T.K.BALA CHANDRAN ,MALAYALAM ACTOR DIED DECEMBER 15,2005
T.K.BALA CHANDRAN ,MALAYALAM ACTOR DIED DECEMBER 15,2005 T.K.பாலச்சந்திரன் – தமிழ், கன்னட மற்றும் மலையாளத் திரையுலகின் மறக்கவியலாத ஓர் நடிகர். தமிழில் ஜாதகம், பாதை தெரியுது பார், பாண்டித்தேவன், யார் மணமகன், மாடப்புறா, நடோடி மன்னன், அந்த நாள், நீதி, கற்பூரம், குலவிளக்கு போன்ற படங்களில் நடித்தவர். 02.02.1928-ஆம் ஆண்டு குஞ்ஞன்பிள்ளை-பாருகுட்டி அம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். பால்ய நடிகனாக நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். 13-ஆவது வயதில் 1940-இல் ”பிரகலாதா” படத்தில் பால நாரதராக நடித்தார்.1960-இல் வெளியான “பூத்தாலி” என்ற படத்தில் கதாநாயனாகவும் வில்லனாகவும் நடித்தார். முதன்முதலாக மலையாளத் திரையுலகில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. டி கே பீ-ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் 18 மலையாளப் படங்களைத் தயாரித்துள்ளவர். 1968-இல் பி.வேணு இயக்கி வெளியான “விருத்தன் ஷங்கு” என்ற முழு நீள நகைச்சுவைப் படத்தில் இவர் நடித்துள்ளார். ரி.பி.பாலகோபலன் எம்.ஏ. என்ற படத்தின் மூலம் மோகன்லாலை முதன்முதலாக பிரதான நடிகராக ...