Showing posts with label DOCTOR. Show all posts
Showing posts with label DOCTOR. Show all posts

Sunday, 4 April 2021

SANKAR GOWDA , DOCTOR CONSULTING FEES 5 IN MANDYA

 


SANKAR GOWDA ,

DOCTOR CONSULTING FEES 5 IN MANDYA



கட்ட செவுத்துல கால மடக்கி சாதாரண உடையில் கையில் பேனாவுடன் துண்டு சீட்டுல ஏதோ எழுதிட்டு இருக்காரே இவர் யார்ன்னு விசாரிச்சா...
கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியை சேர்ந்த திரு.சங்கர் கவுடா. இவர் படித்திருப்பது எம்பிபிஎஸ்.எம்டி மேற்கு வங்கம் மருத்துவ கல்லூரியில் படித்தவர்.
அவருக்கென்று தனியாக மருத்துவமனை எதுவும் கிடையாது. தான் தங்கியிருக்கும் வீட்டின் முன்புறம் உள்ள கடையின் முன்பு தான் அமர்ந்திருப்பார்.
இவர் எழுதி கொடுக்கும் மருந்துகளோ சாதாரண வகையை சார்ந்தது. ஆனால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இவரை சந்தித்து நலம் பெற்று செல்கின்றனர்.
இவருடைய கன்சல்டிங் பீஸ் வெறும் ஐந்து ரூபாய் அதுவும் இல்லையென்றால் கட்டாயமல்ல.
அப்ப அப்ப மழை பெய்துன்னா அங்க அங்க இந்த மாதிரி சில பேர் இருக்கிறதால தான்...
முடிந்தால் சின்னதா ஒரு வாழ்த்து சொல்வோம்.
May be an image of 2 people and people standing

Saturday, 3 October 2020

KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3

 


KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3




கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி (Kadambini Ganguly) (வங்காள: কাদম্বিনী গাঙ্গুলি; 18 ஜூலை 1861 – 3 அக்தோபர் 1923), சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார்.


வாழ்க்கைக் குறிப்பு

கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்ததியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும்.


கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற முதல் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும்வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரித்தானியப் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.[1]



மருத்துவத்துறை

கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை. கங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக ஐக்கிய ராச்சியத்துக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) - கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) - டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.



சமுதாயப் பணிகள்

1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பனி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பனி பெற்றார். ஆனந்திபாய் அமெரிக்காவிலும் காதம்பானி கல்கத்தா மருத்துவக்கல்லூரியிலும் ஒரே ஆண்டில் மருத்துவம் பட்டம் பெற்றனர்.


கடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்காத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.


எட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார்.


அமெரிக்க வரலாற்றாளரான டேவிட் கோப்ஃப்[2] கடம்பினி கங்கூலியைப் பற்றிக் கூறுவது:


துவாரகநாத் கங்கூலியின் மனைவியான கடம்பினி திறமையானவரும் முற்போக்கு சிந்தனை கொண்டவருமாவார், அவர்கள் இருவரும் பரஸ்பர அன்பும் பாசமும் அறிவுமுடைய தம்பதிகள்.வங்காள சமுதாயத்தில் பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பிரம மற்றும் கிருத்துவப் பெண்களுக்கிடையே கங்கூலி வித்தியாசமானவர். சூழ்நிலைகளைத் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய தனது தனித்திறமையால் வங்காளப் பெண்களின் விடுதலைக்காக செயற்பட்ட சதாரன் பிரமோக்களுக்கு அவர் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தார்



KADAMBINI GANGULY ,BRITISH EMPHIRE`S 
FIRST LADY DOCTOR GRADUATED  1886
DIED 1923 OCTOBER 3




Kadambini Ganguly (Bengali: কাদম্বিনী গাঙ্গুলি) (18 July 1861 – 3 October 1923) and Chandramukhi Basu were the first two female graduates from India and the entire British Empire. She was also the first South Asian female physician, trained in western medicine, to graduate in South Asia. Anandi Gopal Joshi, another Indian, graduated as a physician the same year (1886) in the United States.

Early life[edit]

The daughter of Brahmo reformer Braja Kishore Basu, she was born on 18 July 1861 at Bhagalpur, Bihar in British India. The family was from Chandsi, in Barisal which is now in Bangladesh. Her father was headmaster of Bhagalpur School. He and Abhay Charan Mallick started the movement for women's emancipation at Bhagalpur, establishing the women's organisation Bhagalpur Mahila Samiti in 1863, the first in India.


Kadambini started her education at Banga Mahila Vidyalaya and while at Bethune School (established by Bethune) in 1878 became the first woman to pass the University of Calcutta entrance examination. It was partly in recognition of her efforts that Bethune College first introduced FA (First Arts), and then graduation courses in 1883. She and Chandramukhi Basu became the first graduates from Bethune College, and in the process became the first female graduates in the country and in the entire British Empire.[1]

Medical education and profession[edit]

Ganguly studied medicine at the Calcutta Medical College. In 1886, she was given a Graduate of Bengal Medical College degree. She thus became one of the two, Anandi Gopal Joshi being the other, Indian women doctors who qualified to practice western medicine. Also another Indian woman by the name of Abala Bose passed entrance in 1881 but was refused admission to the medical college and went to Madras (now Chennai) to study medicine but never graduated.


Kadambini overcame some opposition from the teaching staff, and orthodox sections of society. She went to the United Kingdom in 1892 and returned to India after qualifying as LRCP (Edinburgh), LRCS (Glasgow), and GFPS (Dublin). After working for a short period in Lady Dufferin Hospital, she started her own private practice

Social activities[edit]

In 1883 she married the Brahmo reformer and leader of women's emancipation Dwarkanath Ganguly. They were actively involved in female emancipation and social movements to improve work conditions of female coal miners in eastern India. She was one of the six female delegates to the fifth session of the Indian National Congress in 1889, and even organised the Women's Conference in Calcutta in 1906 in the aftermath of the partition of Bengal. In 1908, she had also organised and presided over a Calcutta meeting for expressing sympathy with Satyagraha – inspired Indian labourers in Transvaal, South Africa. She formed an association to collect money with the help of fundraisers to assist the workers.

Personal life[edit]

As the mother of eight children, she had to devote considerable time to her household affairs. She was deft in needlework.

The noted American historian David Kopf[2] has written, "Ganguli's wife, Kadambini, was appropriately enough the most accomplished and liberated Brahmo woman of her time. From all accounts, their relationship was most unusual in being founded on mutual love, sensitivity and intelligence… Mrs. Ganguli's case was hardly typical even among the more emancipated Brahmo and Christian women in contemporary Bengali society. Her ability to rise above circumstances and to realize her potential as a human being made her a prize attraction to Sadharan Brahmos dedicated ideologically to the liberation of Bengal's women."[3]





Wednesday, 6 May 2020

SIGMUND FREUD ,AUSTRIAN PSYCHOLOGICAL DOCTOR BORN 1856 MAY 6 - SEPTEMBER 23, 1939


SIGMUND FREUD ,AUSTRIAN PSYCHOLOGICAL 
DOCTOR BORN 1856 MAY 6 - SEPTEMBER 23, 1939




சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud, சிக்மண்ட் ஃபுரொய்ட், மே 6, 1856 – செப்டெம்பர் 23, 1939) ஒரு ஆஸ்திரிய உளநோய் மருத்துவர். இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர். உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள்,
அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியதன் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்ததும், இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவற்றின் தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்


