Monday 15 January 2018

INDIAN ARMY DAY,JANUARY 15




INDIAN ARMY DAY,JANUARY 15
இந்திய படை நாள் 




உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ராணுவ பலம் என்ன?

நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம்    காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந் தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது. 


அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி வலுத்தனம் செய்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடி அழிக்கிறது. மேலும் எல்லை பகுதிகளிலும் ரோடுக ளை போட்டு ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுநாள் வரை இந்தியாவின் வட பகுதியில் மட்டுமே வாலாட்டி வந்த சீனா இப் போது தென் பகுதியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இலங் கையிலும் சீனா இப்போது அமைதியாக அங்கு ஆழமாக காலூன்றி வருகிறது. இதை நாம் அமைதியாக பார்த்து கொண்டு இருப்பது நல்லது அல்ல. 

இந்தியாவிற்கு உடனடியாக எந்தவித ஆபத்து இல்லை என்றாலும் நாம் சும்மா அப்படியே இருந்து விடக்கூடாது.பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ளும் வகையில் நமது ராணுவம் பலப்ப டுத் தப்படவேண்டும். அதே நேரத்தில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல் கள் போன்று ராணுவத்துறையிலும் ஊழல் போன்றவை நடக்காமல் பார்த்து கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். 

உலகின் ராணுவ பலத்தில் நம் இந்தியா எந்த ரேங்கில் இருக்கிறது என்றும். நம் நாட்டுக்கும் நமது அண்டைய நாடுகளுக்கும் உள்ள பலத் தையும் கிழே காண்போம்.



உலகின் ராணுவ பலம் வாய்ந்த முதல் 10 நாடுகள் விபரம் :



1 அமெரிக்கா

2 ரஷ்யா

3 சீனா

4 இந்தியா

5 யுனைடெட் கிங்டம் (UK)

6 துருக்கி

7 செளத் கொரியா

8 பிரான்ஸ்

9 ஜப்பான்

10 இஸ்ரேல்

No comments:

Post a Comment