Posts

Showing posts with the label ARMADA

ARMADA ,SPAIN SAD STORY 1588

Image
ARMADA ,SPAIN  SAD STORY 1588 ஸ்பானிய அர்மடா கப்பற்படையின் சோகப் பயணம் ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர் சுமார் நானூறு வருடங்களுக்கு முன்பு, குறுகலான இங்கிலீஷ் கால்வாயில் இரண்டு கப்பற்படைகள் மோதிக்கொண்டன. அந்த யுத்தம், புராட்டஸ்டன்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே நடந்தது; அதோடு, புராட்டஸ்டன்டு மதத்தைச் சேர்ந்த இங்கிலாந்தின் ராணியான முதலாம் எலிசபெத்துக்கும் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டின் அரசரான இரண்டாம் பிலிப்புக்கும் இடையே 16-ஆம் நூற்றாண்டில் நடந்த போராட்டத்தின் பாகமாகவும் இது இருந்தது. “அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, ஆங்கிலேய கப்பற்படைக்கும் ஸ்பானிய கப்பற்படைக்கும் இந்தக் கால்வாயில் நடந்த யுத்தமானது ஒளியின் படைகளுக்கும் இருளின் படைகளுக்குமிடைய நடந்த, வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் இறுதிக்கட்ட யுத்தமாகவே இருந்தது” என்று ஸ்பானிய அர்மடாவின் தோல்வி என்ற ஆங்கில புத்தகம் விளக்குகிறது. “கடல்களின் பரந்தவெளியில் நாங்கள் ஒருபோதும் பார்த்திராத மாபெரும் கப்பற்படை அது.” இப்படித்தான் அன்று வாழ்ந்த இங்கிலாந்து நாட்டவர்கள் மாபெ...