Showing posts with label 1819. Show all posts
Showing posts with label 1819. Show all posts

Tuesday, 15 September 2020

FRANCIS NAPIER ,MADRAS GOVERNOR BORN 1819 SEPTEMBER 15 - 1898 DECEMBER 19




FRANCIS NAPIER ,MADRAS GOVERNOR BORN 
1819 SEPTEMBER 15 - 1898 DECEMBER 19


பிரான்சிஸ் நேப்பியர் (Francis Napier, செப்டம்பர் 15, 1819 – டிசம்பர் 19, 1898) வியன்னா, இத்தாலி, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இங்கிலாந்தின் தூதராக பணியாற்றினார். 1866இல் மெட்ராஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டார். சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது.

பிறப்பு மற்றும் கல்வி[மூலத்தைத் தொகு]
1819இல் ஸ்காட்லாந்தில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்த ஃபிரான்சிஸ் நேப்பியர், இங்கிலாந்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் சேர்ந்தார். சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார். ஆனால் தனியாக ஆசிரியரை அமர்த்தி சில வெளிநாட்டு மொழிகளைக் கற்றுக் கொண்டார். அதுதான் அவருக்கு பிற்காலத்தில் இங்கிலாந்தின் தூதராக பணியாற்ற பெரிதும் கைகொடுத்தது.

பணிகள்[மூலத்தைத் தொகு]


நேப்பியர் பதவி ஏற்ற சிறிது காலத்திலேயே அவர் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட இன்றைய ஒரிசாவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தால் தவித்த கஞ்சம் மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை நேப்பியர் தலையில் விழுந்தது. ஆனால் நேப்பியர் இதனை திறமையாகவே சமாளித்தார். ரீமிய யுத்தத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் கை விளக்கேந்திய காரிகை என வரலாற்றில் போற்றப்படும் பிரபல செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல், நேப்பியரின் நெருங்கிய நண்பர். மக்கள் பஞ்சத்தால் மடிந்தபோது, அவருக்கு கடிதம் எழுதி ஆலோசனை கேட்டார் நேப்பியர். நைட்டிங்கேலின் ஆலோசனைகளை உடனே செயல்படுத்தவும் செய்தார். இது பஞ்சத்தை எதிர்கொள்ள மிகவும் உதவியது. மதுரை திருமலை நாயக்கர் மஹாலைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நேப்பியர் ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மையம் அமைக்க உதவியதால் அவரது பெயரே அந்த மையத்துக்கு சூட்டப்பட்டது.

பாசன திட்டங்கள்[மூலத்தைத் தொகு]
பென்னாறு அணை நேப்பியர் காலத்தில்தான் கட்டப்பட்டது. இதேபோல விவசாயத்தை வளப்படுத்த நிறைய பாசனத் திட்டங்களை நேப்பியர் செயல்படுத்தினார். முல்லை பெரியார் அணைக்கான திட்டமிடல் இவரது ஆட்சி காலத்திலேயே நடைபெற்றது. சென்னையின் பழமையான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் இவரால் கட்டப்பட்டது. .[1] [2]


இறப்பு[மூலத்தைத் தொகு]
1872இல் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிச்சர்ட் பூர்ட், அந்தமானில் கொல்லப்பட்ட பிறகு சிறிது காலம் தற்காலிக வைஸ்ராயாக நேப்பியர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய வைஸ்ராய் கிடைத்ததும், நேப்பியர் இந்திய சேவைகளை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிவிட்டார். இத்தாலியில் டிசம்பர் 19, 1898 இல் தனது 79ஆம் வயதில் காலமானார்.

நினைவிடங்கள்[மூலத்தைத் தொகு]
சிந்தாதிரிப்பேட்டையில் நேப்பியரின் நினைவாக தொடங்கப்பட்ட நேப்பியர் பூங்கா தான், இன்றைய மே தினப் பூங்காவாக வழங்கப்படுகிறது. நேப்பியர் பெயரில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது.
.

Sunday, 2 February 2020

QUEEN VICTORIA BORN MAY 24,1819 - JANUARY 22, 1901




QUEEN VICTORIA BORN MAY 24,1819 - 
JANUARY 22, 1901






விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா, Alexandrina Victoria, மே 24, 1819 – சனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837 ஆம் ஆண்டு சூன் 20 ஆம் நாள் முதலும், பிரித்தானிய இந்தியாவின் முதல் பேரரசியாக 1876 மே 1 ஆம் நாள் முதலும் இறக்கும் வரையில் இருந்தவர். இவரது ஆட்சிக்காலம் 63 ஆண்டுகளும் 7 மாதங்கள். இது இதுவரை பிரித்தானியாவை ஆண்ட எவரது ஆட்சிக் காலத்தையும் விடக் கூடியது ஆகும். இவரது ஆட்சிக்காலத்தை மையமாகக் கொண்ட ஒரு காலப்பகுதி விக்டோரியா காலப்பகுதி எனப்படுகிறது.

விக்டோரியா ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்திலேயே ஐக்கிய இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சி ஆகிவிட்டது. இதில் அரசியோ அரசனோ மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையே கொண்டிருந்தனர். எனினும் விக்டோரியா ஒரு மிக முக்கியமான குறியீட்டு நபர் என்னும் நிலையில் மிகத் திறமையாகவே பணியாற்றி வந்தார். இவரது காலம் தொழிற் புரட்சியின் உயர்நிலையாகும். இது ஐக்கிய இராச்சியத்தில், சமூக, பொருளியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளை ஏற்படுத்தியது. இவருடைய காலத்திலேயே பிரித்தானியப் பேரரசு பெரிதும் விரிவடைந்து அதன் உச்ச நிலையை எட்டியதுடன், அக்காலத்தின் முன்னணி உலக வல்லரசு ஆகவும் திகழ்ந்தது[1].

இவர் முழுவதுமாக ஜெர்மானிய வழியினர். மூன்றாம் ஜார்ஜின் பேத்தியும், இவருக்கு முன் ஆட்சியில் இருந்த நான்காம் வில்லியத்தின் பெறாமகளும் ஆவார். இவர் தனது காலத்தில் தனது ஒன்பது பிள்ளைகளுக்கும், 42 பேரப் பிள்ளைகளுக்கும், ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஐரோப்பாவை ஒன்றிணைத்தார். இது அவருக்கு, "ஐரோப்பாவின் பாட்டி" என்னும் பட்டப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. இவர் புனித ரோமன் பேரரசின், பேரரசியான மரியா தெரேசாவின் இரண்டு விட்ட சகோதரியும் ஆவார்.

ஆட்சி

63 ஆண்டுகள், ஏழு மாதங்கள் இரண்டு நாட்களுக்கு விக்டோரியா மகாராணி பிரிட்டனையும் அதன் காலனிகளையும் ஆண்டார். உலகில் மிக அதிக நாள் ராணியாக இருந்த வரலாற்றையும் இவர் படைத்துள்ளார்.மகாராணி எலிசபெத் தற்போது அச்சாதனையை முறியடித்துள்ளார்

இறப்பு

விக்டோரியா மகாராணி 22 ஜனவரி 1901 அன்று தனது எண்பத்து ஒன்றாவது அகவையில் ஓஸ்பர்ன் இல்லத்தில் இறந்து[2] பிப்ரவரி 2, 1901 அன்று அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது[3].




விக்டோரியா மகாராணியின் ரகசிய உறவு, சினிமாவாகிறது..!


இங்கிலாந்தின் முன்னாள் மகாராணி விக்டோரியா மற்றும் அவரது இந்திய பணியாளர் அப்துல் கரீம் ஆகியோருக்கிடையிலான உறவு குறித்த சம்பவங்களை ஸ்டீபன் ஃபிரியர்ஸ் என்பவர் திரைப்படமாக இயக்கியுள்ளார்.



1837ம் ஆண்டு முதல் 1876வரை விக்டோரியா இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் மகாராணியாக இருந்தார். அறிவுக்கூர்மையும், தைரியமும் நிறைந்த பெண்ணாக சிறப்பான ஆட்சியை தந்தவர்.



விக்டோரியா மகாராணிக்கும், இந்தியாவை சேர்ந்த பணியாளர் அப்துல் கரீமுக்கும் இடையிலான உறவு குறித்து திரைப்படம் வர உள்ளது. செப்டம்பர் மாதம் 22ம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தின் பெயர் ‘விக்டோரியா அண்ட் அப்துல்’
விக்டோரியா மகாராணியின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகத்தை ஸ்ராபாணி பாசு என்பவர் எழுதியுள்ளார்.



மகாராணியின் டைரியில் அனைத்து உண்மைகளும் எழுதப்பட்டிருந்தாலும் அவைகள் வெளி உலகத்திற்கு மறைக்கப்பட்டுள்ளன.மகாராணிக்கும்,அப்துல் கரீமுக்குமான உறவும் மறைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவை சேர்ந்த கரீம் அறிவு கூர்மை உள்ளவர் என்பதால் அவரை மகாராணி தனது ஆசிரியராக நியமித்துக்கொண்டுள்ளார். மேலும், நல்ல உயரமான ஆண்கள் தன் அருகில் இருப்பதை விக்டோரியா மகாராணி மிகவும் விரும்புவார்.



மேலும் அப்துல் கரீம் எப்போதும் மகாராணியுடனேயே இருப்பார். மகாராணி எழுதிய கடிதங்களில் கூட அன்பு முத்தங்கள், தாய் மற்றும் உன் அன்பு தோழி என்றெல்லாம் விளித்திருப்பார்.



இவர்களுக்கிடையேயான உறவு குறித்து விக்டோரியாவின் மூத்த மகன் எட்வர்ட் (Edward-vii) அதிகம் கவலைப்பட்டுள்ளார். அதனாலேயே டைரியில் இருந்த உண்மைகளை மறைத்துவிட்டார்.



தற்போது அவர்களுக்கிடையேயான உறவு குறித்த திரைப்படம் செப்.22ம் தேதி வெளிவருகிறது.