Wednesday 3 January 2018

ANJALI DEVI ,TELUGU ACTRESS DIED JANUARY 13,2014





 ANJALI DEVI ,TELUGU ACTRESS
DIED JANUARY 13,2014


















அஞ்சலிதேவி (Anjali Devi, தெலுங்கு: అంజలీదేవి, 24 ஆகத்து 1927 - 13 சனவரி 2014) பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர்
வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு]
அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.[1]


1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயரைச் சூட்டினார். அந்த படத்தின் மூலம் இவர் பெரும் புகழ் பெற்றார். ஏறத்தாழ 350 தெலுங்குத் திரைப்படங்களிலும், சில தமிழ், கன்னடப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.[1

அரிச்சந்திரா நாடகத்தில் லோகிதாஸ் வேஷம் கட்ட வேண்டிய பையன் சுகவீனம் அடைந்ததால் , 4ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அஞ்சலி தேவி பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு , தனது 9ம் வயதில் நடிப்புத் தொழிலை மேற்கொண்டார். தனது 14ம் வயதில் கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர் என்ற தகுதிகளையுடைய ஆதி நாராயண ராவ் என்பவரை மணந்தார். 18 வயதில் , 2 ஆண்குழந்தைகளுக்குத் தாயானார். கணவருடனும் 2 குழந்தைகளுடனும் ஹீரோயினாக நுழைந்த ஒரே நடிகை இவராகத்தான் இருக்கமுடியும்.
தன்னுடைய துறுதுறு பார்வையாலும் கொள்ளை அழகாலும், நடனத் திறமையாலும் அனைவரையும் கவர்ந்தார். தெலுங்கு, தமிழ், படங்களில் மட்டுமல்லாது, ஹிந்திப் படங்களிலும் கொடிகட்டிப் பறந்தார். முதலில் நாடகங்களிலும், நடனங்களிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தன் கணவரின் சங்கீதங்களில் மட்டுமே நடனமாடிவந்தார். புகழ் வாய்ந்த நடிகைகளான பானுமதி, புஷ்பவல்லி முதலியோரை வைத்து படம் எடுத்துவந்த, புகழ் வாய்ந்த டைரக்டரான சி.




புல்லைய்யா அஞ்சலி தேவியை வைத்துப் படம் எடுக்க விரும்பியபோது தயங்கிய இவரை உற்சாகப்படுத்தி, வலியவந்த அந்த சான்ஸை ஏற்றுக்கொள்ளவைத்தவர் இவரது கணவரே. ‘கொல்லபாமா’ என்ற இவரது முதல் படத்தைத் தொடர்ந்து தமிழ்,, தெலுங்கு, ஹிந்தி முதலிய மொழிப் படங்கள் மளமளவென குவியத் தொடங்கின. தமிழில் ‘ஆதித்தன் கனவு’, ‘மங்கையர்க்கரசி’, என்று ஆரம்பித்து எண்ணிலடங்கா படங்களில் நடித்தார். இவர் ஜோடி சேராத நடிகர்களே இல்லை என்று கூறலாம். ஹிந்தியில் திருபாய் தேசாயின் ‘ஷுக் ரம்பா’ மிகப் பெரிய வெற்றியைத் தந்தது. அஞ்சலி புரடக்ஷன்ஸின் முதல் படமான ‘பூங்கோதை’ யே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் படமாம். ஆனால் ரிலீஸில் ‘பராசக்தி’
முந்திக்கொண்டதாம். நடிகர் திலகத்தைப் பற்றிப் பேசும்போது நெகிழ்ந்து போகிறார். ”அம்மா! என்னவொரு நடிகர், அவர்! அப்படியொரு நடிகர் கிடைப்பாரா,இனி? தமிழ் சினிமாவுக்குக் கடவுள் தந்த பரிசு, அவர்!” என்று பழைய நினைவுகளில் மூழ்கிப் போகிறார். ஹிந்தியில் அஷோக் குமார், தமிழில் எம்.ஜி.ஆர். இவர்களைப் பற்றியும் சிலாகிக்கிறார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த ‘சக்கரவர்த்தித் திருமகன்’ 200 நாட்களையும் தாண்டி ஓடியது. பெண்மையின் மேலான குணங்களை வெளிப்படுத்துவதாகவே, இவருடைய கேரக்டர்கள் அமையும். ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் வரும் ”அழைக்காதே” பாடலுக்கு இவர் ஆடிய நடனத்தையும் இவருடைய அழகுத் தோற்றத்தையும் இன்றளவும் மறக்காத பழைய ஜெனரேஷன் இன்னமும் உண்டு. ஹீரோயினாகக் குணச் சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, வெரைட்டி கொடுக்கவேண்டும் என்ற ஆசையும் வந்ததாம். அதன் விளைவாக வெளிவந்ததே ‘அடுத்த வீட்டுப் பெண்’. டி.ஆர். ராமச்சந்திரன், தங்கவேலு இவர்களுடன் இவர் பண்ணிய காமெடி பிக்சர் அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தது. இதுவே தெலுங்கில் ‘பக்கிந்த அம்மயி’ என்று . ரீமேக் ஆனது. அக்கால ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்தார்.
எம்.ஜி.ஆர்., டி.ஆர். மஹாலிங்கம்,சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், அஷோக் குமார், என். டி. ராமா ராவ் ,நாகேஸ்வர ராவ் என்று இவரது ஹீரோக்கள் பட்டியல் நீளும். ஒரு நடிகை என்பதுடன் நின்று விடாமல் பலவித பதவிகளையும் வகித்தார். ஃபில்ம் சேம்பர் ஆஃப் காமர்ஸின் வைஸ் பிரஸிடென்ட், திருப்பதி வெங்கடேஸ்வரா யுனிவர்சிடியின் செனட் மெம்பர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தன் கணவரைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டு க்கொள்ளும் அஞ்சலி தேவி, அவர் ஒரு புகழ்பெற்ற மியூசிக் டைரக்டர் என்று கூறுகின்றார். மிகப் பெரிய அளவில் ஹிட்டான ‘தேசுலாவுதே’, ‘அழைக்காதே’ முதலிய பாடல்களை இன்றளவும் மறக்க முடியுமா என்று வியக்கிறார். ஆம்! மறக்க முடியாதுதான்!

தவிர்க்க முடியாத நாயகி

50 களில் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்த அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள பெத்தாபுரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலி தேவியின் நிஜப்பெயர் அஞ்சனி குமார். நடிப்புத்தொழிலில் ஈடுபட சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார்.

1936 ல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவரை எல்.வி பிரசாத் தனது 'கஷ்ட ஜீவி' என்ற படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அந்த படம் சில பிரச்னைகளால் முழுமை பெறவில்லை. பின்னரே நாடகங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்த பிரபல இயக்குனர் புல்லையா, தன் இயக்கத்தில் வெளியான 'கொல்ல பாமா' படத்தில் கதாநாயகியாக வாய்ப்பு தந்தார். அவரே அஞ்சலிதேவிக்கு அந்தப்பெயரை சூட்டினார். அந்த படத்தின் புகழால் தொடர்ந்து பல படங்களில் நடித்த அஞ்சலிதேவி 50களில் திரையுலகின் தவிர்க்கமுடியாத நாயகியானார்.

முதல் கலர் படத்தில் நடித்தவர்

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அஞ்சலிதேவி, தெலுங்கில் மட்டுமே 350 படங்கள் நடித்திருக்கிறார். குறும்பு, உணர்ச்சிவயமான நடிப்பு, நடனம், வீரமங்கை...-இதுதான் ரசிகர்களை கட்டிப்போட காரணமான அஞ்சலிதேவியின் பன்முக சிறப்பு அம்சங்கள்.

1940 ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பி. ஆதிநாராயணராவை காதலித்து திருமணம் செய்துகொண்ட அஞ்சலிதேவிக்கு, 2 மகன்கள். தன் கணவருடன் இணைந்து அஞ்சலி தேவி பிக்சர்ஸ் என்ற பெயரில் பல வெற்றிகரமான தெலுங்கு படங்களை தயாரித்தார். தெலுங்கு திரையுலகின் முதல் கலர் படமான 'லவகுசா'வில் நடித்த பெருமைக்குரியவர் அஞ்சலிதேவி.

கனவுக்கன்னி

50 களில் நளிமான நடனம், நடிப்பு, நாகரிகமான உடையலங்காரம் என பன்முக திறைமையுடன் கலக்கிய அஞ்சலி தேவி, ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். அடுத்த வீட்டுப்பெண், கனணே கண்கண்ட தெய்வம் உள்ளிட்ட இவரது தமிழ்ப்படங்களில் இவரது நடிப்பு அந்த கால இளைஞர்களை அசத்திப்போட்டது என்றால் அதில் மிகையில்லை.

அவர் தன் வாழ்நாளில் சிறந்த படங்களாக குறிப்பிட்டவை 'ஸவர்ண சுந்தரி' மற்றும் 'அனார்கலி' போன்றவை. இதில் 'அனார்கலி' அவரது சொந்தப்படம். அதில் ஏ. நாகேஸ்வரராவுடன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த 2 திரைப்படங்களும் அஞ்சலிதேவிக்கு ரசிகர்களிடம் நிலையான இடத்தை கொடுத்த படங்கள்.

ஒரு பக்கம் சொந்த தயாரிப்புகள், இன்னொரு பக்கம் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்த அஞ்சலி, 50 மற்றும் 60 களில் திரையுலகின் அத்தனை பிரபலங்களுடன் நடித்தவர் .



அஞ்சலி தேவி


லதாமங்கேஷ்கர் பாடிய ‘குஹு குஹு போலே கொய்லியா’ என்ற ஹிந்திப் பாடலுக்கு,”சிறந்த திரை விமர்சகர்” என விருது பெற்ற ஒரே தென்னிந்தியர் தன் கணவரே என்று பெருமைப்படுவதோடு, தன் கணவருக்கு ”வினோத வக்கேயகாரா”என்றும் விருது கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். தன் கணவரின் இசைக்கு, இளையராஜா பெரிய ரசிகர் என்று பெருமைப்படும் இவர், தங்களது ”ஆதி நாராயணா ஹிட்ஸ்” என்ற ஆல்பத்தை வெளியிடும் பொறுப்பை இளையராஜாவிடம் ஒப்படை த்திருப்பதாகக் கூறினார். ” என் கணவர் ஒரு மாமேதை” என்று கூறி தான் அவரை மிஸ் பண்ணுவதாகக் கூறும்போது ஒரு நிமிடம் முகம் வாடிப் போனார். உடனே சுதாரித்துக் கொண்டு ‘கமல், ரஜனி இருவரும் என்னுடைய புதல்வர்கள் என்கிறார். ‘அன்னை ஓர் ஆலயம்’ என்ற படத்தில் ரஜனிக்கு தாயாக நடித்ததில் சந்தோஷப்படுகிறார்.
கல்விக்காக வாரிக்கொடுக்கும் மனமும் உண்டு. மறைந்த நடிகர் நாகைய்யா அவர்களின் பெயரில் ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து, ஆண்டுதோறும் 10 ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். தன்னுடைய கணவரின் பெயரில் இன்னொரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கவும் திட்டம் வைத்துள்ளார். நல்ல நடிகை மட்டுமல்ல ; மனித நேயம் மிக்கவராகவும் இருக்கிறார். கடைசியாக ஒரு ஹைலைட்டான விஷயம், 1946லேயே சென்னை வந்துவிட்ட நான் சென்னையைவிட்டு போக மனமில்லை. அதனால் நான் ‘சென்னை -வாசி ‘மட்டுமல்ல. ‘சென்னை- நேசி’ யும் கூட! என்று அசத்துகிறார்.

நாளடைவில், அஞ்சலிதேவி நடித்த தெலுங்குப் படங்கள் தமிழகத்தில் டப் செய்யபப்ட்டு ரிலீஸாகி வெற்றி பெறவே, அவர் தமிழ் சினிமாவிலும் பிரபலமானார். இதையடுத்து, ‘மகாத்மா உதங்கர்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்தார். பிறகு 1949 சின்னப்பாவுடன் ‘மங்கையர்க்கரசி’ என்ற படத்தில் நடித்தார். 1949-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ‘மாயாவதி’ என்ற படத்தில் டி.ஆர்.மகாலிங்கத்துடன் இணைந்து நடித்தார்.

1954-ல் ஏவி.எம். தயாரிப்பான பெண் படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா ஆகியோருடன் இணைந்து நடித்தார். தமிழ்ப்படங்களில், அவர் சொந்தக்குரலில் பேசி நடித்தது குறிப்பிடத்தக்கது. 1955-ல் நாராயணன் கம்பெனி தயாரித்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற மெகாஹிட் படத்தில், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில், அஞ்சலிதேவியின் நடிப்பு அற்புதமாக அமைந்தது. இந்தப்படம், அவர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஆந்திராவில் ஏற்கவே பிரபலமாகியிருந்தவர், தமிழ்ப்பட உலகிலும் பானுமதி, பத்மினி வரிசையில் இடம் பெற்றார். ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்’, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்தார். ஜெமினி கணேசனுடன் இவர் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ சிறந்த படம் என்ற பெயருடன் வசூலையும் குவித்தது. மற்றும் ‘இல்லறமே நல்லறம்’, ‘பூலோக ரம்பை’, ‘வீரக்கனல்’ ஆகியப் படங்களில் ஜெமினிகணேசனுடன் நடித்தார்.


நடிகையாக மட்டும் இன்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்ற அஞ்சலிதேவி, வயதான பிறகு அண்ணி, அக்கா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்து தொடர்ந்து திரையுலகில் பயணித்த இவர், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். (டி.என்.எஸ்)




பி.யூ.சின்னப்பா, டி.ஆர்,மகாலிங்கம் போன்றவர்களுடன் தோன்றிய அஞ்சலிதேவிக்கு 1955-ல் ஜெமினி கணேசனுடன் இணைந்து நடித்த கணவனே கண்கண்ட தெய்வம் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

சிவாஜி கணேசனுடன் ‘முதல் தேதி’, ‘நான் சொல்லும் ரகசியம்’ படங்களிலும், எம்.ஜி.ஆருடன் ‘சக்ரவர்த்தி திருமகள்‘, ‘மன்னாதி மன்னன்’ ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.

ஆனால் தமிழில், ஜெமினி கணேசனுடன்தான் அதிக படங்களில் நடித்தார் அஞ்சலிதேவி. அவருடன் நடித்த ‘காலம் மாறிப்போச்சு’ குறிப்பிடத்தக்க ஒரு வெற்றிப்படமாகும்.

அஞ்சலிதேவி, சொந்தப்படங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி பெற்றார். ஜெமினி கணேசனுடன் ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ படத்திலும், நாகேஸ்வரராவுடன் ‘அனார்கலி‘யிலும் நடித்தார்.

இந்தப் படங்களில் இடம் பெற்ற பாடல்கள், மிகவும் பிரபலமாயின. இசை அமைத்தவர் அவரது கணவர் ஆதிநாராயணராவ். அஞ்சலிதேவி தயாரித்து இன்னமும் இரசிகர்களை ஈர்க்கும் நகைச்சுவைப் படம் ‘அடுத்த வீட்டுப் பெண்’.


தெலுங்கில், என்.டி.ராமராவுடன் பல படங்களில் அஞ்சலி தேவி நடித்துள்ளார். அவற்றில் முக்கியமானது ‘லவகுசா’. இப்படம் தமிழிலும் வெளிவந்தது.





.






No comments:

Post a Comment