வரலாறு
இளமைக்காலம்
photograph
1872 இல், பிராய்ட் தனது 16 ஆவது வயதில், அவரது தாய் அமாலியா பிராய்ட் உடன் நின்று எடுத்துக்கொண்ட படம்[1]
சிக்மண்ட் பிராய்ட், 1856 ஆம் ஆண்டில், தற்போது செக் குடியரசில் உள்ளதும், முன்னர் ஆஸ்திரியப் பேரரசில் அடங்கியிருந்ததுமான, மொரேவியாவில் இருந்த பிரிபார் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கலீசிய யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் பிறக்கும்போது இவரது தந்தையாருக்கு 41 வயது. அவரது முதல் மனைவி மூலம் ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இரண்டாம் மனைவிக்குப் பிறந்த 8 பிள்ளைகளுள் இவரே மூத்தவர். இவரது சுட்டித்தனமான அறிவினால் இவரது பெற்றோரிடம் ஏனைய பிள்ளைகளிலும் பார்க்க இவர்க்குக் கூடிய சலுகைகள் இருந்தன. குடும்பம் வறுமையில் இருந்தபோதும், சிக்மண்ட் பிராய்டின் கல்விக்காக அனைத்தும் செய்தனர். 1857 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போது, பிராய்டின் தந்தையாரின் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டது. இதனால், அவர் குடும்பத்துடன் லீப்சிக்குக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வியன்னாவுக்குச் சென்று குடியேறினார். சிக்மண்ட் பிராய்ட் அங்கிருந்த முன்னணிப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி கற்றார். ஒரு சிறந்த மாணவனாக விளங்கிய அவர் 1873 ஆம் ஆண்டில் சிறப்புத் தகைமைகளுடன் இரண்டாம் நிலைக் கல்வியில் சித்தியடைந்து வெளியேறினார்.


சட்டத்துறையில் உயர்கல்வியைத் தொடர முதலில் விரும்பினாலும், பின்னர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்காகச் சேர்ந்தார். இவர் டார்வினியப் பேராசிரியராகிய கார்ல் கிளாஸ் (Karl Claus) என்பவரின் கீழ் மருத்துவத்தைக் கற்றார்.

1874 ஆம் ஆண்டில் உள இயக்கவியல் என்னும் கருத்துருவை, ஜெர்மானிய உலற்கூற்றியலாளரான ஏர்ண்ஸ்ட் வில்ஹெல்ம் வொன் புரூக் (Ernst Wilhelm von Brücke) என்பவர் தனது உடற்கூற்றியல் விரிவுரைகள் என்னும் வெளியீட்டில் அறிமுகப்படுத்தினார். இவர் வெப்ப இயக்கவியலின் முதலாவது விதியை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஹேர்மன் வொன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் என்பவருடன் இணைந்து எல்லா உயிரினங்களுமே ஆற்றல் முறைமைகளே என்றும் அவையும் அதே விதிக்கு உட்பட்டவையே என்றும் கருத்து வெளியிட்டனர்.

பிரெஞ்சு தத்துவம் மற்றும் உளப்பகுப்பாய்வு துறையில் முக்கிய பங்காற்றிய யூங் மற்றும் லக்கான் ஆகிய இருவரும் தமக்கான அணுகுமுறைகளை சிக்மண்ட் பிராய்ட் இடமிருந்தே பெற்றுக் கொண்டார்கள். உளவியலில் பிராய்ட் இன் பாலியல் மட்டுமேயான மைய அணுகுமுறையை இருவருமே மறுத்தாலும் அவர்களது ஆய்வுச்செயற்பாடுகளுக்கு பிராய்டின் பிரதிகளே அடிப்படையாகும்.

ஜேர்மனியை மையமாகக் கொண்டியகும் மார்க்சியப்பள்ளியான ப்ராங்பேர்ட் பள்ளியின் தத்துவப்போக்கில் பிராய்டின் எழுத்துக்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. பிராங்பேர்ட் பள்ளியின் முக்கியகர்த்தாக்களான எரிக் பிராம் போன்றவர்கள் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறையால் பெரிதும் தூண்டப்பட்டிருந்தனர்.

கண்டுபிடிப்புகள்
சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு 'இயக்கவியல் மனோவியல்' அல்லது 'இயக்க உளவியல்' ( Dynamic Psychology) ஆகும். இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும். நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.

சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,

உணர்வு மனம் (Conscious Mind)
உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
தொலை நோக்கு மனம்
கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறியதாலும் இவர் புகழ்பெற்றார். மேலும் மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். அவை,

உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

உளப்பகுப்பாய்வின் வளர்ச்சி
1885 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிக்மண்ட் பிராய்டு இப்னாசிஸ் விஞ்ஞான ஆராய்ச்சியை நடத்திய புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான ஜீன்-மார்டின் சார்கோட் உடன் படிப்பதற்காக பாரிசுக்கு சென்றார். அவர் பிறிதொரு சமயம் இந்த அனுபவத்தை, மருத்துவ உளவியல் சிகிச்சையை நடைமுறையில் பயன்படுத்தவும், நரம்பியல் ஆராய்ச்சியில் குறைவான நிதியில் தொழிலில் உறுதியான ஒரு எதிர்காலத்தைப் பெறுவதற்கும் விடாமுயற்சி மேற்கொள்ள என்னைத் துாண்டிய தருணம் என நினைவுகூர்கிறார்.[2] சார்கோட் உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (இஸ்டீரியா) பற்றிய ஆய்வு மற்றும் அறிதுயில் நிலையை ஏற்கும் திறன் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றார், இது அவர் பார்வையாளர்களின் முன்னால் மேடையில் அடிக்கடி நோயாளிகளுடன் நடத்திய செயல்முறை விளக்கங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.


