KARTHICK I.P.S , HOME GARDENING
KARTHICK I.P.S , HOME GARDENING .திடீரென ஒருநாள் கார்த்திக்கின் வீட்டுக்கு நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார், மாநில வேளாண்துறை அமைச்சர் சுனில்குமார். அமைச்சரின் இந்த `வேற லெவல்’ பாராட்டால் மாநிலம் முழுக்க பிரபலமானார் கார்த்திக் ஐ.பி.எஸ். கொரோனா லாக்டெளன் பெரும் இன்னல்களுடன் அவசியமும் அத்தியாவசியமுமான சில பாடங்களையும் சேர்த்தே நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமானது, மீண்டும் இயற்கையை நோக்கிய பயணம். முடிந்தவரை வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் அல்லது மாடித்தோட்டத்தில் உற்பத்தி செய்துகொள்வதே சிறந்தது என்ற சிந்தனை தற்போது பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதே சிந்தனை, ஐ.பி.எஸ் அதிகாரி கார்த்திக் என்பவர் மூலமாகக் கேரளா மாநிலம் முழுவதும் தற்போது பரவியிருக்கிறது. இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கார்த்திக் ஐ.பி.எஸ் கார்த்திக் ஐ.பி.எஸ் கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக (எஸ்.பி) பணியாற்றும் கார்த்திக், விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இயற்கை விவசாயத்தின்மீது அதீத ஆர்வம் கொண்டவர், தான் பணிமாறுதலாகிச...