PANDIAN ,TAMIL ACTOR BORN JANUARY 5, 1959



PANDIAN ,TAMIL ACTOR 
BORN JANUARY 5, 1959




பாண்டியன் (இ. ஜனவரி 10, 2008), தமிழ்த் திரைப்பட நடிகராவார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண்வாசனை படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.


திடீர் நடிகர் 
பாண்டியன் மதுரையில் வளையல் கடை வைத்திருந்தார் .ஒரு சமயம் பாரதி ராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் பண்ணிவிட்டு காரில் அமர்ந்திருந்தார் .அப்போது காரில் எட்டி பார்த்த பாண்டியன் முகம் பாரதிராஜாவுக்கு பிடித்து போயிற்று .அதற்கு காரணம் இட்டலி போன்ற வட்ட முகம் .இது பற்றி சிவாஜியிடம் கூட சொல்லியிருக்கிறார் .

மண்வாசனையைத் தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவற்றில் புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடி தென்றல், கிழக்குச் சீமையிலே போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தன.

நாளடைவில் பட வாய்ப்புகள் குறைந்ததைத் தொடர்ந்து அவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவந்தார்.

துணை நடிகை கற்பழிப்பு புகார் 

பாண்டியனும் இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு துணை நடிகையை கற்பழித்ததாய் போலீசில் 
புகார் செய்யப்பட்டது .அப்போது ராதாரவி இதில் தலையிட்டு புகாரை வாபஸ் வாங்கி சுமூகமாக
முடித்து வைத்தார் . 2001 ஆம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் சேர்ந்து அக்கட்சிக்காகக் கூட்டங்களில் பேசி வந்தார்.

மறைவு[மூலத்தைத் தொகு]

நோய் வாய்ப்பட்டிருந்த பாண்டியன் ஜனவரி 10, 2008 அன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலை 10 மணியளவில் தனது 48வது வயதில் காலமானார். இவருக்கு லதா என்ற மனைவியும், ரகு என்கிற 15 வயது மகனும் உள்ளனர்.


Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER