Sunday 31 December 2017

CHITTOOR V.NAGAIYA ,LEGEND ACTOR DIED 1973 DECEMBER 30



CHITTOOR V.NAGAIYA ,LEGEND ACTOR 
DIED 1973 DECEMBER 30



சித்தூர் வி. நாகையா (இயற்பெயர்: வுப்பலதடியம் நாகையா, தெலுங்கு: వుప్పలదడియం నాగయ్య; 28 மார்ச் 1904 - 30 டிசம்பர் 1973) ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் பங்காற்றியவர்.
சித்தூர் வி.நாகையா– தமிழ், தெலுங்குத் திரைவானில் சிறந்த ஒரு குணச்சித்திர நடிகர் மட்டுமல்லாது பாடகர்,எழுத்தாளர்,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்.தமிழில் 1953-இல் என் வீடு என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் 200 படங்களிலும் 160 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர்களில் முதன்முதலாக 1965-இல் பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். கன்னடம், மலையாளம், இந்திப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். 28.03.1904-அன்று ஆந்திராவில் குப்பம் என்ற ஊரில் தெலுங்குப் பேசும் பிராமண குடும்பத்தில் ராமலிங்க ஷர்மா – வெங்கட லக்ஷ்மாம்பா தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இக்குடும்பம் சித்தூர் மாவட்டத்திலுள்ள திருப்பதிக்குக் குடிபெயர்ந்தது. அக்காலத்திலேயே பட்டப்படிப்பு [பி.ஏ.,] பயின்றவர். அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றினார். பின்னர் ஆந்திரா பத்திரிகா வில் இதழாளராக பணிபுரிந்தார்.

1938-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிருகலெக்ஷ்மி’ தெலுங்குப் படத்தில் கதாநாயகி கண்ணாம்பாவின் சகோதரராக முதன் முதலாக நடித்தார். தொடர்ந்து ’வந்தே மாதரம்’ [1939], சுமங்கலி [1940], தேவதா [1941], தமிழில் அசோக்குமார்’ [1941], பக்த போதனா [1942], ’சொர்க்க சீமா’ [1945], ‘தியாகய்யா’ [1946] போன்ற படங்களில் தமிழிலும் தெலுங்கிலும் சம காலத்தில் நடித்தார்.

தனது 69-ஆவது வயதில் 30.12.1973 அன்று காலமானார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்[மூலத்தைத் தொகு]
அசோக் குமார் (1941)

மீரா (1945)
நவஜீவனம்‎ (1949)
என் வீடு‎ (1953)
எதிர்பாராதது‎ (1954)
பெண்ணின் பெருமை (1956)
அமரதீபம் (1956)
நிச்சய தாம்பூலம்‎ (1962)
காலம் வெல்லும்‎ (1970)
கண்மலர்‎ (1970)
ராமன் எத்தனை ராமனடி‎ (1970)
இரு துருவம்‎ (1971)
சம்பூர்ண ராமாயணம்‎
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[மூலத்தைத் தொகு]
கலைமாமணி விருது (1962 - 1963)

பத்மசிறீ விருது, 1965[1]

No comments:

Post a Comment