PREITY ZINTA ,INDIAN ACTRESS BORN 1975 JANUARY 31



PREITY ZINTA ,INDIAN ACTRESS 
BORN 1975 JANUARY 31





பிரீத்தி சிந்தா (ஆங்கிலம்:Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே திரைப்படத்தில் அறிமுகமானார்.

ப்ரீத்தி சிந்தா ரகசிய திருமணம்
Tweet Published on March 3rd, 2016

நடிகை பிரீத்தி ஜிந்தா தன்னுடைய அமெரிக்க காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். பிரபல இந்தி நடிகை ப்ரீத்தி ஜிந்தா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் ப்ரீத்தி.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், தன்னுடைய தொழில் கூட்டாளியுமான நெஸ் வாடியாவுக்கும், பிரீத்தி ஜிந்தாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும், சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள் இருவரும் பிரிந்தனர்.




இதைத் தொடர்ந்து, அமெரிக்காவை சேர்ந்த ஜெனி குட்எனப் என்பவருக்கும் ப்ரீத்திக்கும் காதல் மலர்ந்தது. ஆனாலும் இந்தக் காதல் குறித்து ரகசியம் காத்து வந்தார் ப்ரீத்தி. இந்த நிலையில், அவர் ஜெனி குட்எனப்பை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரகசியமான முறையில் திருமணம் செய்து கொண்டார்.

எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய தோழியும், ஆடை வடிவமைப்பாளரும் ஆன பராகான் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பரும், இந்தி நடிகருமான கபிர் பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சக நடிகையான சுஷ்மிதா சென் இந்த திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER