராஜனுக்கு அதிகம். அதனால் அது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 



அனல் கக்கும் பேச்சு.. நேர்கொண்ட பார்வை.. யார் இந்த ரகுராம் ராஜன்


1991-ஆம் ஆண்டில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியாக பணியை தொடங்கினார் ராஜன். அவரின் கற்பித்தல் திறனையும் நிதி தொடர்பான அறிவையும் பார்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முழுநேர பேராசிரியாக நியமனம் செய்தது. அப்போதே ஸ்டாக்ஹாம் பல்கலைகழகத்திலும் சிறப்பு பேராசிரியராக பணியாற்றினார். அவரது பொருளாதாரம் சார்ந்த பார்வைகள் பல்வேறு உலக நாட்டு அறிஞர்களை ஈர்த்தது, இந்தியா உட்பட. அப்போதுதான் சர்வதேச நிதி நிலையம் என அழைக்கப்படும் ஐ.எம்.எப். ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தது. அதன் கொள்கைகளை பலரும் விமர்சிக்க தொடங்கியிருந்தார்கள். என்ன செய்வதென்றே யாருக்கும் தெரியவில்லை. யாரையாவது இழுத்து வந்து சரிசெய்தே ஆகவேண்டும் என்ற நிலை. அப்போது ஐ.எம்.எப். துணை தலைவராக இருந்த ஆனி க்ரூகர் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அது ரகுராம் ராஜன் எழுதிய saving Capitalism from the Capitalists, அதாவது முதலாளிகளிடம் இருந்து முதலாளித்துவத்தை காப்பது எப்படி? என்பதே அந்த புத்தக்கம். 


அதில் ராஜன் சொன்ன கருத்துகளால் ஈர்க்கப்பட்ட ஆனி, அவரை சந்திக்க எண்ணினார். ஐ,எம்.எப். சந்தித்து வரும் சிக்கலை கூறினார். ஆனால் தனக்கு உலகத்தின் நிதி மேலாண்மையை கவனிக்கும், இத்தனை பெரிய அமைப்பின் சிக்கலுக்கு வழி ஏற்படுத்த முடியுமா என தெரியவில்லை என்றார் ராஜன். அதெல்லாம் முடியும் என்று ரகுராம் ராஜனை ஐ.எம்.எப். அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக நியமித்தார்கள். மிக இளம் வயதில் அந்த பதவியை அடைந்தவர் ராஜன் மட்டுமே. 2003 முதல் 2006 வரை அந்த பதவியில் இருந்த ராஜன் செய்தவை எல்லாம் அசாத்தியமானவை. ஐ.எம்.எப். வைத்திருந்த கொள்கைகளை எல்லாம் விமர்சனத்துக்கு ஆளாக்கினார், எப்போதும் குறுகிய கால டார்க்கெட் வையுங்கள் என்றார். சீனா , இந்தியா போன்ற 100 கோடி மக்களை கொண்ட நாடுகளின் பொருளாதார தன்மையை ஆய்வு செய்யுங்கள் என்றார். அதற்கான முழு வடிவத்தையும் கொடுத்தார். அமைப்பு முழுக்க ராஜனுக்கு ஆதராவாக நின்றது. மீட்டார் ராஜன்.  விமர்சனத்துக்கு ஆளான ஐ.எம்.எஃப். பாராட்டை பெற்றது. 


ஒரு இந்தியரை உலகமே பயன்படுத்தும்போது நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என எண்ணினார் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங். ஒரே கால், இந்தியா திரும்பினார் ரகுராம் ராஜன். திட்டக்குழு துணைத்தலைவரானர், பொருளாதார ஆலோசகரனார். கடைசியில் ஆர்பிஐ ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார் ரகுராம் ராஜன். பலருக்கும் அவரது நியமனம் நம்பிக்கையை கொடுத்தது. ஏனெனில் ராஜனின் பார்வை எப்போது நடுத்தர மக்களை உயர்வடைய செய்யும் கொள்கைகளாக இருக்கும் என்ற நம்பிக்கையே அதற்கான காரணம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மோடி அரசு 2014-ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தது. அப்போது முதல் ராஜனுக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமானது. மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி அரசு அறிமுகம் செய்தபோது அதனை கடுமையாக எதிர்த்தார். சீனாவை பார்த்து இதனை காப்பி அடிக்காதீர்கள், அவர்கள் வேறு, நாம் வேறு, நாம் பெரிய சந்தை என்றாலும் பொருள்களை உருவாக்கும் Manufacturing துறையில் மட்டுமே கவனம் செலுத்துவது தேவையற்றா சிக்கலைத்தான் உருவாக்கும் என எச்சரித்தார். 


அதே போல், நாடு முழுக்க சகிப்புத் தன்மை குறைந்து விட்டது என்ற சர்ச்சை வெடித்த போது அதற்கு தன் தரப்பில் எண்ணெய் ஊற்றினார் ரகுராம் ராஜன். இந்தியா போன்ற நாடுக்கு சகிப்புத்தன்மை முக்கியம், சகிப்பில்லா நாடு பொருளாதாரத்தை பாதிக்கும் என வெளிப்படையாக சொன்னார் ராஜன். இதற்கு ஆளும் மோடி அரசில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இப்படி சென்று கொண்டிருக்கும் போது அதிக கடன் வாங்கும் பெரும் முதலாளிகளுக்கு கடன் விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு சொன்ன போது வெடித்துச் சிதறினார் ராஜன். இது ஏழைகளை வயிற்றில் அடிக்கவும் நடுத்தர மக்களை தெருவில் நிறுத்தவும் செய்யும் என்றார்.  மோடி அரசின் பல நிதி சார்ந்த கொள்கைகளை தொடர்ந்து எதிர்த்தார். பெரும்பாலான திட்டங்கள் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவு என நேரடியாக விமர்சித்தார். 



அனல் கக்கும் பேச்சு.. நேர்கொண்ட பார்வை.. யார் இந்த ரகுராம் ராஜன்


கடைசியாக ராஜனின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இப்போது வரை ராஜன் ராஜினாமா செய்தாரா இல்லை அவரது பதவி முடிவுக்கு வந்ததா என்ற பேச்சுகள் அடங்கிய பாடில்லை. ஆனால் பதவிக் காலத்திலும் அதற்கு பின்னும் ராஜன் பேச்சுகளும் அவரது ஆலோசனைகளும் அனல் கக்குபவை. ராஜனை மீண்டும் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிப்பார்களா என பலரும் எதிர்பார்த்தபோது “பங்குச்சந்தை சரிவுக்கு ராஜன்தான் காரணம், அவருக்கு ஒன்றும் தெரியாது” என விமர்சித்தார் உலகம் அறிந்த பொருளாதார மேதை என தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் சுப்ரமணியன் சுவாமி. 


ஜெயலலிதாவின் சாய்ஸ்.. முதல்வர் ஸ்டாலின் அணி.. எஸ்தர் டஃப்லோ கதை..!


ஆனால், மீண்டும் சிகாகோ , பேராசிரியர் பதவி என கிளம்பினார் ராஜன். பொருளாதாரம் சார்ந்து பல ஆய்வுகளை மேற்கொண்ட ராஜன், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றை மோசமான யோசனை என்றார். மிக வேகமாக வளர்ந்து வந்த இந்தியாவின் பொருளாதாரத்தை வெற்றிகரமான இரண்டு முடிவுகளால் மோடி நிறுத்தினார் என விமர்சித்தார். அதன் பின் பெரிதாக எங்கும் வராத ராஜனைத்தான் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் தனது அணியில் சேர்த்துள்ளார். தவ்ளூண்டு ஆங்கராக தமிழ்நாடு எனும் கப்பலை தாங்குவார் ராஜன் என நம்பியிருக்கிறார் ஸ்டாலின்.

சுதந்திரப் போராட்டத்துக்குப்பின் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.. பல இடங்களில், பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவ அரசு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டெல்லியில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நேற்று நடந்த காணொலி சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
 Powered by FatChilli Ads

கரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவுக்கு கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா சந்தி்க்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.


கரோனா முதல் அலை இந்தியாவில் தாக்கும்போது, போடப்பட்ட லாக்டவுனால் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும் போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும்.
கரோனா வைரஸின் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களுக்காக மக்களுக்கு உதவ அரசு இல்லாமல் இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை, அரசு இயந்திரம்வேலை செய்யவில்லை.
கரோனா பெருந்தொற்று முடிந்தபின் நாம் சமூகத்தை நோக்கி கேள்வி கேட்காவிட்டால், மிகப்பெரிய சோகத்தை இந்த பெருந்தொற்று விட்டுவிட்டுச் செல்லும். இந்தப் பெருந்தொற்று கடந்து செல்லும்போது, அரசாங்கங்கள் கூட தோல்வி அடைந்து, நம்பிக்கையற்ற சூழலுக்கு செல்லும் என நான் நம்புகிறேன்.இந்த பெருந்தொற்று காலம் நாம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது, எந்த ஆணும், பெணும் தனித்து தீவில்விடப்படவில்லை.
சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல், வெளிப்படையாக இருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும்.நான் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி டெல்லி ஐஐடியில் பேசியது அரசுக்கு எதிரானது அல்ல. ஆனால், நான் பேசியது பலநேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
2015ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி டெல்லி ஐஐடியில் ரகுராம் ராஜன் பேசுகையில் “கருத்துக்களுக்கான சூழலை மேம்படுத்துவதற்கு சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை அவசியம். எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும் உடல் ரீதியான தீங்கு அல்லது வாய்மொழி அவமதிப்பு அனுமதிக்கப்படக்கூடாது. பேச்சு சுதந்திரம், விமர்சிக்கும் சுதந்திரம் நமக்கு அவசியம். 21ம் நூற்றாண்டுக்கு இது நம்மை தயார் படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார்.

Wednesday, 3 February 2021

RAGHURAM RAJAN FORMER RBI GOVERNOR BORN 1963 FEBRUARY 3

 


RAGHURAM RAJAN FORMER 

RBI GOVERNOR BORN 1963 FEBRUARY 3



ரகுராம் கோவிந்தராஜன் (பிறப்பு : பிப்ரவரி 3 ,1963 ) ஒரு இந்தியப் பொருளியல் வல்லுநர் ஆவார். இந்திய ரிசர்வ் வங்கியின் 23 ஆவது ஆளுநராக இருந்தார். செப்டம்பர் 5, 2013இல் டி. சுப்பாராவை அடுத்து இப்பதவியில் 23 ஆவது ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இப்பதவியை ஏற்பதற்கு முன் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2] இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 2008 இல் இவரை இந்திய அரசின் கவுரவப் பொருளாதார ஆலோசகராக நியமித்தார். 2003 முதல் 2007 வரை அனைத்துலக நாணய நிதியத்தில் முதன்மைப் பொருளியலாளராக இருந்துள்ளார்.


இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் பன்னாட்டு செட்டில்மென்டு வங்கியின் துணைத்தலைவராக அமர்த்தப்பட்டார்.[3]



இவரது பெற்றோர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள். இவரின் தந்தை தில்லியில் நடுவண் அரசில் வெளியுறவுத் துறையில் பணியாற்றியவர். ரகுராம் ராஜன் போபாலில் பிறந்து, தில்லியில் வளர்ந்து படித்தார்.

இன்று இந்தியா முழுதும் பேசப்படும் நபர் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்தான்.  இரண்டாவது முறை பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று அவர் சொன்னதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் அவர் மீது விழுந்திருக்கிறது.


யார் இந்த ரகுராம் ராரஜன்?


தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட பொருளாதார வல்லுனரான ராஜன் 2008 உலக பொருளாதார சரிவை மிக சரியாக கணித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார் .  மட்டும் இல்லாமல் உலக பொருளாதார இயக்கமான IMF இல் மிகக்குறைந்த வயதில் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய பெருமை உடையவர்.


ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன்

2013 இல் உலகத்தில் பல நிறுவனங்கள் கோடி கணக்கில்  சம்பளம் கொடுக்க தயாராக இருந்த போதும் அதை விட்டு விட்டு இந்திய பொருளாதரத்தை நிர்ணயிக்கும் முக்கியமான  RBI governor பதவியை ஏற்றுக்கொண்டார்.அவர் செய்த முக்கியமான பணிகள்


1) அவர்  பதவி ஏற்ற பொழுது நம் பொருட்களின் விலைவாசியை குறிக்கும் பணவீக்கம் 11 சதவிதத்துக்கு மேல் இருந்தது அதை பாதிக்கு மேல் குறைத்து உள்ளார்.


2) இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை 25 லட்சம் கோடி(3.6 பில்லியன் அமெரிக்கா டாலர் ) அளவுக்கு உயர்த்தி உள்ளார்.


3) இந்தியா வங்கி துறையில் வார கடன்கள் மிகவும் அதிகமாக உள்ளதை சரி செய்யும் துணிச்சாலான நடவடிக்கைகளில் இறங்கினார் (Banks asset review).


4) இந்திய பொருளாதாரம் மிக சிறந்த ஒரு நிபுணரின் கையில் உள்ளது என்று உலக நிதி நிறுவனங்கள் முதலீடு செய்யும் சூழலை உருவாக்கினார் .


இது எல்லாவிற்றுக்கும்  சிகரம் வைத்ததது போல  2016 அம் ஆண்டின் உலக முக்கியத்துவம் வாய்ந்த 100 நபர்களில் ஒருவராக Time நாளிதழால் தேர்வு செய்ய பட்டார்.


இவர் இப்போது பதவியை நீட்டிப்பு செய்ய விரும்பவில்லை என்று சொல்ல முக்கியமான காரணங்கள் .



