TITANIC MOVIE RELEASED 1997 DECEMBER 19
SCORED 11 ACADEMIC OSCAR AWARDS
மூன்று மணி நேரப் படம் என்று இயக்குநர் சொன்னபோது அது வசூலைப் பாதிக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். மல்டி பிளக்ஸில் இரண்டு மணி நேரப் படங்களே அதிகக் காட்சிகள் ஓடி அதிகமாக வசூல் செய்யும் என்பது ஹாலிவுட் பாக்ஸ் ஆபீஸின் வசூல் கணக்கு.
“மூழ்கும் கப்பலில் ஒரு ரோமியோ ஜூலியட் கதை” என்று ஜேம்ஸ் கேமரூன் தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர்களுக்கு உற்சாகம் வரவில்லை. கார் துரத்தல்கள், அட்டகாச வில்லன்கள் எல்லாம் இல்லாத காதல் கதையை, அதுவும் ஒரு கப்பல் விபத்தை மூன்று மணி நேரம் மக்கள் உட்கார்ந்து பார்ப்பார்களா என்ற சந்தேகம்.
இயக்குநரின் உந்துதலில் படம் ஆரம்பிக்கப்பட்டாலும் வெளியிடுவதில் தாமதங்கள், பட்ஜெட்டை மீறிய செலவு, ஒரு தோல்விப் படம் என்று கருதப்பட்டு வளர்ந்த படம்தான் டைட்டானிக்.
ஆனால் 14 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த படம், சிறந்த இயக்குநர் விருதுகள் உட்பட 11 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றது டைட்டானிக். இதுவரை அதிகமான ஆஸ்கர்களைக் குவித்த ‘பென்ஹர்’ படத்துடன் அதே 11 விருதுகள் பெற்று சமன் செய்தது டைட்டானிக்.
அதே போல அந்தக் காலகட்டத்தில் உலகில் அதிக வசூல் என்கிற சாதனையையும் செய்தது. இந்த வசூலை முறியடித்த படம் ஜேம்ஸ் கேமரூன் பின்னர் எடுத்து வெளிவந்த அவதார்!
நிஜக்கதை என்பதால் மிகப் பிரபலம். ஏற்கனவே செய்தியாகவும் தொலைக்காட்சி தயாரிப்பாகவும் திரைப்படமாகவும் மக்களைச் சென்றடைந்த விஷயம் டைட்டானிக். உலகின் மிகப்பெரிய கப்பல் விபத்து என்பதால் டைட்டானிக்கை யாரும் மறக்க முடியாது. ஆனால் அதை ஒரு வெற்றி கரமான வணிக வெற்றிக் கதையாக மாற்றிய பெருமை இயக்குநரைச் சேரும்.
நொடிந்து போய் கடனில் உள்ள குடும்பத்தை மீட்க தன் மகளை ஒரு பெரிய குடும்பத்தில் கட்டி வைக்க நினைக்கிறாள் தாய். நிச்சயிக்கப்பட்டவனுடனும் தாயுடனும் வேண்டா வெறுப்பாகக் கப்பலில் பயணிக்கிறாள். ஒரு விரக்தி நிலையில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயல்கையில் அவனைச் சந்திக்கிறாள்.
ஒரு பரிசுச்சீட்டில் கப்பல் பயணம் வாய்க்க மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் காசில்லாத ஓவியன் அவன். அவளைக் காப்பாற்றுகிறான். அந்த நன்றிக்கு அவனை விருந்துக்கு அழைக்கச் சொல்கிறாள் தன் தாயிடம். புது மாப்பிள்ளையும் தாயும் அவன் வரவை ரசிக்கவில்லை. விருந்தும் ருசிக்கவில்லை. நிஜமான கொண்டாட்டம் காட்டுகிறேன் வா என்று அவளை மூன்றாம் வகுப்பு விருந்துக்கு அழைத்துச் சென்று அவளுடன் நடனமாடுகிறான்.
தன் நிலை தெரிந்து அவனைத் தள்ளி வைக்க நினைத்தும், அவன் காதலைப் புறக்கணிக்க இயலவில்லை. இருவரும் கலந்து போகிறார்கள். தன்னை நிர்வாணமாக ஓவியம் வரையச் சொல்லி ரசிக்கிறாள். அந்த வைர நெக்லஸ் மட்டும் அணிந்தவளை வரைகிறான். அது காலத்தை வென்ற ஓவியமாய் அனைவரும் அழிந்த பின்னும் ஜீவிக்கிறது.
கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளாகிறது. வெள்ளமும் ஓட்டமும் மரண ஓலங்களும் இறப்புகளுமாக ஒரு பலிபீடமாக மாறுகிறது டைட்டானிக். நிச்சயித்த பெண்ணை விட்டுத் தன் உயிரைக் காப்பாற்றி க்கொள்ள கயமையாகக் காணாமல்போன குழந்தை ஒன்றை எடுத்துக்கொண்டு முதலில் வெளியேறுகிறான் வில்லன்.
மரண பயமும் நம்பிக்கையும் மாறி மாறி வருகிறது. மீட்கப்படும் வரை உயிரோடு இருக்க வேண்டும். கிடைத்த உடைந்த சிறு படகில் ஒருவர் மட்டும் உட்கார முடிகிறது. அவளைப் பத்திரப்படுத்தி கடல் நீரின் குளிரில் விரைத்து மெல்ல இறக்கிறான் காதலன்.
காதலி அவன் நினைவில் அவன் மனைவியாய் வாழ்கிறாள் 100 வயதுவரை. டைட்டனிக்கின் கதை அவள் ஞாபகங்களில்தான் விரிகிறது. முதுமையில் தன் இளமைப் பருவக் காதலில் திளைத்து மரணத்தைத் தழுவுகிறாள் ரோஸ். காதலன் ஜேக் உடன் தேவலோகத்தில் இணைகிறாள்.
திரைப்படம் இயக்குவதைவிடக் கடலின் அடியில் சென்று ஆராய்ச்சிகள் செய்வதுதான் அதிகம் பிடிக்கும் ஜேம்ஸ் கேமரூனுக்கு. இந்தப் படம் உருவாக 5 வருடங்கள் ஆராய்ச்சிகள் செய்துள்ளார். சம்பவம் நடந்த இடத்திலேயே பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பிரம்மாண்ட அரங்குகளும், மினியேச்சர் வடிவங்களும், ஏராளமான தொழில் நுட்பமும் கலந்து உருவான படம் டைட்டானிக்.
1997-ல் வெளிவந்த இந்த படம் அந்தக் காலகட்டத்தில் கிடைத்த அனைத்துத் தொழில் நுட்ப வசதிகளையும் கொண்டு தயாரானது. இருந்தும் படத்தின் வெற்றிக்குக் காரணம் காதல்தான். ஒரு விபத்தில் எத்தனையோ பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். மறைந்த மனிதர்களின் புதைந்து போன உறவுகளையும் உணர்வுகளையும் இந்த இருவரின் காதல் கதை மூலம் தொட்டுக் காட்டியிருப்பதுதான் நம்மை நெகிழ வைக்கிறது. காட்டியது ஒரு புனைவுக் காதல் கதை. இன்னும் எத்தனை எத்தனை நிஜக் காதல் கதைகள் நீரில் மூழ்கினவோ? எத்தனை காதல்கள் கரையிலேயே செத்து மடிந்தனவோ? அவற்றையெல்லாம் நினைக்க வைத்ததுதான் டைட்டானிக்கின் வெற்றி!
எல்லா நாடுகளிலும் இதைக் கண்டு நெகிழக் காரணம் இது உலகம் பேசும் ஒரே மொழியான. காதலைப் பேசியது.நம் மண்ணிலும் இயற்கைச் சீற்றங்களும் விபத்துகளும் நிறைய நடந்துள்ளன. அதை ஆவணப்படுத்தும் படைப்புகளாக இன்னும் ஆழமான படைப்புகள் வரலாம். .
ஹாலிவுட் சூப்பர் ஹிட் திரைப்படம் டைட்டானிக் 1997ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது
டைட்டானிக் (Titanic) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
கதை[மூலத்தைத் தொகு]
பாரிய ஆடம்பரப் பயணிகள் கப்பலான டைட்டானிக், அதன் முதற் பயணத்தின் போதே பனிப்பாறையுடன் மோதிக் கடலுள் அமிழ்ந்தது. ஆயிரக் கணக்கில் பயணிகள் இறந்து போன அந்த உண்மைச் சோகக் கதையைப் பின்னணியாகக் கொண்டு அமைந்ததே இதன் கதையாகும்.
1995 ஆம் ஆண்டில் அமிழ்ந்த ஆர்எம்எஸ் டைட்டானிக்கின் உண்மையான உடைந்த பகுதிகளைப் படம் எடுத்ததுடன், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கள் தொடங்கின. இந்த உண்மைத் துன்பியல் கதையில் மக்களை ஊன்ற வைப்பதற்கு, ஒரு காதல் கதையை இயக்குனர் கேமரூன் உருவாக்கி யிருந்தார். தற்காலக் காட்சிகள் அனைத்தும் அக்கடமிக் ம்ஸ்டிஸ்லாவ் கெல்டிஷ் (Akademik Mstislav Keldysh) என்னும் ரஷ்ய ஆய்வுக் கப்பலில் எடுக்கப்பட்டன.
அமிழ்ந்த கப்பலின் மீளமைப்பு ஒன்று மெக்சிக்கோவில் உள்ள பிலேயாஸ் டி ரொசாரிட்டோ (Playas de Rosarito) என்னும் இடத்தில் கட்டப்பட்டது. கேமரூன், பல அளவுத்திட்ட மாதிரிகளையும், கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியுருக்களையும் கப்பல் கடலுள் ஆழ்வதைக் காட்டுவதற்குப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படமே அதுவரை எடுக்கப்பட்ட படங்களில் அதி கூடிய செலவு பிடித்த படம் ஆகும். இதற்கு நிதி வழங்கிய பராமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் 20த் செஞ்சுரி ஃபோக்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதற்காகச் செலவு செய்துள்ளன.
வெளியீடு[மூலத்தைத் தொகு]
தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம் தயாரிப்புக்குப் பிந்திய தாமதங்கள் காரணமாக அவ்வாண்டு டிசம்பர் 19 ஆம் தேதியே வெளியிட முடிந்தது. இத் தாமதம் அறிவிக்கப்பட்டபோது, இப்படம் தோல்வி அடையப் போவதாகப் பத்திரிகைகள் நம்பின. எனினும் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விமர்சன அடிப்படையிலும், வணிக அடிப்படையிலும் படம் பெரு வெற்றி பெற்றது. மிகக் கூடிய 14 அக்கடமி விருதுகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இப் படம், சிறந்த படத்துக்கான விருது உட்பட 11 விருதுகளை வென்றது. அத்துடன் உலகளாவிய அளவில், இதுவரை இல்லாதபடி, 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டிச் சாதனை நிகழ்த்தியது.
விமர்சகர்கள் ஏன் டைட்டானிக்கைப் புகழ்கிறார்கள்?
By David Walsh
உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 30, 1998இல் வெளியிட்ட ஒரு கட்டுரையை இங்கே மறு பிரசுரம் செய்கிறது.
ஜேம்ஸ் கமரூனால் இயக்கப்பட்டு 1997 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஹாலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமான டைட்டானிக், அதே பெயரில் ஏப்ரல் 10, 1912இல் பயணப்பட்ட கப்பலின் நூற்றாண்டைக் குறிப்பதையொட்டி, அது ஏப்ரல் 4இல் முப்பரிமாணத்தில் (3D) திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் முதலில் வெளியிடப்பட்ட போது, ஆச்சர்யப்படுமளவிலான விமர்சன எண்ணிக்கையோடு பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது. தகுதியற்ற வகையில் இருந்தபோதினும் அது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல அகாடெமி விருதுகளை வென்றது.
1998இன் ஆரம்பத்தில் உலக சோசலிச வலைத்தளம் தொடங்கப்பட்ட போது அதனால் விமர்சிக்கப்பட்ட முதல் திரைப்படங்களில் டைட்டானிக் படமும் ஒன்றாகும். எமது விமர்சனம் வாசகர்களிடமிருந்து கணிசமான விடையிறுப்புகளைக் கொண்டு வந்தது. ஜனவரி 30, 1998இல் பதிப்பிக்கப்பட்ட விமர்சனத்தையும், அதை தொடர்ந்து வந்த மறுமொழிகளையும் இன்று நாம் மறுபிரசுரம் செய்கிறோம்.
*** *** ***
ஜேம்ஸ் கமரூனின் டைட்டானிக் படத்தைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கின்ற விமர்சகர்களின் விஷயத்தில் சில குறைகள் உள்ளன. அதுவொரு மோசமான படைப்பு—வலுவற்ற கதை, வலுவற்ற நடிப்பு, வலுவற்ற இயக்கத்தைக் கொண்டுள்ளது. அதனுடைய தயாரிப்பிலும் விநியோகத்திலும் அத்தோடு ஊடக பிரச்சாரத்திலும் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படாமல் இருந்திருந்தால், ஒருவர் சுலபமாக இந்த படத்தைத் தவிர்த்திருப்பார்.
Titanic
டைட்டானிக்
"கமரூனின் பிரமாண்ட திரைப்படமான டைட்டானிக், மிக நேர்மையோடு Gone With the Wind உடன் ஒப்பிடக்கூடிய தசாப்தங்களிலேயே ஒரு முதல் படைப்பாக உள்ளது," என்று நியூயோர்க் டைம்ஸின் திரைப்பட விமர்சகர் ஜானெட் மாஸ்லின் அவருடைய டிசம்பர் 19 திறனாய்வில் குறிப்பிட்டார். "அத்திரைப்படம் பார்வையாளர்களை அதன் அழகிலும், இதயத்தை கீறும் அதன் அழிந்துபோன உலகிற்குள்ளும் ஈர்த்து வைக்கும் ஒரு பிரமாண்ட, வியப்பூட்டும் மூன்றேகால் மணி நேர படமாகும்," என்று அவர் தெரிவித்தார். லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் "நட்சத்திரங்களுக்கு இடையில் அற்புதமான பொருத்தம்" இருந்ததாக எழுதிய மாஸ்லின், "கண்மூடித்தனமான பிடிவாதம் மற்றும் அதன் கொடூரமான விளைவுகளைக் குறித்த ஒரு மறக்கமுடியாத மனதைப் பிழியும் கதையை டைட்டானிக் அளிக்கிறது. அதுவொரு அரிய ஹாலிவுட் சாகச திரைப்படமாகும். அது fall of Icarus, ruin of Ozymandias போன்ற பழங்கால துயர பிம்பங்களைச் சாதாரணமாக நினைவிற்கு கொண்டு வருகின்றது," என்று புகழ்ந்தார்.
இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? சமயம் கிடைக்கும் போது ஒரு படைப்பை மிகை மதிப்பீடு செய்யும் ஒரு விஷயமாக, ஒருவேளை முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் அல்லது போராடி கொண்டிருக்கும் ஒரு கலைஞரை ஊக்குவிக்கும் மற்றும் ஒரு நல்ல செயலில் கொஞ்சம் நல்லெண்ணத்தோடு செயல்பட செய்யும் ஒரு விஷயமாக இது இருக்கிறது. ஆனால் இதுபோன்ற மிகைப்படுத்தல் எதார்த்தத்தில் சில அடித்தளங்களைக் கொண்டிருக்க வேண்டும். விமர்சனம் என்பது முற்றிலும் தனிநபரைச் சார்ந்த ஒரு வியாபார முயற்சியல்ல. எந்தவொரு புறநிலை தரத்தின் (objective standard) அடிப்படையிலும் மாஸ்லினோ அல்லது ஏனையவர்களோ அதில் இருப்பதாக கூறும் விஷயங்களில் எதுவுமே டைட்டானிக்கில் இல்லை.
சிறப்பான விதத்தில் பெரும் வேலை செய்யப்பட்டும், நடுத்தரமான முயற்சியையும் கொண்டிருக்கும் கமரூனின் சமீபத்திய திரைப்படம் எந்த ஆச்சரியத்தையும் கொண்டு வரவில்லை. இதில் மலர்வதற்கு காத்திருக்கிற ஒரு ஆழ்ந்த கலைத்திறமை இருந்தது என்று கூறுமளவிற்கு Aliens, True Lies, The Abyss அல்லது Terminator திரைப்படங்கள் போன்று எதுவுமில்லை. கதையைத் தேர்ந்தெடுக்கும் எவ்வித தெளிவோ அல்லது சமூக அல்லது உளவியல் வாழ்விற்குள் ஊடுறு பார்க்கும் பார்வையோ இல்லாமல், அந்த இயக்குனர் வெளிப்படையாக ஓர் உத்வேகமுள்ளவராக, திறமையான தொழில்நுட்ப வல்லுனராக மற்றும் ஆதார வளங்களை ஒருங்கிணைப்பவராக இருக்கிறார்.
டைட்டானிக், அது வெளியான டிசம்பர் 19இல் இருந்து நூறு மில்லியன் கணக்கான டாலர்களை உலக அளவில் ஈட்டியிருக்கிறது. இது இதுவரையிலான காலத்தில் இல்லாதளவிற்கு அநேகமாக ஏறக்குறைய ஒரு பில்லியனுக்கும் நெருக்கமாக மிக அதிகளவில் பணம் திரட்டிய படமாக இருக்கலாம். இந்த வெற்றி வியப்பானதல்ல. எல்லாவற்றிற்கும் முதலாவதாக கமரூனின் திரைப்படம் பரந்த அளவிலான ஊடகத் திரையிடல்களைப் பெற்றுள்ளது. டைட்டானிக் மூழ்குவது குறித்து அங்கே பொது மக்களிடையே பொதுவான ஆர்வமும், அத்தோடு அதை காண வேண்டுமென்ற விருப்பமும் (இது ஊடகங்களின் மூலமாக ஊதி பெரிதாக்கப்பட்டன) இருந்தது.
வெளிப்படையாக இத்திரைப்படம் குறிப்பாக இளைஞர்களை இழுக்கிறது. பாராமவுண்ட் பிக்சர்ஸால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, இதை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைப் பார்த்திருப்பவர்களுள் 63 சதவீதம் பேர் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். நடிகர் டிகாப்ரியோ நடித்த ஜாக் லண்டனெஸ்க் கதாபாத்திரமும் மற்றும் ஒரு கொழுத்த மில்லினியரைத் திருமணம் செய்து கொள்ளும்படி தன் தாயாரால் கட்டாயப்படுத்தப்படுகிற ஒரு மகிழ்ச்சியற்ற முதல்தர பயணியும் (வின்ஸ்லெட்) டைட்டானிக்கில் கமரூனின் பிரதான கதாப்பாத்திரங்கள். எதிர்ப்பை சந்திக்கும் காதலர்களின் முறிந்துபோகும் அந்த காதல் கதை இயல்பாகவும், வழக்கமாகவும் இளைஞர்களின் ஆர்வத்திற்குள் இருப்பதும் தான்.
ஆனால் இந்த பிரச்சினை பொருத்தமாகவோ அல்லது திருப்திகரமான விதத்திலோ தீர்க்கப்படுகிறதா?
காதல் கதை உட்பட ஏறத்தாழ திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் வழக்கத்தில் நைந்து போனதாகவும், ஊகிக்க கூடியதாகவும் வழங்கப்பட்டுள்ளது. நடந்துகொள்ளும் விதங்களையும், தனிமனிதவியல்பின் பண்புகளையும், முகபாவனைகளையும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்துகின்றன. அவை உடனடியாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பதோடு, திரைப்படம் முழுவதிலும் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றன. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அந்த வில்லன், நாம் அவரை முதலில் பார்ப்பதிலிருந்து கடைசி வரையிலும் ஓய்வில்லாமல் கொடூரமானவராகவும், சுயநலவாதியாகவும் நடந்து கொள்கிறார்; துர்குணமுடைய, அடக்கி வைக்கும் தாய் ஓய்வில்லாமல் துர்க்குணமுடையவராகவும், ஒடுக்குபவராகவும் இருக்கிறார்; "மூழ்காத" மோலி பிரௌன் ஒட்டாதவகையில் மிதந்து கொண்டே இருக்கிறார்.
கட்டுக்கடங்காத ஜாக் (டிகேப்ரோ) மேல்-வர்க்க ரோஸை (வின்ஸ்லெட்) சந்தித்து காதலில் விழுகிறார். பின்னர் அவர்களுக்குள் ஊடல் ஏற்படும், அதை சரிகட்டுவார்கள், காதலிப்பார்கள், கடுங்கோபமுடைய திருமண-நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை எதிர்கொள்வார்கள், பின் அவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள், இப்படியான இன்னும் இதர பிற விஷயங்கள் நடக்கும் என்பதில் நமக்கேதேனும் சந்தேகம் உண்டா?
தற்கால இளைய தலைமுறையின் ஆர்வங்களுக்காக அவர்களைக் கூறுவதற்கில்லை. தற்போதைய ஸ்டூடியோ அமைப்புமுறையின் மிக அற்பத்தனமான படைப்புகளைத் தவிர அவர்கள் வேறு எதை பார்த்திருக்கிறார்கள்? சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த ஜனரஞ்சக சினிமாவே இதுபோன்ற கதையைக் கூடுதல் சிந்தனையுடனும் அறிவுநுட்பத்துடனும் சித்தரித்தது. அவற்றின் எல்லா பிழைகளுக்கும் Bonnie and Clyde, The Graduate (இரண்டும் 1967ல் வெளி வந்தன) அல்லது ஃப்ரேங்கோ ஜெப்ரெல்லியின் Romeo and Juliet (1968) படத்தையே ஒருவர் நினைத்து பார்க்கிறார்.
டைட்டானிக் கப்பலின் விதி, முழுக்க முழுக்க திகைப்பூட்டும் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு அசாதாரணமான நிகழ்வாகும். உயிர் வாழ்க்கை அல்லது வரலாற்றோடு அலுத்து போன அல்லது அதன் சாத்தியக்கூறுகளுக்கு கண்மூடி போயிருக்கும் ஒரு இயக்குனரைக் குறித்து ஒருவரால் என்ன கூற முடியும்? வெளிப்பார்வைக்கு ஒருசில மனக்கிளர்ச்சியை அவர் காட்டுகிறார். அதாவது ஒரு மூழ்கி கொண்டிருக்கும் கப்பலில் ஆயிரக்கணக்கானவர்கள் நிச்சயமாக மரணத்தை எதிர்கொண்டிருக்கின்ற போது பாதியளவிற்கு மூழ்கிய ஒரு கப்பலையும், ஒரு துப்பாக்கி சண்டையையும் அவர் காட்டுகின்றார். காமரூனின் கற்பனைத்திறன் குறைபாடு அவ்விஷயத்தில் ஏதோ கிட்டத்தட்ட அபத்தத்தைக் கொண்டுள்ளது. (உண்மையான மயிர்கூச்செறியும்படியான கப்பல் மூழ்குவதைக் காண ஆண்ட்ரிவ் எல். ஸ்டோனின் The Last Voyage (1960) படத்தைப் பார்க்கலாம். இது வீடியாவிலேயே காண கிடைக்கிறது.)
அதற்கடுத்தாற் போல் படத்தில் மறைமுகமாக "தீவிரமான" அரசியல் குறிப்பீடு இருக்கிறதோ என்று கருதச் செய்கிறது. இது டைட்டானிக் சார்பான அனைத்து விவாதங்களிலும் தட்டி கழிக்க முடியாததாய் உள்ளது. "இது ஏழை மற்றும் பணக்காரர்களின் வெவ்வேறு நிலைமைகளைப் பாரபட்சமின்றி சித்தரிக்கும் ஒரு படமாகும்," என்று மாஸ்லின் விவரிக்கிறார். அத்தோடு, நகைச்சுவையாக கமரூனையும் சேர்த்து கொண்டு, "நாங்கள் மார்க்சிச வறட்டுவாதத்தையும் கொஞ்சம் பிடித்துக் கொண்டிருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார். இது முட்டாள்தனமாக இருக்கிறது. 1912இல் ஏழைகளும் பணக்காரர்களும் வித்தியாசமாக நடத்தப்பட்டார்கள் என்பதும், 86 ஆண்டுகளுக்குப் பின்னரும் அதுவே தொடர்கிறது என்பதும் பெரும்பாலான நபர்களுக்கு அனேகமாக தெரியும்.
கமரூன் அவரது பார்வையாளர்களுக்கு என்ன அளிக்கிறார் என்றால் ஒருபுறம் வர்க்க உறவுகளின் ஒரு மேலோட்டமான விமர்சனத்தை அளிக்கிறார்; ஆனால் மறுபுறம் அதையே அவர் புளித்துபோன மற்றும் அனுசரித்து போகும் கண்ணோட்டத்தோடு அளிப்பதை அதிகளவில் கையில் எடுக்கிறார். டைட்டானிக்கின் நிஜமான கரு என்னவென்றால் இவை தான்: மனிதர்களின் நடத்தையில் எந்த தடுமாற்றங்களும் இருப்பதில்லை; வலி நிறைந்த, முறுக்கி பிழியும் முடிவுகள் அவசியப்படும் பிரச்சினைகளே கிடையாது; சமூகம் மற்றும் வாழ்க்கை குறித்த அனைத்தும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ளது; முதல் பார்வைக்கு தெரிவதைப் போலவே உலகம் அதேபோன்று உள்ளது; ஒருவர் மகிழ்ச்சியைக் காண வேண்டுமானால் அவருக்கு வெறுமனே சிறிது அதிஷ்டமும், கொஞ்சம் அறிவுக்கூர்மையும் இருந்தால் போதுமானது ஆகியவை. இந்த படம் வெறுமனே வர்த்தகரீதியில் வெற்றி பெறுவதற்கான அதிஷ்ட தேவையாக உள்ளது. இவற்றுள் எது ஆழ்ந்த விமர்சன சிந்தனையை உண்டாக்கும்?
