FACTORS AFFECTS SEX LIFE
தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் 4 மூட நம்பிக்கைகள்! கணவன், மனைவி மத்தியிலான தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் நான்கு மூட நம்பிக்கைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
நம்மவர்கள் மத்தியில் ஆன்மீகத்தில் இருந்து இல்லறம் வரை தொட்டதில் எல்லாம் மூட நம்பிக்கை பார்ப்பார்கள். பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை என்பார்கள், விதவை பெண் எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்பார்கள். ஏன், என்ன என்று தெரியாமல், ஒரு விஷயத்தை ஆழமாக யோசிக்காமல் அதை பின்பற்றுவர்கள்.
அந்த வகையில் தாம்பத்திய உறவில் நம்மவர்கள் மூட நம்பிக்கையாக கடைபிடித்து வரும் சில விஷயங்கள்...
மூடநம்பிக்கை #1
சிலர் இப்படி தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும். அவர் கூறினார், இவர் கூறினார் என முயற்சித்து தோல்வியுற்று போவார்கள். உடலுறவும், அதில் ஈடுபடும் முறையும், ஒரு நபர் அதை எடுத்துக் கொள்ளும் விதமும் நிச்சயம் ஒருவருக்கு, ஒருவர் வேறுப்படும். ஒருவர் சிலவற்றை விரும்புவார். மற்றொரு நபர் அதை அதிகளவில் வெறுப்பர். எனவே, உடலுறவில் இது தான் சிறந்தது, இது தான் நிறைந்த மகிழ்ச்சயை அளிக்கும் என்பதெல்லாம் இல்லை.
மூடநம்பிக்கை #2
சிலர் தாம்பத்திய வாழ்க்கை இளமையில் மட்டும் தான் இன்பம் தரும் என நினைக்கின்றனர். ஆனால், பல ஆய்வு முடிவுகளில் நடுவயது அல்லது அதற்கு மேல் தான் தாம்பத்தியர் தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இளம் வயதில் வேலை, பணம் என்ற ஓட்டம் பலரது வாழ்வில் தாம்பத்தியத்தை சீரழித்து விடுகிறது
மூடநம்பிக்கை #3
ஒரு உறவில் அல்லது திருமணமானவர் பார்ன் பார்க்க மாட்டார் அல்லது அவர் பார்க்க கூடாது என்ற கருத்து பலரிடம் வெகுவாக காணப்படுகிறது. ஆனால், பார்ன் பார்ப்பது வேறு, தாம்பத்தியம் வேறு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். பார்னை சுய வாழ்க்கையில் ஒப்பிட்டு பார்ப்பது தான் மிகப்பெரிய தவறு.
மூடநம்பிக்கை #4
ஆண்கள் ஒரு செக்ஸ் மெஷின்கள். அவர்கள் எப்போதுமே செக்ஸிற்காக தான் பழகுகிறார்கள் என்ற பார்வை இரண்டில் ஒரு பெண் மத்தியில் இருக்க தான் செய்கிறது. பொது உடல் நலம், மன அழுத்தம், நம்பிக்கை, உறவில் அவரது இயக்கவியல் போன்ற காரணங்கள் தான் ஒரு ஆணுடைய செக்ஸ் வாழ்வில் பேரம் பங்காற்றுகிறது
கருத்து! செக்ஸ் என்பது ஒவ்வொரு நபர், ஒவ்வொரு சூழ்நிலை சார்ந்து மாற கூடியது. மற்ற செயல்களை போல தான் இதுவும். ஒவ்வொருவருக்கும் செக்ஸ் மீது தனித்தனியான பார்வைகள் இருக்கும். அந்த நபர் அல்லது சூழலுக்கு ஏற்றவாறு தாம்பத்திய வாழ்க்கையை அமைத்து கொண்டால் எந்த பிரச்சனையும் எழாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
No comments:
Post a Comment