SAINTHAVI ,SINGER BORN 1990 JANUARY 3




SAINTHAVI ,SINGER BORN 1990 JANUARY 3




சென்னை: சினிமா இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கும், பின்னணி பாடகி சைந்தவிக்கும் இன்று (27-6-2013ஆம் தேதி) சென்னையில் திருமணம் நடைபெற்றது.




பல ஆண்டுகளாக காதலித்து வந்த இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமாரும், பாடகி சைந்தவியும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி பெற்றோர்களின் சம்மத்துடன் இருவருக்கும் நேற்று (26ஆம் தேதி) ஓட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது.





இதைத் தொடர்ந்து இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமக்களை இயக்குநர்கள் பாலு மகேந்திரா, கே.பாக்யராஜ், பாலா, மணிரத்னம், ராஜீவ் மேனன், விஜய், நடிகர் சூர்யா ஆகியோர் நேரில் வாழ்த்தினர்.




பூர்ணிமா பாக்யராஜ், கிரேஸி மோகன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா, ஷோபா சந்திரசேகர், நித்யஸ்ரீ மகாதேவன், இசையமைப்பாளர் தேவா, சாந்தனு உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.




மேலும், முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் திருமணத்துக்கு வந்திருந்தனர். இன்று மாலை இதே அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.





Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER