MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER BORN JANUARY 3, 1930





MEESAI MURUGESH ,MIMICRY ,DRUMMER
BORN JANUARY 3, 1930






மீசை முருகேஷ் அடிப்படையில் ஒரு இசைக்கலைஞர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைக் குழுவில் தவில் வாசிப்பவராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். பிறகு சின்னச் சின்ன வேடங்களில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
  விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் தனது குரலால் ஒரு ஊரையே மிரட்டியவராக நடித்திருப்பார். ‘காதலுக்கு  மரியாதை‘, ‘உயிரே உனக்காக‘, ‘உன்னால் முடியும் தம்பி‘,  ஆண்பாவம், அமைதிப் படை, ஊமை விழிகள் , ‘பெரியண்ணா‘, ‘மக்கள் என் பக்கம்’  உட்பட சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் மீசை  முருகேசன். கடைசியாக, ‘பிரிவோம் சந்திப்போம்‘ படத்தில்  நடித்திருந்தார். இந்தப் படங்கள் அவரது மைல் கற்களாகும். மறைந்த முருகேசனுக்கு கண்ணம்மா  என்ற மனைவியும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் சரஸ்வதி,  செல்வி ஆகிய மகள்களும் உள்ளனர்.

சிறு வயதிலேயே இசைத்துறையில் நுழைந்தவர் மீசை முருகேசன்.  அவர் தந்தை சுப்ரமணிய முதலியார் அந்த காலகட்டத்தில் பிரபல தவில்  வித்வான். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி உள்ளிட்ட சில  இசைக்கருவிகளை மீசை முருகேசனே உருவாக்கி, ‘அபூர்வ  தாளவாத்தியங்கள்‘ என்ற பெயரில் உலகம் முழுக்க இசைக்கச்சேரி  நடத்தி உள்ளார். இசை அமைப்பாளர்கள் S.M.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன்,  எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, குன்னக்குடி R.வைத்தியநாதன்,  லட்சுமிகாந்த் பியாரிலால் ஆகியோர்களிடம் பணியாற்றியுள்ள அவர்,  மீசையைப் பெரிதாக வைத்திருந்ததால் மீசை முருகேசன் என்று  அழைக்கப்பட்டார்.

மீசை முருகேஷுக்கு வயது 85. குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அவரை காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் நவம்பர் 8-2014 மாலை 4 மணிக்கு மரணம் அடைந்தார்.


ஐ. எஸ். முருகேசன் (சனவரி 3,1930 - நவம்பர் 8, 2014) தமிழகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞராவார். இவர் பரவலாக மீசை முருகேசன் என அறியப்பட்டவர். இவரது தந்தை சுப்பிரமணிய முதலியார் தவில் கலைஞர். இவரது தாய் பொன்னம்மாள். தவில் கலைஞராக இருந்த அவர் மோர்சிங் இசைப்பதிலும் வல்லவர். வாய் மூலமாகவும் பல்வேறு ஒலிகளை எழுப்பி இசைநிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்

இசைத் துறைப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
சிறந்த இசைக்கலைஞரான இவர், கொட்டாங்குச்சியில் வாசிப்பதில் பிரபலமானவர். கடசங்கரி, முங்கோஸ், கொட்டாங்குச்சி போன்ற சில இசைக்கருவிகளை இவர் உருவாக்கி உள்ளார்; அபூர்வ தாளவாத்தியங்கள் என்ற பெயரில் உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தி உள்ளார்.[3]

திரைத் துறைப் பங்களிப்புகள்[மூலத்தைத் தொகு]
கோயம்புத்தூர் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த மீசை முருகேசன், 1985-ஆம் ஆண்டு சுகமான ராகங்கள் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆண்பாவம், பூவே உனக்காக, உன்னால் முடியும் தம்பி, உயிரே உனக்காக, பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம், அமைதிப் படை, ஊமை விழிகள் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற பல்வேறு இசையமைப்பாளர்களுடன் மீசை முருகேசன் பணிபுரிந்துள்ளார்[5].

மறைவு[மூலத்தைத் தொகு]
தமது 85வது அகவையில் உடல்நலக்குறைவால் நவம்பர் 8, 2014 அன்று மரணமடைந்தார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவியும் சரசுவதி, செல்வி என்ற மகள்களும் ஜோதிகுமார், நாகராஜா என்ற மகன்களும் உள்ளனர்[6].

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER