Monday 1 January 2018

GREGOREAN CALENDAR EFFECT FROM 1752




GREGOREAN CALENDAR EFFECT FROM 1752




கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும்.[1][2][3] இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.[4]

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். 

இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சு மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.


ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
விளக்கம்[மூலத்தைத் தொகு]

சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆண்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது.
வரிசை எண்.மாதத்தின் பெயர்நாட்கள்
1ஜனவரி31
2பிப்ரவரி28 or 29
3மார்ச்31
4ஏப்ரல்30
5மே31
6ஜூன்30
7ஜூலை31
8ஆகஸ்ட்31
9செப்டம்பர்30
10அக்டோபர்31
11நவம்பர்30
12டிசம்பர்31
ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு மாதமும் சீரற்ற முறையில் வருகின்ற நாட்களைக் கணக்கிட கீழ்கண்ட ஈடுகோள் உதவுகிறது.

L = 30 + { [ M + floor(M/8) ] MOD 2 }
இதில் L என்பது மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைக் குறிக்கும், M என்பது 1 முதல் 12 வரையான மாதத்தின் வரிசை எண்ணைக் குறிக்கும்.
உரோமையில் புனித பேதுரு பெருங்கோவிலில்
 உள்ள திருத்தந்தை பதின்மூன்றாம்  கிரகோரியின்
கல்லறை.  நாட்காட்டி சீர்திருத்தம்
கொண்டாடப்படும் காட்சி

பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டினாது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது.

சந்திர நாட்காட்டி[மூலத்தைத் தொகு]

கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது.

ஜூலியன் நாட்காட்டி[மூலத்தைத் தொகு]
ஜூலியஸ் சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே ஜூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது. இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.


ஏற்றுக்கொண்ட நாடுகள்[மூலத்தைத் தொகு]



கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட நாடுகள் வருட வாரியாக
15001600170018001900
1582: ஸ்பெயின், போர்சுகல், பிரான்சு, போலந்து, இத்தாலி,
கத்தோலிக்க லோ நாடுகள், லக்சம்பர்க்,மற்றும் காலனி நாடுகள்
1610புருசியா1700செருமனி, சுவிச்சர்ராந்தின் கன்டோசு, நார்வே, டென்மார்க1873சப்பான்1912சீனாஅல்பேனியா
1584: பொகிமீய அரசாங்கம்1648: எல்சசு1752பிரித்தானியப் பேரரசு மற்றும் அதன் காலனி நாடுகள்1875: எகிப்து1915லதுவியாலிதுவேனியா
1682ஸ்திராஸ்பூர்க்1753சுவீடன் மற்றும் பின்லாந்து1896கொரியா1916பல்கேரியா
1918சோவியத் ஒன்றியம்எசுதோனியா
1919ரொமேனியாயூகோசுலோவியா
1923கிரீசு
1926துருக்கி

கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டி இடையே உள்ள வேறுபாடுகள்[மூலத்தைத் தொகு]
கிரிகொரியின் நாட்காட்டி அறிமுகம் செய்ததிலிருந்து, இதற்கும் ஜூலியன் நாட்காட்டிக்குமிடையேயான நாட்களின் வித்தியாசங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் அதிகத்தவண்ணம் இருந்துள்ளது. அதனைக் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்


கிரிகோரியன் அளவீடுஜூலியன் அளவீடுவேறுபாடு(கள்)
1582ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15லிருந்து
1700ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் நாள் வரை
1582ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5லிருந்து
1700ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் நாள் வரை
10 நாட்கள்
1700ம் ஆண்டு மார்ச் மாதம் 11லிருந்து
1800ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் நாள் வரை
1700ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29லிருந்து
1800ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் நாள் வரை
11 நாட்கள்
1800ம் ஆண்டு மார்ச் மாதம் 12லிருந்து
1900ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் நாள் வரை
1800ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29லிருந்து
1900ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் நாள் வரை
12 நாட்கள்
1900ம் ஆண்டு மார்ச் மாதம் 13லிருந்து
2100ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் நாள் வரை
1900ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29லிருந்து
2100ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் நாள் வரை
13 நாட்கள்
2100ம் ஆண்டு மார்ச் மாதம் 14லிருந்து
2200ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் நாள் வரை
2100ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29லிருந்து
2200ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ம் நாள் வரை
14 நாட்கள்
கிமு மற்றும் கிபி[மூலத்தைத் தொகு]
கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறைக்கு அனொ டாமினி என்று பெயர். இதற்குக் கடவுளின் ஆண்டு என்ற இலத்தீன் மொழியில் பொருளாகும். கிறிஸ்துவின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட இந்த முறை, கிறிதுவிற்கு முன் (கி.மு) என்றும் கிறிதுவிற்கு பின் (கி.பி) என்றும் காலத்தினை பகுக்கிறது


