Friday 15 December 2017

T.K.BALA CHANDRAN ,MALAYALAM ACTOR DIED DECEMBER 15,2005




T.K.BALA CHANDRAN ,MALAYALAM ACTOR 
DIED DECEMBER 15,2005 





T.K.பாலச்சந்திரன் – தமிழ், கன்னட மற்றும் மலையாளத் திரையுலகின் மறக்கவியலாத ஓர் நடிகர். தமிழில் ஜாதகம், பாதை தெரியுது பார், பாண்டித்தேவன், யார் மணமகன், மாடப்புறா, நடோடி மன்னன், அந்த நாள், நீதி, கற்பூரம், குலவிளக்கு போன்ற படங்களில் நடித்தவர்.

02.02.1928-ஆம் ஆண்டு குஞ்ஞன்பிள்ளை-பாருகுட்டி அம்மா தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். பால்ய நடிகனாக நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். 13-ஆவது வயதில் 1940-இல் ”பிரகலாதா” படத்தில் பால நாரதராக நடித்தார்.1960-இல் வெளியான “பூத்தாலி” என்ற படத்தில் கதாநாயனாகவும் வில்லனாகவும் நடித்தார்.

முதன்முதலாக மலையாளத் திரையுலகில் இரட்டை வேடத்தில் நடித்த நடிகர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்தது. டி கே பீ-ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி அதன் மூலம் 18 மலையாளப் படங்களைத் தயாரித்துள்ளவர்.




 1968-இல் பி.வேணு இயக்கி வெளியான “விருத்தன் ஷங்கு” என்ற முழு நீள நகைச்சுவைப் படத்தில் இவர் நடித்துள்ளார். ரி.பி.பாலகோபலன் எம்.ஏ. என்ற படத்தின் மூலம் மோகன்லாலை முதன்முதலாக பிரதான நடிகராக அறிமுகப்படுத்தியது T.K.பாலச்சந்திரன்.

தனது 13-ஆவது வயதில் பால்ய நடிகராக பிரகலாதாவில் நடித்த பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் கம்பெனியான “பாய்ஸ் நாடக கம்பெனி”யில் சேர்ந்தார். இங்கு தனது நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டார். இவர் மலையாளத்தில் பிரகலாதா, கிறிஸ்துமஸ் ராத்ரி, அனியத்தி, பக்த குசேலா, பர்த்தாவு, களஞ்ஞு கிட்டிய தங்கம், ஓமனக்குட்டன், சேட்டத்தி, கழித்தோழன், வில்பவக்காரிகள், கனகச்சிலங்கா, கருணா, ஜீவிக்கான் அனுவதிக்கு, வில்கப்பட்ட பந்தங்கள், படிச்ச கள்ளன்,  ஆன வளர்த்திய வானம்பாடி மகன் உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மொத்தத்தில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “குமார சம்பவம்” என்ற படத்தில் ஏற்றிருந்த நாரதர் வேடம் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்தது.

இவருக்கு விசாலாக்ஷி என்ற மனைவியும் வினோத், வசந்த் என்ற இரு மகன்களும் உள்ளனர். வஞ்சியூர் மாதவன் நாயர் இவரது சகோதரர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட ரி.கே.பாலச்சந்திரன் தனது 78-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் 15.12.2005 அன்று காலமானார்.

No comments:

Post a Comment