Tuesday 2 January 2018

SHANTHI KRISHNA , TAMIL-MALAYALAM ACTRESS BORN JANUARY 2,1964.


SHANTHI KRISHNA ,
TAMIL-MALAYALAM ACTRESS 
BORN JANUARY 2,1964.



தமிழ் மற்றும் மலையாள நடிகை.born january 2,1964.

இவர் பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரியாவார். இவர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமுமே மும்பையில். இவரது தந்தை ஆர்.கிருஷ்ணன் மலையாளி. தாயார் சாரதா தமிழகத்தைச் சேர்ந்தவர்.

இவருடன் பிறந்தவர் சுரேஷ் கிருஷ்ணாவுடன் சேர்த்து ஸ்ரீராம், சதீஷ். இவர் நாட்டியம் கற்றவர். 1980-ஆம் ஆண்டு ‘சாலினி என்றெ கூட்டுகாரி’ என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் “பன்னீர் புஷ்பங்கள்” படத்தில் சுரேஷுடன் அறிமுகம் செய்யப்பட்டார். விசுவின் “மணல் கயிறு” படத்தில் எஸ்.வி.சேகரின் மனைவியாகஇப்படம் வெற்றிகரமாக ஓடியது. 

அதைத் தொடர்ந்து சின்னமுள் பெரிய முள், இராம நாராயணன் இயக்கத்தில் சிவப்பு மல்லி, முக்தா வி.சீனிவாசனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப்படமான “சிம்லா ஸ்பெஷல்” படத்தில் எஸ்.வி.சேகரின் தங்கையாகவும், கமலா காமேஷின் மகளாகவும், ஆர்.பாஸ்கரின் காதலியாகவும் நடித்தார். சிவசங்கரின் இயக்கத்தில் அன்புள்ள மலரே [1984] மற்றும் நேருக்கு நேர் போன்ற படங்களில் நடித்தார்.

1984-ஆம் ஆண்டு இவர் மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரைத் திருமணம் செய்தார். 1991-ஆம் ஆண்டு மீண்டும் ”நியாயம் வெக்தாமாக்குந்நு” என்ற மலையாளப் படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1995-ஆம் ஆண்டு இவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் பல மலையாளப் படங்களில் நடித்துவந்தார். முதல் கணவர் ஸ்ரீநாத் 2010-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.


சாந்திகிருஷ்ணா சதாசிவன் பஜோரே என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர் ராஜிவ் காந்தி கல்வி நிலையங்களின் செயலாளராக 1999-இல் பதவியில் இருந்தவர். இவர்களுக்கு மிதுல், மிதாலி என்ற இரு குழந்தைகள். தற்போது இவர் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

பன்னீர் புஷ்பங்கள் பட நாயகி நடிகை சாந்தி கிருஷ்ணா 2-வது கணவரை விவாகரத்து செய்துள்ளார்


தமிழில் நடிகர் சுரேஷ் நடித்த பன்னீர் புஷ்பங்கள் படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை சாந்தி கிருஷ்ணா. இவர் மலையாளத்தில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 1984-ம் ஆண்டு மலையாள நடிகர் ஸ்ரீநாத் என்பவரை திருமணம் செய்தார். 11 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்த இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர்.


அதன்பின் 1998-ல் கொல்லத்தைச் சேர்ந்த அமெரிக்க தொழில் அதிபரான பஜோர் சதாசிவம் என்பவரை சாந்தி கிருஷ்ணா 2-வது திருமணம் செய்தார். அவர்களுக்கு இடையேயும் மனஸ்தாபம் ஏற்பட்டு 2-வது கணவரையும் சாந்தி கிருஷ்ணா பிரிந்தார்.

மேலும் அவர்கள் கர்நாடகாவில் வசித்து வந்ததால் அங்குள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு செய்தனர். நேற்று அவர்களுக்கு விவாகரத்து அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாக சாந்தி கிருஷ்ணா அறிவித்துள்ளார்.

Shanthi Krishna is an Indian dancer and film actress known for her work in Malayalam cinema along with a few Tamil films. She was a popular lead actress of the 1980s and 1990s. She won the Kerala State Film Award for Best Actress for her performance in Chakoram (1994).

Early life[edit source]
She is born to R. Krishan and Sharada in a Tamil Brahmin Iyer family in Mumbai. Her mother tongue is Tamil. She completed her education in Mumbai S.I.E.S College and General Education Academy. She has three brothers, Sreeram, Satheesh and Suresh Krissna who is a film director. She was a known dancer and debuted to film field with Salini Ente Kootukari in 1980.[1][2][3]

Problem in Tamil Cinema[edit source]
After Panneer Pushpangal ,she had committed in Manal Kayiru directed by Visu ,hero ,S.V.Sekar. While acting in a Firstnight scene ,she refused to act , finally she cried a lot . This shocked the unit and send off her ,and finished the scene with some torned flowers and broken bangles. this will shocked the tamil industry and cancelled many suitings and ruined her reputation.

Personal life[edit source]

Shanthi Krishna was married to Malayalam actor Sreenath in 1984 and later divorced him in 1995. She stopped acting for a while and made her second entry in 1991 as heroine of Mammootty in Nayam Vyakthamakkunnu.[4] Shanthi Krishna has filed for divorce from her husband Bajore Sadasivan.[5]

Shanthi Krishna was again married to Sadasivan Bajore, Secretary of Rajiv Gandhi Group of Institutions in 1998 & 2016 is divorced.[6] They have two children, Mithul and Mithali. She herself restricted as a housewife and always kept away from public life. Currently she resides at R.T. Nagar Bangalore.[7][8]

She received the Kerala State Film Award for Best Actress for her performance in the Malayalam film Chakoram in 1994.


No comments:

Post a Comment