Monday 8 January 2018

KIM JONG UN , THE CHIEF HEAD OF NORTH KOREA BORN 1984 JANUARY 8



KIM JONG UN ,
THE CHIEF HEAD OF NORTH KOREA 
BORN  1984 JANUARY 8




கிம் ஜொங்-உன் (Kim Jong-un), அல்லது கிம் ஜோங்-யூன் [1] முன்னதாக கிம் ஜொங்-ஊன் அல்லது கிம் ஜங்-ஊன்[2] (பிறப்பு சனவரி 8,  1984),[3] மறைந்த வட கொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகனாவார்.[4] 2010ஆம் ஆண்டின் கடைசிக்காலங்களில் இருந்து, நாட்டுத் தலைமையை ஏற்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த வாரிசும் ஆவார். அவரது தந்தையாரின் மறைவிற்குப் பின்னர் "பெரும் அடுத்த தலைவராக" வட கொரியத் தொலைக்காட்சிகளில் அறிவிக்கப்பட்டவரும் ஆவார்..[5]

வட கொரிய இராணுவத்தில் டீஜங் எனப்படும் ஜெனரல் நிலைக்கு இணையான பதவியில் உள்ளார்.[6] கிம் வட கொரியாவில் கணினி பொறியியல் படித்துள்ளதாகத் தெரிகிறது[7].கிம் இல் சுங் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றுள்ள கிம் ஜொங்-உன் கிம் இல் சுங் இராணுவ அகாதமியிலும் பிறிதொரு பட்டம் பெற்றுள்ளார்.[8].

வடகொரிய தலைவர் கிம் யொங் உண் செப்டம்பர் 2014 முதல் பொது வைபவங்களில் தென்படாமல் இருப்பது பலவிதமான வதந்திகளுக்கு வழி செய்துள்ளது. வடகொரியாவின் 69 வது ஆண்டு நிறைவு வைபவத்திலும் காணவில்லை. இந்த மர்மம் குறித்த ஊகங்களை குறைத்துப் பேசும் அந்த நாட்டின் அரசாங்க ஊடகம், அவருக்கு அசௌகர்யம் தரும் உடற்சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றது.[9]


மேற்குநாடுகள் தமது தலைவர்களின் மனைவிமாரை முதலம்மையார் (First Lady) என அழைத்து கனம் பண்ணிக்கொள்வார்கள். வீட்டில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளபவர் நாட்டிலும் அவ்வாறே நடந்து கொள்வார் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் அதிபர் ஒபாமாவின் மனைவி மிசேல் ஒபாமா அமெரிக்க முதலம்மையார் ஆவார். ஆனால் வடகொறிய அதிபரின் தந்தை தனது அரச நிகழ்வுகளில் தனது குடும்பத்தை அதிகம் சேர்த்துக்கொள்வதில்லை. இது மேற்கு நாடுகளின் வழமைக்கு மாறானது. அவர் எதிலுமே மேற்கு நாடுகளுக்கு மாறான போக்கையே கடைப்பிடித்து வந்தார்.

புதிய தலைவர் கிம் யொங் உன் வந்த போது பலர் இவர் மேற்கே சாயலாம் என ஆரூடம் கூறினார்கள். பிரதானமாக இவர் மேற்கில் படித்தவர் எனவே உல்லாச வாழ்க்கையை அனுபவித்தவர், ஆகவே அதை எளிதில் மறக்கமாட்டார் எனக்கூறினார்கள். ஆனலும் அதற்கான எந்த உறுதியான சமிஞ்சைகளும் மேற்கிற்கு இதுவரையில் வரவில்லை. அவர் தனது பழைய அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிளைச் சரி செய்யும் வரை அப்படியான சமிஞ்சைகளை அனுப்பமுடியாது என விளக்கம் அளிப்போரும் இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே அண்மையில் தனது படைத்தலைவரை இளைப்பாறவைத்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனல் இது எவ்வளவுக்கு சரி என்பது தெரியாவிட்டாலும் அதைவிட சுவாரசியமான குசுகுசுப்பொன்று மேற்குநாடுகளினது ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருக்கிறது. இதற்கு தூபம் பொடுவது தென் கொறிய ஊடகங்கள்தாம்.

அண்மையில் வடகொறிய அரச தொலைகாட்சியில் தலைவர் கிம்-ஜொங்-உன் இன் சில நிகழ்ச்சிகளின் படங்கள் வெளிவரும் போது ஒரு அங்கே ஒரு மர்மப் பெண்ணும் தோன்றி மறைவது அவதானிக்கப்பட்டிருக்கிறது. தென்கொறிய ஊடகங்கங்கள் அந்த பெண்ணை பற்றி ஆருடகங்கள் வெளியிட ஆரம்பித்தார்கள். இதில் மேலும் பரபரப்பு என்னவென்றால் அமெரிக்காவின் சிறுவருக்கான பொழுதுபோக்கு வியாபாரத்தில் முன்னனி வகிக்கும் டிஸ்னியின் "சித்திர பாத்திரங்கள்" நடித்த நிகழ்ச்சியொன்றில்த்தான் முதல் முதலில் தலைவர் கிம்-ஜொங்-உன் பக்கத்தில் இந்த பெண் உலாவியது அவதானிக்கப்பட்டது. இது மேற்கு நாடுகளிலும் காட்டுத்தீயாக பரவியது.

காலநேரம் சரியாக வந்திருப்பதை கண்டுகொண்டும் போலும் இப்போது வட கொறிய டி.வி., தலைவர் கிம் ஜொங் உன் மணம் முடித்தவர் என்றும், அந்த பெண் அவரின் மனைவி என்றும் நொடியை அவிழ்த்துவிட்டிருக்கிறது. இப்போது மேற்கு நாடுகள் தமது ஆருடத்தை ஆரம்பிக்கின்றன. அதாவது வடகொறியா மேற்கே சாய்கிறதா? அதுவா டிஸ்னி நிகழ்சிக்கு கணவன் மனைவியாக இருவரும் சென்றது மட்டுமல்ல, அதை ஊடகங்களுக்கும் தெரியவைத்து உலகிற்கு அறியத்தந்தது?

No comments:

Post a Comment