Sunday, 31 December 2017

NEHRU ,THE MAN OF DESTINY ,LOVE AND LUST




NEHRU ,THE MAN OF DESTINY ,LOVE AND LUST



அநாதை ஆன நேருவின் வாரிசு

எம்.ஓ.மத்தாய்; மலையாளியான இவர், மறைந்த பிரதமர் நேருவின் நேரடி உதவியாளர். நேருவின் மறைவிற்கு பல ஆண்டுகளுக்குப் பின், 'நேரு காலத்து நினைவுகள்' என்ற புத்தத்தை எழுதி, பரபரப்பு ஏற்படுத்தியவர். நேருவின் அந்தரங்கங்களை அறிந்தவர் என்பதால், இந்தப் புத்தகம் வெகு வேகமாக விற்றுத் தீர்ந்தது.

காசியிலிருந்து, 1948ல் டில்லி வந்தார், ஷாரதா மாதா என்ற பெண் சந்நியாசி. அவருக்கு பேட்டியளித்தார், நேரு.

ரொம்ப அழகாக, இளம் வயதினளாக இருந்தாள், சந்நியாசினி. அதன் பின், அவள் அடிக்கடி நேருவைப் பார்க்க வந்து போய் கொண்டிருந்தாள். ஒருநாள் திடீரென்று மறைந்து விட்டாள், ஷாரதா மாதா. நவம்பர், 1949ல் பெங்களூரில் இருந்த ஒரு கன்னிமடத்தினர், ஒரு கட்டுக் கடிதங்களை ஒரு ஆள் மூலம் கொடுத்தனுப்பினர்.


வட மாநிலத்திலிருந்து தங்கள் கன்னி மடத்திற்கு ஒரு பெண் வந்தாள் என்றும், அவள் ஒரு ஆண் சிசுவைப் பெற்றெடுத்தாள் என்றும், தான் யார் என்று சொல்ல மறுத்து விட்டாள் என்றும், குழந்தையையும், இந்தக் கடிதக் கட்டையும் அங்கு விட்டு விட்டு, எங்கோ போய் விட்டாள் என்றும், இந்தியில் எழுதப்பட்ட அந்தக் கடிதங்கள் பிரதம மந்திரியால் எழுதப்பட்டவை என்று அறிந்து, அனுப்பி யுள்ளதாகவும், கன்னிமடத் தலைவி (வெளிநாட்டு மாது) வந்தவரிடம் குறிப்பு அனுப்பி இருந்தார்.

இந்த விஷயங்கள் நேருவுக்குச் சொல்லப்பட்டன; அவர் கடிதங்களை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நான் சந்நியாசியாக இல்லாமல் இருந்தால் நேரு 
என்னை திருமணம் செய்திருப்பார் 
- ஷாரதா மாதா





நேரு மீது தீராத காதல்

கடந்த, 1947ல் குளிர் காலத்தில் லக்னோவுக்கு வருவதாக இருந்தார், நேரு. அப்போது, உ.பி., ஆளுனராக இருந்தார், சரோஜினி நாயுடு. இவரது மகள் பத்மஜாவை நேரு திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி பரவியது. பத்மஜாவும் மிகுந்த பரபரப்போடு இருந்தார். ஆனால், லேடி மவுண்ட் பேட்டனுடன், நேரு வந்து சேர்ந்ததும் சீறினார்,

பத்மஜா. 1948ல் அரசியல் நிர்ணய சபைக்கு பத்மஜா தேர்ந்தெடுக்கப்பட்டதும், உடனே, நேருவின் வீட்டிற்கு வந்து, பக்கத்து அறையில் தங்க ஆரம்பித்தார், பத்மஜா. 
'இவர், இப்படியே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்து விட்டால் என்ன செய்வது...' என்று நினைத்து, 'கிழக்கிந்திய நாடுகளுக்கு சுற்றுலா போகும் போது, வழியில், நேரு வீட்டில் தங்குவார், மவுண்ட் பேட்டனின் மனைவி...' என்று பத்மஜாவிடம் தெரிவிக்க, உடனே கோபித்துக் கொண்டு வெளியில் போய் தங்கினார், பத்மஜா.


இந்திராவைக் கூப்பிட்டனுப்பி, நேரு தனக்கு எழுதிய கடிதங்களை எல்லாம், தான் திருப்பிக் கொடுக்க விரும்புவதாகவும், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னார், பத்மஜா.
உடனே, என்னிடம் வந்து இந்த விஷயத்தைச் சொன்னார், இந்திரா; நான் சிரித்தேன்.




ஒரு ஆண்டு சென்றதும், நேருவின் படுக்கை அறையில் லேடி மவுண்ட் பேட்டனின் இரண்டு புகைப்படங்கள் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்து, தன் படம் ஒன்றையும் நேரு பார்க்கும்படியாக மாட்டி வைத்தார், பத்மஜா. 

ஆனால், அதை அப்புறப்படுத்தி விட்டார், நேரு.


No comments:

Post a Comment