1.துணிச்சலாக தனது முடிவுகளை எடுக்க கூடிய ராஜனின் செயல்கள் இந்தியாவில் உள்ள பல முறைகேடாக கடன் பெற்ற தொழிலதிபர்களின் வயிற்றில் புளியை கரைத்தது.அவர்கொடுத்த அழுத்தம் மூலமாக  வங்கிகள் கொடுக்கப்பட்ட வாரா கடன்களை வசூல் செய்ய கிளம்பின.முன் போல் இல்லாமல் பெரும்   கடன் வைத்துள்ள பணக்காரர்களிடமும் கடன் வசூல் செய்ய கிளம்பின.இதனால் தான் விஜய் மல்லயா,அணில் அம்பானி  போன்ற முறையில்லாமல்  கடன் வைத்துள்ள   முதலாளிகளுக்கு  நெருக்கடி உருவானது.விஜய் மல்லயா நாட்டை விட்டு ஓடினார்.அம்பானி போன்றோர் தங்கள் சொத்துக்களை விற்க வேண்டிய சூழ்நிலை உருவானது.இவர்கள் அரசியல்வாதிகள் மூலமாக  ராஜனுக்கு நெருக்கடி  கொடுக்க  தொடங்கினர்.


2.அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்ட தயங்காத ராஜனின் செயல்பாடுகள் அரசியல்வாதிகளை பயம் கொள்ள செய்தது. மோடியின் “Make in India” வில் உள்ள குறைகள் போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியது மற்றும்   தொழில் அதிபர்கள் எளிதாக கடன் பெற வங்கி வட்டி விகிதத்தை குறைக்க சொல்லிய போது போது அவ்வாறு செய்வது விலை வாசியை உயர்த்தும் மற்றும் ஏழை ,நடுத்தர வர்க்கத்தை வர்கத்தை பாதிக்கும் என்று அவர் மறுத்தது அரசியல் வாதிகளை கோபம் செய்ய தொடங்கியது .


சுப்ரமண்யன் சுவாமி

சுப்ரமண்யன் சுவாமி

3.இவரால் பாதிக்கப்பட்ட பெரும் பண முதலைகள் சுப்ரமணியன் ஸ்வாமி மூலமாக காய் நகர்த்த தொடங்கினர்.ஸ்வாமி ராஜன்  ஒரு தேச துரோகி   என்று வெளிப்படையாக பிரதமருக்கு கடிதம் எழுதினார்.


இதன் தொடர்ச்சியாக மனம் வெறுத்த ராஜன் ,தான் செப்டம்பர் மாதத்திக்கு பிறகும் தான் விரும்பும் பேராசிரியர் பணிக்கு திரும்ப செல்வதாக அறிவித்து உள்ளார்.


ராஜன் போன்ற திறமைசாலிகள் இந்தியாவை விட்டு  வெளியேறுவது இந்தியாவுட்கு பெரும் இழப்பு என்று அமர்த்தியா சென் போன்ற பல பொருளாதார மேதைகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.வரும் காலங்களில் இந்தியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் கருத்து தெரிவித்து உள்ளனர்.


எது எப்படியோ இந்திய பண முதலைகள் மற்றும் சுப்ரமணியன் ஸ்வாமி போன்ற அரசியல் தரகர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கி  உள்ளது.


இதுதான் நம் தேசத்தின் அவல நிலை!


கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அடிமட்ட அளவில் மிகவும் துணிச்சலான சீர்த்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், லிங்க்டுஇன் வலைதளத்தில் நடந்த உரையாடலில் தெரிவித்தார்.


எம். கதிர்


கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு அடிமட்ட அளவில் மிகவும் துணிச்சலான சீர்த்திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், லிங்க்டுஇன் வலைதளத்தில் நடந்த உரையாடலில் தெரிவித்தார்.அப்போது பேசிய அவர், “ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ்ஷீட்டை விரிவுபடுத்துவதற்கான இடம் "எல்லையற்றது" அல்ல. பணவீக்கத்தைக் கண்காணிப்பதில் ரிசர்வ் வங்கி அதிகம் கவனம் செலுத்தவேண்டும். துணிச்சலான சீர்திருத்தங்கள் மூலம் மிருக பலத்தைப்போன்ற உத்வேகம் உருவாக்கப்படவேண்டும். வேளாண் துறையில் அறிவிக்கப்பட்ட சில சாத்தியங்களைப் பார்க்கமுடிகிறது. ஆனால் அதைவிட அதிகமாக நமக்குத் தேவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.“அடுத்த சில ஆண்டுகளில் செய்தால், வெறும் பேச்சாக அல்லாமல், உண்மையிலேயே அடிமட்ட அளவில் செயல்படுத்தினால் நமக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன” என்று நம்பிக்கை அளிக்கும் ரகுராம் ராஜன், "நாம் பேசிக்கொண்டே சிறிய அளவில் செயல்களைத் தொடர்ந்தால், நாம் நழுவிவிடுவோம் என்றே நினைக்கிறேன், மெதுவான வளர்ச்சியின் விளைவுகளைக் கண்டு பயப்படுகிறேன்.  இன்று நமக்கு வலிமையான, நீடித்த, புத்திசாலித்தனமான நடவடிக்கையே தேவைப்படுகிறது” என்றும் எச்சரிக்கிறார்.  


தற்போது ரகுராம்ராஜன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் கற்பித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


Sunday, 26 July 2020

A.V.M. RAJAN ,TAMIL ACTOR PRODUCER,PRIEST BORN 1935 JULY 26





A.V.M. RAJAN ,TAMIL ACTOR PRODUCER,PRIEST 
 BORN 1935 JULY 26






ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.70 வதுகளின் இறுதியிலும் 80 களிலும் வந்த தமிழ் சினிமாவில் மிக மோசமான சினிமாக்களை கொடுத்ததில் சிவாஜி கணேசனின் பங்கும் அதிகம். தில்லான மோகனாம்பாள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்று பல படங்களில் மிக சிறப்பாக நடித்து ‘நடிகர் திலகம்’ என்று பெயர் பெற்ற அவருக்கு எதிராக, அவரே வைத்துக் கொண்ட சூனியங்களுக்கு பலபெயர்கள் உண்டு. அதில் குறிப்பாக ஒன்றுக்கு பெயர் ‘லாரி டிரைவர் ராஜாகண்ணு.’

சண்முகசுந்தரம், அவரது மேடைப் பெயரால் அறியப்பட்ட ஏ.வி.எம். ராஜன், (26 ஜூலை 1935) 1960 கள் மற்றும் 1970 களில் தீவிரமாக செயல்பட்ட தமிழ் சினிமாவில் ஒரு முன்னாள் இந்தியர். புதுக்கோட்டையில் பிறந்த சண்முகசுந்தரம் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தாலும் சினிமாவில் சேர மிகவும் ஆர்வமாக இருந்தார். [1] கிறிஸ்டியன் ஸ்வீடன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் அவரது உயர்நிலை. அவரது பெற்றோர் அவரை ஒரு போலீஸ் அதிகாரியாக பார்க்க விரும்பினர்.

அவர் தேர்வு எழுத மெட்ராஸுக்கு வந்தார், ஆனால் தேர்வுக்கு அமரவில்லை. 14 வயதில் இடது கை முறிந்தவலி தாங்க முடியாததால் பரீட்சை எழுத முடிய வில்லை .அதற்கு பதிலாக, ராஜ் பவன் கிண்டி சென்னையில் பணிபுரிந்தபோது, ​​சினிமாவில் தனது அதிர்ஷ்டத்தை ஒவ்வொரு திரைப்பட நிறுவனத்தின் கதவுகளையும் தட்டி சிறந்த வருமானத்தை ஈட்ட முயன்றார். நீண்ட காலமாக, அயிராம் காலத்து பயிரு திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறுவதன் மூலம் அவரது அயராத முயற்சிகள் பலனளித்தன, அதில் அவர் 'ராஜா பி.ஏ.' என்று அறிமுகப்படுத்தப்பட்டார். விரைவில், ஏ.வி.எம் திரைப்படமான நானும் ஓரு பென்னிலும் நடிக்க அவர் கையெழுத்திட்டார். [2]
எஸ்.எஸ்.ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நானும் ஒரு பெண் என்ற ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ராஜன் நடித்தார். எனவே அவர் 'ஏ.வி.எம்.' ராஜன்ஆனார் . அதே படத்தில் தமிழ் நடிகை புஷ்பலதா .ஒரு ஜோடி ., பின்னர் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பல படங்களில் ஒரு ஜோடியாக நடித்தனர், இதில் கற்பூரம் (1967), சிறந்த நடிகருக்கான தமிழக மாநில திரைப்பட விருதை வென்றார். ஏ.வி.எம்.ராஜனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மூத்த மகள் மஹாலட்சுமி 80 - 90 களில் ஒரு நடிகை. ராஜன் பின்னர் 1988 முதல் ஒரு முழுநேர பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ
போதகரானார் [3] பின்னர் அதன் பின்னர் திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவரது மனைவி புஷ்பலதா பிறப்பால் கத்தோலிக்கர். இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். ராஜனின் மாற்றத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரும் முழுநேர ஊழியத்தில் பணியாற்றி வருகின்றனர்
அந்தப் படத்தின தயாரிப்பாளர், நடிகர் ஏ.வி.எம். ராஜன். தீவிர இந்து மத உணர்வாளராக இருந்த, முருகன் அடிமை ஏ.வி.எம். ராஜனையே, இயேசுவின் அடிமை ஏ.வி.எம். ராஜனாக மதம் மாற வைத்துவிட்டார் சிவாஜி கணேசன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற முறையில், அவர் அடைந்த நஷ்டத்தால், ‘இனி சிவாஜி கணேசன் இருக்கிற இந்து மதத்தில் நான் இருக்க மாட்டேன்’ என்பதுபோல் மதம் மாறி கிறிஸ்டியனா போயிட்டாரு ஏ.வி.எம்.ராஜன்.

ஏ. வி. எம். ராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர், 1960-களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது முதற்படம் நானும் ஒரு பெண். இவருடன் இப்படத்தில் நடித்த நடிகை புஷ்பலதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து பல தமிழ்படங்களில் நடித்துள்ளனர்.

ஜெமினி கணேஷ் சாயலில் சிவாஜி கணேசன் போல நடித்தால் எப்படி இருக்கும். அது தான் AVM ராஜன். 1963ம் ஆண்டு எஸ்.எஸ்.ஆர்-விஜயகுமாரி-ரங்காராவ்-எம்.ஆர்.ராதா நடித்த ‘நானும் ஒரு பெண்’ படத்தில் அறிமுகமானவர் ஏ.வி.எம் ராஜன். அவரிடம் ஒரு ஸ்டைல் இருந்தது. தமிழ் திரை கண்ட பட்டதாரி நடிகர்களில் ஒருவர்.இசை வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர்.
பி.யு.சின்னப்பா,ஜெமினிகணேஷ்,ஏ.வி.எம் ராஜன் மூவரும் புதுக்கோட்டைக்காரர்கள்!
திருமணமாகி குழந்தை உள்ள நிலையிலேயே கடுமையாகப் போராடி திரைக் கதாநாயகனாக வாய்ப்பைப் பெறமுடிந்தது. தனக்கு முன் சினிமாவில் நடித்து, நானும் ஒரு பெண் படத்தில் இவர்’ ஏமாறச்சொன்னது நானோ?’ என பாடி கிண்டல் செய்த புஷ்பலதாவை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
பார் மகளே பார் படத்தில் இவர் நடித்து, பல காட்சிகள் படத்தில் வெட்டப்பட்டன.ஒரே ஒரு காட்சியில் மட்டும் வருவார்.
ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.
பெயர் சொல்லும்படியாக1965ல் ‘ என்ன தான் முடிவு?’ ’வீர அபிமன்யு’ படங்கள்.1966ல் பாலச்சந்தர் படம்’மேஜர் சந்திரகாந்த’ படத்தில் ரஜினிகாந்த் என்ற பாத்திரம். இந்தப்பெயரைத்தான் பின்னால் சிவாஜிராவுக்கு ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில்அறிமுகப்படுத்தியபோது பாலச்சந்தர் வைத்தார்.

,மேஜர் சந்திரகாந்தில்’நேற்று நீ சின்ன பப்பா! இன்று நீ அப்பப்பா!’ இந்தப் பாடல் ஏவிஎம் ராஜன் -ஜெயலலிதாவுக்கு.

