Posts

Showing posts with the label JUNE9

PETER THE GREAT ரஷ்ய மன்னர்களுள் மிகப் புகழ் பெற்றமகா பீட்டர் (1672 - 1725)

Image
PETER THE GREAT ரஷ்ய மன்னர்களுள் மிகப் புகழ் பெற்ற மகா பீட்டர் (1672 - 1725) மகா பீட்டர் ரஷ்ய மன்னர்களுள் மிகப் புகழ் பெற்றவராகப் பொதுவாகக் கருதப்படுகின்றார். மேல்நாட்டு மயமாக்கும் அவருடைய கொள்கை ரஷ்யாவை ஒரு பெரிய அரசாக மாற்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. PETER 1672 ஆம் ஆண்டு ரஷ்யாவின் முதலாம் அலெக்சிஸ் அரசருக்கும் அவரது இரண்டாவது மனைவியான நத்தாலியா கிரிலோவ்னா நரிஷ்கினாவுக்கும் மாஸ்கோவில் பிறந்தார். 1676 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் முதலாம் அலெக்சிஸ் இறக்க அரசுரிமை அலெக்சிசின் முதல் மனைவியின் மகனும் பீட்டருக்கு மூத்தவருமான மூன்றாம் பியோடோருக்குக் கிடைத்தது. ஆனால் பியோடோர் வலுவற்ற வராகவும், நோயாளியாகவும் இருந்தார். இவர் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1682 ஆம் ஆண்டு இறந்தார். பியோடோருக்குப் பிள்ளைகள் இல்லாததால் அரசுரிமை குறித்து நரிஸ்கின் குடும்பத்துக்கும், மிலோலவ்ஸ்கி குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. பீட்டரின் இன்னொரு அரைச் சகோதரரான ஐந்தாம் இவான் வாரிசு உரிமைப்படி அடுத்த இடத்தில் இருந்தார். ஆனால் அவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததோடு உறுதியற்ற மனநிலை கொண்டவராகவும்...