வருடத்தின் துவக்கம்[மூலத்தைத் தொகு]


நாடுகள்எண் வருடத்தின் துவக்கம்
சனவரி 1 ல்
கிரெகொரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட ஆண்டு
டென்மார்க்13 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளில் படிப்படியாக மாற்றம் [5]1700
வெனிசு15221582
ரோமானிய பேரரசு (கத்தோலிக்க நாடுகள்)15441583
ஸ்பெயின்போலந்துபோர்ச்சுக்கல்15561582
ரோமானிய பேரரசு (சீர்திருத்த நாடுகள்)15591700
சுவீடன்15591753
பிரான்சு1564[6]1582[n 1]
தெற்கு நெதர்லாந்து1576 [7]1582
லொரைன்15791682
டச்சுக் குடியரசு15831582
ஸ்காட்லாந்து1600 [8][9]1752
ரசியா1700 [10]1918
தஸ்கெனி17211750
பிரித்தானியப் பேரரசு ஸ்காட்லாந்தைதவிர17521752



கிரெகொரியன் நாட்காட்டியானது ஜூலியன் நாட்காட்டியின் மாதங்களின் தொடர்ச்சியாதலால் மாதங்கள் பெயர்கள் இலத்தின் மொழியிலிருந்து எடுக்கபட்டதாகவும் மாறுபட்ட நாட்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.

சனவரி (31 நாட்கள்), mēnsis Iānuārius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். " தொடக்கத்திற்குரிய ஜனுஸ் என்ற ரோமானியக் கடவுளின் மாதம்",[11]
பிப்ரவரி (பொதுவாக 28 நாட்கள் நெட்டாண்டில் (leap year) 29 நாட்கள்), mēnsis Februāriusஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "பெப்ருவா மாதம்]", ரோமானியத் தூய்மைத் திருவிழா,[12][13]
மார்ச் (31 நாட்கள்), mēnsis Mārtiusஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "செவ்வாய் கோள் மாதம் (month of Mars),[14] ரோமானிய போர்க்கடவுளைக் குறிக்கும் மாதம்
ஏப்ரல் (30 நாட்கள்),mēnsis Aprīlisஎன்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். உறுதியில்லா பொருள் , ஏப்ரோடைட் என்ற ரோமானியக் கடவுள் பெயரை குறிக்கும் மாதம் [13][18]
மே (31 நாட்கள்), mēnsis Māius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "விவசாயத்துக்குரிய பெண் கடவுளான மயாவின் மாதம்",[19]
சூன் (30 நாட்கள்), mēnsis Iūnius என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "ஜூனோ மாதம்",[20] திருமணம், குழந்தை பிறத்தல், மற்றும் ஆட்சி செய்தலுக்கான ரோமானிய பெண் கடவுள்
சூலை (31 நாட்கள்), mēnsis Iūlius என்ற லத்தீன் மொழியிலிருந்து, "ஜூலியஸ் சீசரின் மாதம்", ஜூலியஸ் சீசர் பிறந்த மாதம்  bc[21]
ஆகத்து (31 நாட்கள்), mēnsis Augustus என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். "அகஸ்தஸ் மாதம்", [22]
செப்டம்பர் (30 நாட்கள்), mēnsis september என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "ஏழாவது மாதம்", [23]
அக்டோபர் (31 நாட்கள்), mēnsis octōber என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "எட்டாவது மாதம்",[24]
நவம்பர் (30 நாட்கள்), mēnsis november என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "ஒன்பதாவது மாதம்",[25]
திசம்பர் (31 நாட்கள்), mēnsis december என்ற லத்தீன் மொழியிலிருந்து வந்த சொல். கி.மு. 153 ஆம் ஆண்டுக்கு முன் ரோமானிய நாட்காட்டியில் "பத்தாவது மாதம்",[26]

No comments:

Post a Comment