1967ல் ’பந்தயம்’ படம் – ஜெமினியுடன் இணைந்து நடித்தார்- இந்த படம் ஏ.வி.எம். ராஜனை உயர்த்தியது.பூரிப்பான அந்த முகத்துடன் ‘இரவு நடக்கின்றது என் இதயம் மலர்கின்றது.’ பாடலுக்கு அவர் நடிப்பு ரொம்ப பிரமாதமாக இருக்கும்.
’கற்பூரம்’ படத்தில் புஷ்பலதாவும் இவரும் அற்புதமாக நடித்தார்கள். ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா நாடகக்குழுவின் நாடகம் தான் படமானது.
ஏ.வி.எம் ராஜன் -புஷ்பலதா ஜோடி நடித்த சில படங்கள் அவர்களின் சொந்தத்தயாரிப்புகள்.
ஜெமினி கணேஷ்,நாகேஷ் என்று ஜாம்பவான்கள் ‘சக்கரம்’(1968) படத்தில் இருந்தார்கள். ஆனால் ஏ.வி.எம்.ராஜன் அவர்களையெல்லாம் அந்தப் படத்தில் ’ப்பூ் என்று ஊதித்தள்ளி விட்டார் என்று சொன்னால் அது மிகையேயல்ல. அப்படி ஒரு பெர்ஃபாமன்ஸ்!
’துணைவன்’ ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவர் படம்.அதில் கதாநாயகன் ராஜன் முருகபக்தன்.
சிவாஜியுடன் ’கலாட்டா கல்யாணம்’, தில்லானா மோகனாம்பாள்
எம்ஜிஆருடன் ’எங்கள் தங்கம்’
‘அன்னையும் பிதாவும்’
துலாபாரம்’.‘பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே’
பால்குடம் படத்தில் எஸ்.பி.பி யின் “ மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் புன்னகையின் நினைவாக”
மகிழம்பூ, தரிசனம், ஜெயலலிதாவுடன் அனாதை ஆனந்தன்,புட்டண்ணாவின் இருளும் ஒளியும்.
ரவிச்சந்திரனுடன் ‘ஏன்’,’ஜீவநாடி’,புகுந்த வீடு
ஜெய்சங்கருடன் ’மன்னிப்பு’ ’தாய்க்கு ஒரு பிள்ளை’. இந்தப்படங்களில் யார் பெயரை முதலில் போடுவது என்ற ஈகோ பிரச்னை. டைட்டிலில் இருவர் பெயரையும் போடவில்லை.
’திருமகள்’ என்று ஒரு படம். ஜெமினி, பத்மினி்,லட்சுமி யெல்லாம் நடித்த படம். அதில்”உள்ளங்கள் பல விதம், எண்ணங்கள் ஆயிரம்,உறவுகள் வளர்வதற்கு மனம் தானே காரணம்’‘ பாட்டில் சிவகுமார் காலை மாற்றி மாற்றி ஸ்டெப் வைப்பது பார்க்க சகிக்காது. ஆனால் ராஜன் சரணத்தில் ஸ்டைலாக நடந்தவாறே”அழித்தால் அழிவதில்லை ஆனந்த நினைவுகளே”என்ற வரியில் தியேட்டரில் அப்ளாஸ் தூள் பறக்கும்.
நடிகர் சிவகுமார் இந்த வாரக் குமுதத்தில் ராஜன் பற்றி ‘நடிப்புக்கடல்’ என்று சொன்னது வாஸ்தவம் தான். மதுரை மிட்லண்ட் தியேட்டரில் ‘சக்கரம்’ படத்தில் ராஜனின் நடிப்பைக் கண்டு பரவசமான ஒரு அப்பாவி தரை ரசிகர் “செத்தாண்டா சிவாஜி கணேசன். இவன் கிட்ட சிவாஜி பிச்சை வாங்கனும்டா!” என்று உணர்ச்சி வசப் பட்டு கூப்பாடு போட்டார். .
ஏ.எம்.ராஜா மீண்டும் பாட வந்த போது ஜிக்கியுடன் ஜெமினிக்கு ரங்கராட்டினத்தில் ‘முத்தாரமே!உன் ஊடல் என்னவோ.’ பாடினார்.
ராஜனுக்கு புகுந்த வீட்டில்’செந்தாமரையே!செந்தேனிதழே!பொன்னோவியமே!கண்ணே வருக!’
வீட்டு மாப்பிள்ளை யில் ‘ராசி நல்ல ராசி! உன்னை மாலையிட்ட மன்னன் சுகவாசி’ ’மலரே நீ என் மலரல்ல!நான் உன் வண்டல்ல’
தாய்க்கு ஒரு பிள்ளை யில் ‘சின்னக்கண்ணனே! நீ பிள்ளையென நான் தந்தையென ஒரு பந்தம் வந்தது நெஞ்சில் பாசம் வந்தது.’ என்று பல பாடல்கள் ஏ.எம்.ராஜா தான் பாடினார்.
.
சிவாஜியுடன் மீண்டும் ‘சிவகாமியின் செல்வன்’, ’ரோஜாவின் ராஜா’
’சக்கரம்’ படத்தின் வெற்றி இவருக்கு அதே மாதிரி ’போலீஸ் விரட்டுகிற’ சப்ஜெக்ட் உள்ள பல படங்களில் தள்ளிவிட்டதோ என்னமோ. முருகன் காட்டிய வழி,ஒரே சாட்சி என்று பல படங்களில் போலீஸுக்கு பயந்து ‘மகமாயி ம்கமாயி’ என்று அரற்றிக்கொண்டே ஓடி,ஓடி ஒளிந்தே மார்க்கெட்டிலிருந்து ஒழிந்தே போனார்.
.
சித்ரமஹால் கிருஷ்ண மூர்த்தி என்று ஒரு தயாரிப்பாளர். ’செல்லப்பெண்‘ என்று ஒரு சோகப்படம் எடுத்தார்.நம்ம‘Poor man’s SivajiGanesan’ ஏ.வி.எம் ராஜனே தான் கதாநாயகன்!படம் சோகமோ சோகம்.படம் பூரா ஹீரோவின் ஊளை அழுகையும் ’மகமாயி’ மகமாயி’ ஒப்பாரியும். தீபாவளி ரிலீஸ். மதுரையில் சித்ரமஹால் தீபாவளியன்று முதல் காட்சியில் படம் பார்த்து விட்டு வெளியே வந்த ஒரு ரசிகரிடம் ‘படம் எப்படி?’ என்று மெதுவாகத்தான் கேட்டார். ஒரு கொட்டாவி விட்ட அந்த ரசிகர் . சீறியிருக்கிறார்.

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்திக்கு இது ஒரு ஞானம் கிடைக்க வழியேற்பட்டது. அவர் உடனே,உடனே ஒரு முக்கிய தீர்மானம் எடுத்தார். ’இனிமேல் சிரிப்புப் படங்கள் மட்டுமே தான் இந்த சித்ரமஹால் கிருஷ்ண மூர்த்தி எடுப்பான்.’ அதன் பின் அவர் எடுத்த படங்கள் ’தேன் கிண்ணம்’, ’ஹலோ பார்ட்னர்’,’உங்கள் விருப்பம்’ ‘கல்யாணமாம் கல்யாணம்’ஆகியவை.

மார்க்கெட் போன பின் ஏ.வி.எம் ராஜனுக்கு தயாரிப்பாளர் ஆக ஆசை வந்தது.கே பாலாஜி ஸ்டைலில் நாம் சிவாஜி படங்களின் தயாரிப்பாளராக ஜெயிப்போமே என்று. அது தான் சனியன்.
.
சொந்தப்படம் எடுத்துக் கடனாளியாகி சொத்தெல்லாம் கரைந்து போய்விட்டது.
புஷ்பலதா அப்போது படங்களில் துணை நடிகையாகி தேங்காய் சீனிவாசனுக்கும், மேஜர் சுந்தர ராஜனுக்கும் ஜோடியாக நடிக்க வேண்டிய நிலையாகி விட்டது.சரியாக அந்த நேரத்தில் புஷ்பலதா கேட்டார். ;சாமி சாமின்னு அலைஞ்சீங்களே.இப்பவாவது இனிமேலாவது ஏசுவை நம்புறீங்களா?‘ஏவிஎம் ராஜன் – புஷ்பலதா வின் மகள் மகாலட்சுமி (ராணித்தேனி படத்தில் அறிமுகமானவர்) பல கன்னடப் படங்களில் நடித்தார். நடிகர் ராஜீவ் வுடன் ஒரு கட்டத்தில் இணைத்துப் பேசப்பட்டார். பின் ஒரு கன்னட இயக்குனரை காதலித்து திடீர் திருமணம் செய்துகொண்டார். இதுவும் ஏவிஎம் ராஜனை,புஷ்பலதாவை மிகவும் பாதித்திருக்கும்.

பெந்தகோஸ்த் கிறிஸ்தவர் ஆக மாறும் மனநிலை குடும்பம்,தொழில் சரிவை சந்தித்தவர்களுக்கு, பெரு நோயாளிகளுக்கு, மரணதண்டனை,ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சுலபமாக சாத்தியமாகிவிடுகிறது.‘ஏசுவின் அடிமை’ என்றே தன்னைப் பற்றி பிறகு ராஜன் சொல்லிக்கொண்டார். ‘ஏவிஎம் ராஜன் செத்துவிட்டான். நான் இப்போது ஏசுவின் அடிமை.’ராசுக்குட்டி ஷுட்டிங் போது மனோரமா சொன்னார்.”புஷ்பலதா கிறிஸ்தவப் பெண் என்பதால் ராஜனை மாற்றி விட்டாள்.”
நடிகர் கல்யாண்குமாருக்கு திரையுலகில் ஒரே ஒரு நண்பன் யார் தெரியுமா?ஏவிஎம் ராஜன் தான்! ஆனால் ராஜன் peak ல் இருந்த காலங்களில் ஸ்டுடியோவில் கல்யாண்குமாரைப் பார்த்தால்கூட முகத்தைத் திருப்பிக்கொள்வாராம்.பார்க்காத மாதிரி கடந்து போய்விடுவாராம்.ஏசுவின் அடிமை யாக மாறியபோது கல்யாண்குமாரை பார்த்தபோது தேம்பித் தேம்பி அழுதார். கல்யாண்குமாருக்குமே அவருடைய மத மாற்றத்தில் ஒப்புதல் இல்லை. நடிகர் விஜய் வீட்டில் ஏவிஎம் ராஜன் நடத்திய பிரார்த்தனைக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அழைத்துப் போய் இருக்கிறார். ராஜனைப் பார்த்து தன்னை ‘bless’ செய்யுமாறு சொத்தெல்லாம் இழந்துவிட்ட கல்யாண்குமாரும் வேண்டியபோது ராஜன் அழுது தேம்பி’ ரொம்ப நல்ல ஜீவன் என் நண்பன். ஏசுவே என் நண்பனை கடைத்தேற்றும்.ரொம்ப நல்ல ஜீவன்’ என்றாராம்.

ஒரு ஹீரோ நடிகனின் வாழ்க்கை luxury.erotic ஆனது.
ஏவிஎம் ராஜன் தூய வெள்ளையுடையில் வெய்யிலுக்கு ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு எளிமையுடன் நடந்துபோவதைப் பார்த்த கல்யாண்குமார் தான் தன் நண்பனிடம் மிகப்பெரிய transformation
ஏற்பட்டிருப்பதை அன்று உணர்ந்ததாக என்னிடம் கூறினார்.
அழகான ஒரு மனிதன் ஆடி ஓய்ந்தபின் ஆன்மீகத்தில் உண்மையாக மூழ்கி ’சாது’வாகிறதென்பது என்ன ஒரு அற்புத நிகழ்வு!
.

Wednesday, 6 June 2018

FORT CHENJI - DESINGU RAJAN HISTORY





FORT CHENJI - DESINGU RAJAN HISTORY




தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் மன்​னர்கள் ஆட்சி செய்தபோதும் அவர்​களின் பிரமாண்டமான அரண்மனைகள், கோட்டைகள் எதுவும் இன்று நம்மிடம் இல்லை. படையெடுப்பின்போது எரிக்கப்பட்டும் சிதைக்கப்​பட்டும் அழிந்துபோயின என்கிறார்கள். மதுரை ஒரு காலத்தில் மாபெரும் சுற்றுக்கோட்டைகொண்ட நகரமாக இருந்து இருக்கிறது. அதை, 1840-களில் மாவட்டக் கலெக்டராக வந்த பிளாக்பெர்ன் இடித்துத் தரைமட்டமாக்கி புதிய மதுரையை உருவாக்கினார்.

கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே மாளிகை மேடு என்ற இடத்தில் சோழர்களின் அரண்மனை இருந்ததாக சில அடையாளங்கள் காணப்படுகின்றன. மற்றபடி, வட இந்தியாவில் காணப்படுவது போன்ற கோட்டை கொத்தளங்களை தமிழகத்தில் காண முடியாது. வேலூர் கோட்டையும் செஞ்சிக் கோட்டையும்தான் தமிழக அளவில் பெரிய கோட்டைகள். இவையன்றி திருமயம் கோட்டை, திண்டுக்கல் கோட்டை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, மனோரா கோட்டை, ஆலம்பரக்கோட்டை, சங்ககிரி கோட்டை, வட்டக்கோட்டை போன்றவை அளவில் சிறிய, சிதைவுற்ற நிலையில் உள்ள கோட்டைகளாகும்.

செஞ்சியும் வேலூரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகள். வேலூர் கோட்டையில்தான் சுதந்திரப் போரின் முதற்புள்ளியான சிப்பாய் எழுச்சி ஏற்பட்டது.

செஞ்சி, மாவீரன் சிவாஜி காலத்​தில் இருந்தே வீர வரலாறுகொண்டது. புந்தேலர் இனத்தின் தலைவரான சரூப் சிங்கின் மகன் தேஜ் சிங் என்றால் நம்மில் பலருக்குத் தெரியாது. அவர்தான் செஞ்சியை ஆண்ட தேசிங்கு ராஜா. தேஜ் சிங் என்ற பெயரைத்தான் தேசிங்கு என்று எளிமையாக மாற்றி​விட்டனர் மக்கள். ஒரு ராஜபுத்ர வம்சத்தைச் சேர்ந்த மன்னர் தமிழ் மக்களின் மனதில் காவிய நாயகராக விளங்குவது வியக்கத்தக்க ஒன்று.

தேசிங்கு ராஜன் பராக்கிரமத்துடன் செஞ்சியை ஆண்ட கதையைப்பற்றி தேசிங்கு ராஜன் கதைப் பாடல் சுவாரஸ்யமாக விவரிக்கிறது. அதில் பாதிக்கும் மேல் வரலாற்றோடு தொடர்பு இல்லாத கற்பனை. சுவாரஸ்யத்துக்காக உருவாக்கப்பட்டவை. அதில் ஒன்றுதான் தேசிங்கு ராஜன் டெல்லிக்குப் போய் முரட்டுக் குதிரையை அடக்கி வெற்றிகண்டது. வரலாற்றில் அப்படியான சம்பவம் எதுவும் நடக்கவில்லை.

தேஜ்சிங் எப்படி செஞ்சியின் அரசன் ஆனார் என்பதை அறிந்துகொள்ள, புந்தேலர் இனத்தின் வரலாற்றை முதலில் தெரிந்துகொள்வோம். புத்தேல்கன்ட் என்பது இன்றுள்ள மத்தியப் பிரதேசம். இங்கு வாழ்ந்த ரஜபுத்ரர்களுக்கும் மொகலாயர்களுக்கும் நெடுங்காலமாகவே இணக்கமான உறவு இருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள், கார்வார் ராஜபுத்ரக் குடியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் முதல் தலைநகரம் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊரிச்சா. இந்த நகரம் 1531-ல் நிறுவப்பட்டது.


மராத்தியர்கள் சிவாஜி தலைமையின் கீழ் வீறுக்கொண்டு எழுந்து அவுரங்கசீப்பிற்கு குடைச்சல் கொடுத்து பெறிய சாம்ராஜ்யத்தினை நிறுவ முயன்றார்கள் அப்பொழுது மரத்தாவிலிருந்து , கொண்கன் கடற்கரை வழியாக கர்னாடக, தமிழகம் என படை எடுத்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

மராத்தியர்களை அழிக்க வேண்டும் என்று அவர்கள் செல்லும் இடம் எல்லாம் பின் தொடர்ந்து படைகளை அனுப்பி கொண்டு இருந்தார் அவுரங்கசீப். இதற்கிடையே சிவாஜி மறைந்து விட அவரது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டார் ஆனலும் ஒரு நிலைக்கு மேல் சமாளிக்க இயலாமல் தமிழகத்திற்கு தப்பி வந்து செஞ்சிக் கோட்டையில் பதுங்கினார். அவரைப்பிடிக்க பெரும் படையை அவுரங்கசீப் முகமூத்கான் என்பவர் தலைமையில் அனுப்பினா

ஒளரங்கசீப் படையெடுப்பின்போது புத்தேலர் இனத்தைச் சேர்ந்த பலரும் படைப் பிரிவில் பணியாற்றினர். சிவாஜியின் மகன் ராஜாராம், மொகலாயர் படையிடம் இருந்து தப்பி செஞ்சியில் தஞ்சம் அடைந்தார். அவனைப் பிடிக்க சுல்பிகர் கானின் தலைமையில் ஒளரங்கசீப் ஒரு படையை அனுப்பி செஞ்சியை முற்றுகையிடச் செய்தார். எட்டு ஆண்டுகள் நடந்த முற்றுகைப் போருக்குப் பிறகு, 1698-ல் செஞ்சி பிடிபட்டது. அதன் பிறகு, செஞ்சிக் கோட்டையின் தலைவராக சரூப் சிங் நியமிக்கப்பட்டார்.

சரூப் சிங்கின் தந்தை நரசிங்க தேவ். இவர், அக்பரின் நண்பர். அரசியல் காரணங்களுக்காக, அக்பரின் ஆன்மிகக் குருவான அபுல்பாசலைக் கொன்றவர் நரசிங்க தேவ்.

ஒளரங்கசீப் 1707-ல் இறந்தபோது அடுத்து அதிகாரத்தில் யார் அமர்வது என்ற அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அதைப் பயன்படுத்திக்கொண்ட சரூப் சிங், அதுவரை கர்நாடக நவாபுக்குச் செலுத்திவந்த கப்பத் தொகையை நிறுத்திவிட்டார். வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் நாடு பிடிக்கும் ஆசையில் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதை உணர்ந்து, அவர்களையும் பகைத்துக்கொண்டார். ஆகவே, அவரது ஆட்சி நெருக்கடிக்கு உள்ளானது.


முகமூத்கானினின் படையில் குதிரைப்படை தலைவராக இருந்தவர் சொரூப்சிங். 11 மாத கால முற்றுகைக்கு பின்னர் கோட்டையை அவுரங்கசீப்பின் படைக் கைப்பற்றியது, போரில் தீரத்துடன் செயல்பட்டதால் சொருப்சிங்கின் வசம் கோட்டையை ஒப்படைத்து, அந்த பகுதியினை நிர்வகித்து வர சொல்லிவிட்டார் அவுரங்கசீப். இதற்கிடையே அவுரங்கசீப்பும் மறைய ஷாஆலம் என்பவர் தில்லி சுல்தான் ஆனார். சொரூப்சிங் அவரது மனைவி ரமாபாய் அவர்களுக்கு பிறந்த வீரன் தான் தேசிங்கு

1714-ம் ஆண்டு சரூப் சிங் இறந்த பிறகு, அவருடையை மகன் தேஜ் சிங் செஞ்சிக் கோட்டையின் மன்னராக முடிசூட்டிக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 22. தேஜ் சிங்குக்கு, ரூப் சிங் என்ற இன்னொரு பெயரும் உண்டு. தனது தந்தையின் காலத்தில் வாங்கிய கடனுக்கு அநியாய வட்டி போட்டு மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் திருப்பித் தர வேண்டும் என்று, ஆற்காடு நவாப் ஆள் அனுப்பினார். தேஜ் சிங் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு அதுவரை ஆற்காடு நவாபுக்குச் செலுத்தி வந்த கப்பத் தொகையை இனிமேல் செலுத்த முடியாது என்று மறுத்துவிட்டார்.


இதனால் ஆத்திரம் அடைந்த நவாப், லாலா தோடர்மால் தலைமையில் தனது படையை அனுப்பி செஞ்சியில் திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார். தேசிங்கு ராஜா, தானும் போருக்குத் தயாராகி சேத்துப்பட்டில் எதிரியைத் தாக்க முனைந்தார். ஆனால், ஆரணியோடு நவாப் சேர்ந்துகொண்டதால் நிலைமை மாறியது. 1714-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி தேவனூர் என்ற இடத்தில் போர் தொடங்கியது. தேசிங்கு ராஜாவின் கை ஓங்கிய நேரத்தில், சுபாங்கி என்பவன் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு ராஜா வீர மரணம் அடைந்தார்.

தேசிங்கு இறந்தவுடன் அவனது மனைவியும் உடன்கட்டை ஏறிவிட்டார். அவரது நினைவாகவே இராணிப்பேட்டை என்ற ஊர் உருவாக்கப்பட்டது. தேசிங்கு ராஜனின் சமாதியும் அவனது படைத் தளபதி முகம்மது கானின் சமாதியும் நீலாம்பூண்டி கிராமத்தில் இருக்கின்றன என்கிறார்கள் செஞ்சிவாசிகள்.


கடந்த காலத்தின் நினைவுகளை தனக்குள் புதைத்துக்கொண்டு வலிமை வாய்ந்த செஞ்சிக் கோட்டை இன்றும் கம்பீரமாகவே நிற்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மூன்று மலைகளை ஒருங்கேகொண்டது. அவை, முக்கோண வடிவில் அமைந்து உள்ளன. இதில், ராஜகிரி என்ற மலையின் உயரம் 242 மீட்டர். இது அரண் போன்றது. வடக்கே காணப்படுவது கிருஷ்ணகிரி மலை. தெற்கே இருப்பது சந்திரகிரி மலை. இந்த மூன்று மலைகளையும் இணைத்து சுமார் 60 அடி அகலத்தில் உயரமாக சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதன் வெளிப் பக்கத்தில் 80 அடி அகலமான ஓர் அகழியும் அமைந்து இருக்கிறது. இந்தக் கோட்டையின் சுற்றளவு ஐந்து மைல்கள். இந்தக் கோட்டைக்குள் பெரிய கோயில், கல் மண்டபம், சிறைக்கூடம், அகலமான குளம், படை வீரர்கள் தங்கும் பகுதி, நெற்களஞ்சியம் போன்றவையும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.கீழ்க்கோட்டைக்குச் செல்ல இரண்டு வாசல்கள் இருக்கின்றன. வடக்கே உள்ள வாசல் வேலூர் வாசல் என்றும், கிழக்கில் உள்ளது புதுச்சேரி வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டில் எந்த வழியாகச் சென்றாலும், 24 அடி அகலமும் 60 அடி ஆழமும்​கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்ல வேண்டும். மலையின் உச்சியை அடைவதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தக் கோட்டையில் வற்றாத சுனை ஒன்று இருக்கிறது. ராஜ கிரியின் உச்சியில் அரங்கநாதர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. கீழ்க்கோட்டையில் ஒரு பள்ளிவாசலும், வெங்கட்ரமண சுவாமி கோயிலும் இருக்கிறது. கோட்டையில் இருந்து இரண்டரை மைல் தூரத்தில் சிங்கவரம் என்ற ஊர் இருக்கிறது. இங்கே குடைவரைக் கோயில் உள்ளது. செஞ்சிக்கோட்டையை ஆனந்த கோன் என்ற மன்னர் 12-ம் நூற்றாண்டில் கட்டியதாகச் சொல்கின்றனர். விஜயநகரப் பேரரசுக் காலத்தில்தான் இந்தக் கோட்டை முழுமையாக வலிமை பெற்றது. 1464-ம் ஆண்டு செஞ்சியில் வேங்கடபதி நாயக்கர் காலத்தில் முதன்முதலாக நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னால் இதை, பிஜப்பூர் சுல்தான் கைப்பற்றி கில்தார் என்ற படைத் தலைவனை செஞ்சிக்குப் பொறுப்பாளராக நியமித்தார்.

செஞ்சிப் பகுதியில் சமணர்கள் அதிகமாக வாழ்ந்து இருக்கின்றனர். இங்கே, ஏழாம் நூற்றாண்டு வரை சமணம் தழைத்தோங்கி இருந்தது. பல்லவர் காலத்தில் செஞ்சிக்குத் தெற்கே பனமலை, மண்டகப்பட்டு ஆகிய இடங்களில் குகைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. கி.பி. 1677-ல் பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து செஞ்சியை மராட்டிய மன்னர் சிவாஜி மீட்டு மேலும் பலப்படுத்தினார். அவருக்குப் பிறகு, இந்தக் கோட்டை கர்நாடக நவாபுக்களின் கைக்குப் போனது. அவர்கள், 1750-ல் இதை பிரெஞ்சுக்காரர்களிடம் தோற்றனர். இறுதியாக, 1761-ல் பிரிட்டிஷ் படை செஞ்சியைக் கைப்பற்றியது.

1780-ம் ஆண்டு ஹைதர் அலி செஞ்சியைத் தாக்கி, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார். அதுவே, செஞ்சிக் கோட்டையில் நடந்த கடைசிப் போர். 1799-ல் செஞ்சி மீண்டும் பிரிட்டிஷ்வசமானது. அவர்கள் அதை முறையாகப் பராமரிக்காமல் காவல் அரண் போலவே பாவித்தனர். 1921-ம் ஆண்டில் செஞ்சி தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது.

நிகோலஸ் பிமண்டோ என்ற கிறிஸ்துவப் பாதிரியார் எழுதிய நாட்குறிப்பில், 'தான் பார்த்த கோட்டைகளில் மிகப் பெரியது செஞ்சி. அது ஒரு சிறந்த பட்டினமாக விளங்குகிறது’ என்ற தகவல் காணப்படுகிறது.
நவாபை எதிர்த்து தைரியமாக சண்டை போட்ட தேசிங்கு, மக்கள் மத்தியில் இன்றும் வீர நாயகனாக புகழ்பெற்று விளங்குகிறான். இவ்வளவுக்கும், தேசிங்கு ராஜா செஞ்சியை ஆட்சி செய்தது 10 மாதங்கள் மட்டுமே. செஞ்சியும் வேலூரும் ஒரே வரலாற்றின் இரண்டு பக்கங்கள்.

வேலூர் கோட்டையைக் கட்டியதும் விஜயநகர ஆட்சியாளர்களே. 16-ம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் இந்தக் கோட்டையைக் கட்டினார். செஞ்சியைப் போலவே, வேலூரும் பிஜப்பூர் சுல்தான் வசம் சில காலம் இருந்தது. 1760-ம் ஆண்டு இந்தக் கோட்டை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசம் சென்றது. வெள்ளைக்காரர்கள், மைசூர் போரில் திப்பு சுல்தானை வென்ற பிறகு திப்புவின் குடும்பத்தினரை வேலூர் கோட்டைக்குள் அடைத்துவைத்து இருந்தனர். அத்துடன் திப்புவின் சிப்பாய்களில் பலரையும் பிரிட்டிஷ் அரசு தனது படையில் சேர்த்துக்கொண்டது.

ராஜ்யத்தை இழந்தபோதும் விசுவாசம் இழக்காத மைசூர்வாசிகள் ஆங்கிலேயருக்கு எதிராக சண்டையிடத் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனர். அதற்காக ஆங்கிலேய எதிர்ப்புப்பிரசாரத்​தை நாடக​மாகவும் கிராமியக் கலைகளாகவும் நிகழ்த்தத் தொடங்கினர். அந்த நெருப்புப் பொறி, வேலூர் பகுதிகளில் மெள்ளப் பரவத் தொடங்கியது.

ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க இயலவில்லை எனவே குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லி வர சொன்னார் சுல்தான், அவருடன் துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தன்க்கு ஒரு வாய்ப்பு அளித்துப்பார்க்க சொல்லி தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்துக் காட்டினான். அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்து விட்டார் சுல்தான். அது மட்டும் அல்ல இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய் (இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை).

செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிங்கவரம் கிராமம். சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம்.

தேசிங்கு ராஜன் தன் செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே அந்தக் கோயிலுக்குச்செல்ல சுரங்கப்பாதை அமைத்தாராம். அவனது ராணியும் மற்றத்தோழிகளும் பாதுக்காப்பாகச் செல்லவும் இந்தச்சுரங்கம் உதவப்பட்டது. எந்தப்போருக்குச்சென்றாலும் தேசிங்கு அரங்கனிடம் உத்தரவு பெற்றபின் தான் செல்வாராம்.

செஞ்சியை ஆண்ட மாவீரன் தேசிங்கு ராஜன், ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டபோது அரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டதே... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணலாம்.

போரில் தேசிங்கு, சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் வீர மரணம் அடைந்தார். இதனைஅறிந்த அவர் மனைவியும் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை நீலவேணி குதிரையின் சமாதியும் இருக்கிறது.