Tuesday 12 December 2017

SOWCAR JANAKI, LEGEND OF TAMIL CINEMA BORN 1931 DECEMBER 12




SOWCAR JANAKI, LEGEND OF TAMIL CINEMA 
BORN 1931 DECEMBER 12



சௌகார் ஜானகி தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.குமுதம் ,பாலும் பழமும்,பார்த்தால் பசிதீரும் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார் .ஆனால்புதிய பறவை அவருக்கு புதிய நடிகை அந்தஸ்தை, ஸ்திரமாக அளித்தது
பிறப்பும் வளர்ப்பும்[மூலத்தைத் தொகு]
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார் .தனது 16 வது வயதில் சென்னை வானொலியில் பாடியும் உள்ளார் . அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தும் ,திருமணம் செய்ய விருப்பதால் மறுத்து விட்டார் . பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார் .இவருக்கு கிருஷ்ணகுமாரி என்ற தங்கையும் ,ராமு என்ற தம்பியும் உண்டு . கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்தார் .


திருமண வாழ்வும் ,ஏழ்மையும்[மூலத்தைத் தொகு]
ஜானகி மணம் முடித்தாலும் கணவர் வேலைக்கு செல்லாமல் ,வீட்டு மாப்பிள்ளையாகவே இருந்தார் . ஜானகியின் தம்பி ராமு ,கணவரின் சகோதரி சினிமாவில் நடிக்க இருப்பதையும் ,ஆடம்பர வாழ்வையும் கேள்வி பட்டு தானும் அவரைப்போல் நடிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது .எனவே ஜானகியின் பிரசவத்தை சாக்காக வைத்து ஷில்லாங்கை விட்டு சென்னையில் குடியேறினர் .ஜானகியின் கணவர் நிலத்தை விற்று வந்த பணத்தில் குடும்பம் ஓடியது .

சினிமா சான்ஸ் தேடல்[மூலத்தைத் தொகு]

ஜானகி 1948 களில் கர்ப்பம் தரித்து இருந்ததால் ,கைக்கு வந்த ஒரே ஒரு தெலுங்கு படமும் கை நழுவியது .அப்படத்தில் தங்கை கிருஷ்ணா குமாரி நடித்தார் .பின்னர் குழந்தை பிறந்த பிறகு சினிமா சான்ஸ் தேட ஆரம்பித்தார் .கடைசியில் நாகிரெட்டி அண்ணன் பி என் ரெட்டியை சந்தித்தார் .அவர் திருமண வாழ்க்கையும் ,சினிமா வாழ்க்கையும் ஒத்து வராது என்று மறுத்தார் .பின்னர் தன் ஏழ்மையை எடுத்து சொல்லி எல் .வி .பிரசாத் இயக்கத்தில் உருவான சௌகார் தெலுங்கு படத்தில் நடித்தார் .படம் சக்கை போடு போட வெறும் ஜானகி சௌகார் ஜானகி ஆனார்



திரையுலக வாழ்க்கை[மூலத்தைத் தொகு]

தெலுங்கில் முதல் படம்:சௌகார்; தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். என். டி. ராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.

நடிகை சௌகார் ஜானகி பற்றிய அரிய செய்திகள்[மூலத்தைத் தொகு]
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் (1931) பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர். இவரது தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார். வானொலி நாடகத்தைக் கேட்ட சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார். இதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை மணமுடித்து வைத்தனர்.
கணவருடன் விஜயவாடாவில் வசித்தார். அவர் வேறு நல்ல வேலை தேடி, சென்னைக்கு வந்தார். சினிமா ஆசை துளிர்த்ததால் இவரும் சென்னை வந்து, தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். தன் தம்பி நாகிரெட்டியிடம் அவர் சிபாரிசு செய்தார்.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இதனால் ‘செளகார் ஜானகி’ ஆனார்.
மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வளையாபதி’ படத்தில் பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட இவர், ‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’ என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன. சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.
தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க் கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்தவர். 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேறியவர். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 2 படங்களை தயாரித்தார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்தார். சமையல், தோட்டக் கலையில் வல்லவர்.
சென்னையில் 1965-ல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாக பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்) என்பார். 85-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் செளகார் ஜானகி இன்றும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறார்.
{{[2]}}


நடித்த திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
இது முழுமையான பட்டியல் அல்ல.

மகாகவி காளிதாஸ்
எதிர்நீச்சல் (1968)
திருநீலகண்டர் (1972)
ஸ்கூல் மாஸ்டர் (1973)
நீர்க்குமிழி
பார் மகளே பார்
காவியத் தலைவி
உயர்ந்த மனிதன்
இரு கோடுகள்
பாக்கிய லட்சுமி
ரங்க ராட்டினம்
தில்லு முல்லு
காவல் தெய்வம்
நல்ல பெண்மணி
இதயமலர்
உறவுக்கு கை கொடுப்போம்
தங்கதுரை
படிக்காத மேதை
பணம் படைத்தவன்
அக்கா தங்கை
உயர்ந்த மனிதன்
ஏழையின் ஆஸ்தி
கண்மலர்
காவேரியின் கணவன்
சவுக்கடி சந்திரகாந்தா
தங்கதுரை
திருமால் பெருமை
தெய்வம்
நல்ல இடத்து சம்பந்தம்
நான் கண்ட சொர்க்கம்
பணம் படுத்தும் பாடு
பாபு
மாணவன்
மோட்டார் சுந்தரம் பிள்ளை
ரங்க ராட்டினம்

No comments:

Post a Comment