Posts

Showing posts with the label ACUTE

KAMARAJ FAMILY IN ACUTE POVERTY

Image
KAMARAJ FAMILY IN ACUTE POVERTY  தமிழகத்தின் முதல் அமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம். காமராஜரின் தாயார் உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகத் தகவல் வந்தது. உடனே மதுரைக்குச் சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர். வீட்டிற்குள் நுழைந்ததும் படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார். மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார். அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார். '' அப்போ..நான் வர்றேன்.. உடம்பை நல்லாப் பார்த்துக்க'' கிளம்பிய போது உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார். '' ஒரு வாய் சாப்பிட்டுட்டுப் போ'' ''வேண்டாம்மா'' - என்று முதலில் மறுத்தவர் '' சரி..சரி.. எடுத்து வைங்க''-அடுக்களைக்குள் சென்று தரையில் உட்கார்ந்தார். அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள். அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு அம்மாவைப் பார்த்துக் கைகூப்பினார் காமராஜர். '' அப்போ நான் வரட்டுமா?...