நியூயோர்க் திரைப்பட விமர்சகர்களின் "மேற்தட்டு" குழுவின் பல அங்கத்தவர்கள் இத்திரைப்படத்தில் அதிகம் கவனம் செலுத்தி இருப்பது ஏன்? என்பதில் தான் உண்மையான பிரச்சினை இருக்கிறது. டைட்டானிக்கின் வெற்றி அல்லது தோல்வியில் சவாரி செய்கிற மில்லியன் கணக்கான டாலர்கள் எல்லா விமர்சகர்களின் முடிவுகளின் மீதும் நேரடியாக தங்கியுள்ளது என்று கூறுவது தவறானதாக இருக்கும். ஆனால் இன்னும் அதிக சிக்கல்கள் இதில் உள்ளடங்கி உள்ளன.
கமரூனின் திரைப்படத்திற்கான பாராட்டு ஒரு நல்லெண்ண அம்சத்தைக் கொண்டுள்ளது. திரைப்பட திறனாய்வாளர்கள் பார்க்க பரிந்துரைக்கும் ஒரு படம் என்பது போல பல முக்கிய செய்திகள் கூறுகின்றன; துரதிர்ஷ்டவசமாக, இந்த கற்பனைபூர்வ படைப்பு டைட்டானிக்குடன் வெகு குறைவாக தான் ஒத்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, தற்போது என்ன இருக்கிறதோ அந்த மங்கி போயிருக்கும் சில சிறப்புகள், திரைப்பட இயக்கத்தின் நெருக்கடியை மற்றும் அதன் வரலாற்றுரீதியிலான மற்றும் புத்திஜீவித ஆதாரங்களை ஆராய்வதன் மீதான ஓர் ஆழ்ந்த பார்வையைக் கையாளாமல் இருப்பதற்கான விருப்பம் தான் அந்த நல்லெண்ணத்தில் தங்கியுள்ளது.
அனைத்திற்கும் மேலாக அமெரிக்க வெகுஜன சினிமா உலக திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற உண்மை முற்றிலுமாக அதன் தாக்கத்தைக் கொண்டுள்ளது. பலம் வெற்றி பெறுகிறது என்பது மட்டுமல்ல, அது விஷயங்களை நம்ப வைக்கிறது என்பதையும் நாம் அறிவோம். ஒரு வெளிப்பார்வையாளர் போன்று பல வருடங்கள் இருந்த பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி "கலை" விமர்சகர் தற்போதைய நிலைமைகளின்கீழ் இணங்கி நடக்கவும், சார்பற்ற ஒரு எதிர்பாளராக கடந்து செல்லவும், கூட்டத்தில் ஒருவராக இருக்கவும் வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் கணிசமான அளவிற்கு அழுத்தத்தை உணர்கிறார். டைட்டானிக் பலிபீடத்தில், ஹாலிவுட் திரைப்பட இயக்கத்தின் பெரும் பாரம்பரியத்தோடு ஒருவராக ஆகி எதிர்ப்பின்றி இணங்கி நடக்க வேண்டியுள்ளது என்ற வாதத்தோடு அந்த "கலை" விமர்சகர் அவரது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.
டைட்டானிக்கின் செல்வாக்கும், அதன் மீதான விருப்பமும் வேகமாய் மறைந்து போகூடியதென்று நாம் நம்புகிறோம். ஏனைய குரல்களும், ஏனைய கண்ணோட்டங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன. கமரூன் திரைப்படத்திற்குரிய பாராட்டுகள் ஒருசில ஆண்டுகளில் ஒரு வறிய புத்திஜீவிய சகாப்தத்திற்கான ஓர் அறிகுறியாக முதன்மையாக நினைவு கூரப்படும். அதை கடந்து செல்வோர்களில் வெகு சிலர் மட்டுமே அதுகுறித்து புலம்பி கொண்டிருப்பார்கள்.
No comments:
Post a Comment