HOTELS AND LADIES - SHORT EELAM -CANADA STORY
HOTELS AND LADIES - SHORT EELAM -CANADA STORY ஈழத்து தமிழில் சோத்துக்கடைச் சிங்காரிகள் -சிறுகதை சோத்துக்கடைகளுக்கும் கியூறியஸ்க்குமான பந்தம் பூர்வீகமானது. பஸ் ஏறி யாழ்ப்பாணம் போவதாயினும், முடி துறக்க அடுத்த ஊரில் உள்ள சந்திக்கு செல்வ தாயினும் சரி... சோத்துக்கடைகளில் ஐந்து இடியப்பம் வாங்கித் தந்தால் தான் கியூறியஸின் இழுபட்ட மூஞ்சி நேராகும் என்ற விசயம் பேரனாருக்குத் தெரியும். பிழிந்த தேங்காய்ப் பூவில் மிளகும் கறிவேப்பிலையும் போட்ட பச்சை மிளகாய்ச் சம்பலும் சாம்பாரும் சேர்த்து ஐந்து இடியப்பம் சாப்பிடுவதற்குள்ளேயே பசியாறி, தலைமயிரை 'ஒட்ட மொட்டையாய் வெட்டிய கவலை' எல்லாம் போய்விடும். மலாயன் கபே, அம்பாள் கபே இடியப்பங்கள் எல்லாம் கியூறியஸ் ஊரில் இருந்த காலத்திலேயே பட்டினியால் மெலியத் தொடங்கி விட்டன. அந்தச் சோத்துக் கடைகளில் எல்லாம் சிங்காரிகள் யாரும் இருப்பதில்லை. மலைநாட்டுப் பக்கம் இருந்து வந்து டிப்ஸ் என்பதை கனவிலும் காணாத சர்வர் சிங்காரங்கள், கை துடைத்தே பழுப்படைந்த வெள்ளைச் சாரங்களை முழங்காலோடு மடித்துக் கட்டி, சுட்டு விரலை உள்ளே வைத்துக் கொண்டு வந்து வைத்த தண்...