1886 ஆம் ஆண்டில் தனது மருத்துவமனையில் அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தம் முறையை பயன்படுத்தத் தொடங்கினார். அவர் தனது நண்பர் மற்றும் கூட்டுப்பணியாளரான ஜோசப் புருவரின் அணுகுமுறையைப் பயன்படுத்தினார். அவர் ஹிப்னாஸிஸ் பயன்பாடு பற்றி தான் அறிந்திருந்த பிரஞ்சு முறைகளில் இருந்து வேறுபட்டார். பிரஞ்சு அறிதுயில் நிலைக்கு ஆட்படுத்தும் முறைகளில் ஆலோசனை கூறுதல் நடைமுறைியல் இல்லை. புருவரின் ஒரு குறிப்பிட்ட நோயாளியின் சிகிச்சை பிராய்டின் மருத்துவ நடைமுறைக்கு மாற்றாக நிரூபிக்கப்பட்டது. அன்னா ஓ. எனக் குறிப்பிடப்பட்டவர் அறிதுயில் நிலையில் உள்ள போது தனது நோய்க்குறிகளைப் பற்றிக் கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். (தனக்கான சிகிச்சை முறையை "பேசுதல் மூலம் குணப்படுத்துதல்" என்ற சொல்லாக்கத்தை உருவாக்கினார்). இந்த முறையின் படி பேசும் போது நோய்க்குறிகள் தீவிரத்தன்மையிலிருந்து குறைய ஆரம்பித்தது. மேலும், அதிர்ச்சிகரமான சம்பவங்களோடு தொடர்புடைய
நினைவுகளையெல்லாம் மீட்டுக்கொணரப்பட்டது. பிராய்டின் மருத்துவப் பரிசோதனைகள் அறிதுயில் நிலை சிகிச்சையுடன் ஒப்பிடும் போது, நோயாளியை எந்தவிதமான தணிக்கையோ, தடுப்போ இல்லாமல், தனது நினைவில் தோன்றக்கூடிய எண்ணங்களைப் பற்றியெல்லாம் சுதந்திரமாகப் பேசுவதற்கு ஊக்குவிப்பதன் மூலம் நோய்க்குறிகளில் இருந்து மேம்பட்ட நிவாரணம் கிடைக்கிறது என்ற முடிவிற்கு அழைத்துச் சென்றன எனலாம். இந்த செயல்முறையோடு, பிராய்டினால் "கட்டற்ற இணைப்பு" என்று அழைக்கப்படும் நோயாளிகளின் கனவுகளை நுணுக்கமாக ஆய்வுசெய்து, அவற்றிலிருந்து நனவிலி மனத்தின் சிக்கலான கட்டமைப்பை பகுப்பாய்வு செய்ய இயலும் முறையொன்றையும் இணைத்துப் பயன்படுத்தினார். அவர் மனித மனத்தின் உளவியல் செயல்பாடான அடக்குமுறை நோய்க்குறிகளை உருவாக்குவதற்கான அடிப்படையான காரணமாகக்கூட இருக்கலாம் என்பதையும் விளக்கினார். 1896 ஆம் ஆண்டில், “அறிதுயில் நிலை“ என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், தனது 1896 ஆம் ஆண்டில், அறிதுயில் நிலை என்பதை பிராய்டு கைவிட்டார். மேலும், தனது புதிய மருத்துவ முறை மற்றும் அதற்கு அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகளை குறிக்க "உளப்பகுப்பாய்வு" என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.[3] 1896 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மரணத்தோடு அவர் தொடர்பு படுத்திய நரம்புத்தளர்ச்சி நோயின் காரணமாக இதயத்தில் ஒழுங்கற்ற தன்மை, மனச்சோர்வு மற்றும் தொல்லையளிக்கும் கனவுகள் ஆகியவற்றை அனுபவித்த காலகட்டத்தில் பிராய்டிடம் இந்த புதிய கருத்தியலானது உருவாகத் தொடங்கியது.[4] மேலும் அவர் தனது கனவுகள் மற்றும் குழந்தைப் பருவ நினைவுகள் ஆகியவற்றைக் கொண்டு சுய பகுப்பாய்வை துாண்டி விட்டார். தனது தாயார், தந்தையிடம் காட்டிய அன்பே அவர் தந்தையின் மீது ஒரு விரோத மனப்பான்மையுடன் கூடிய பொறாமை மற்றும் பகைமை போன்ற அவரது உணர்வுளுக்கான காரணம் என்பதைக் கண்டறிய இந்த சுயபகுப்பாய்வு உதவியது. இந்தப் புரிதல் மேலோட்டமான உள நோய்களுக்கான மூலம் எது என்பது பற்றிய தனது அடிப்படைக் கொள்கைகளை மாற்றியமைக்க உதவியது.பிராய்டின் ஆரம்ப கால மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் நனவிலி மனத்தின் நினைவுகளில் இருந்த தொடக்க கால குழந்தைப் பருவத்து பாலியல் தொல்லைகள் உளவழி நரம்பு நோயின் (psychoneuroses) (உளக்கூறு நோயாளிகளிடம் காணப்படும் விகாரமான உடல் வெளிப்பாடு (hysteria) மற்றும் பித்து நரம்பியல் (obsessional neurosis)) முன் நிபந்தனையாக இருக்கலாம் என்று தனது தவறிழைக்கத் துாண்டப்படுதல் சார்ந்த கொள்கையின் (Freud's seduction theory) கோட்பாடாக முன்வைத்தார்.[5] அவரது சுய பகுப்பாய்வின் விளைவான தெளிவில் பிராய்டு ஒவ்வொரு உளவழி நரம்பு நோயின் காரணத்தையும் தேடி பின் சென்றால் குழந்தைப் பருவத்தில் பாலியல்ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டமை காரணமாக இருக்கும் என்ற கருத்தை கைவிட்டார். இப்பொழுதும் கூட குழந்தைப் பருவ பாலியல் அத்துமீறல்கள் உளப்பிறழ்ச்சி நோய்க்கான காரணங்களில் ஒன்றாக இருந்தாலும் அவை உண்மையானவையா? கற்பனையாக உருவாக்கப்பட்டவையா என்பது அவை அடக்கப்பட்ட அல்லது அழுத்தப்பட்ட நினைவுகளாக மாறியுள்ளனவா? என்பதைப் பொறுத்தே நோய் விளைவிக்கின்ற காரணியா? இல்லையா? என்பது குறித்து முடிவு செய்ய இயலும் என்ற கருத்துக்கு வந்தார்.[6] அனைத்து உளப்பிறழ்ச்சி நரம்பியல் நோய்களுக்கும் மூலமாக குழந்தைப் பருவத்து அதிர்ச்சி தரக்கூடிய பாலியல் அத்துமீறல்கள் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தியலிலிருந்து தன்னிச்சையான குழந்தைப் பருவ பாலியல் கருத்தறிவு இருப்பதாகக் கருதப்படும் கருத்தியல் நிலைக்கான மாற்றமானது பிராய்டின் ஈடிபசு சிக்கல் (மகன் தாயின் மீது கொள்ளும் ஒரு வித பாலியல் மோகம்) தொடர்பான புதிய கருத்தியல் உருவாக அடிப்படையாக இருந்தது.[7]

கருத்துகள்
சிக்மண்ட் பிராய்ட்,’மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்’ என்று கருதினார்.
பிராய்டு முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது என்று விளக்கினார்.[8

Sunday, 3 May 2020

DOCTOR RAJINI KALAIYARASAN - A REAL STORY OF AN ORPHEN




DOCTOR RAJINI KALAIYARASAN - 
A REAL STORY OF AN ORPHAN


ரஜினி கலையரசன்: யாருடைய ஆதரவும் இல்லை; ஆசிரியர்கள் தயவில் படித்தார்.. ஆசை, ஆசிரியர் ஆக வேண்டும் என்பது.. ஆனால் டாக்டராக்கி விட்டார்கள்.. இன்று  மருத்துவமும் பார்த்தபடி படித்தபள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறார்!

பள்ளியில் படித்து முடித்து, டாக்டர் ஆன பிறகும் நன்றி மறக்காமல், தான் படித்த தொடக்கப்பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தி, நன்றிக் கடனை திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கிறார் ரஜினி கலையரசன் என்ற மருத்துவர்!
கண்களைக் குளமாக்கும்  மனதைச் சுடும் அவரது வாழ்க்கை.

"ஆறு வயதில் தந்தையையும், தாயையும் இழந்து, நடுத்தெருவுக்கு வந்து நின்றேன் எனக்கு உறவுகள் இருந்தனர்; ஆனால் அவர்கள்  அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், இரவில் படுத்துறங்க மட்டும் சித்தப்பா முனியப்பா  வீட்டுத் திண்ணையில் இடம் கிடைத்தது. அதுவும் பாட்டி லட்சுமியம்மாளின் தயவால். இந்த நிலைக்குக் காரணம், என் தந்தை லட்சுமணனும், தாய் ஜம்புவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதுதான். அப்பா, அம்மாவின் காதல் திருமணத்தை, தாத்தா-பாட்டி மற்றும் சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பிடிக்கவும் இல்லை. இதனால் எப்போதும் வீட்டில் சண்டை சச்சரவு தான்." 

"ஒரு கட்டத்தில் அப்பா லட்சுமணன் மர்மமாகவே இறந்து போனார். அப்பா இறந்தவுடன் அம்மா ஜம்புவை அடித்தே வீட்டைவிட்டு விரட்டி விட்டார்கள். ஆறு வயதான என்னை அப்படியே விட்டு விட்டுக் கிளம்பி எங்கோ போய் விட்டாள் அம்மா."

"அன்றுமுதல் எனக்கு உறவுகள் இருந்தும், ஒரு அநாதையாகத்தான் வளர்ந்தேன். சித்தப்பாவின் வீட்டில் தோட்ட வேலையும், மாட்டைப் பிடித்துக் கட்டுவதும், அவைகளுக்கு தீனி வைப்பதுமாக நாட்கள் கடந்தன. பிறகு மனமிரங்கி உத்தனப்பள்ளியில் இருக்கும் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் பாட்டி லட்சுமியம்மாள் சேர்த்து விட்டார்.

 அப்போது முதல் எனக்கு வீட்டில் கிடைக்காத அன்பும், அரவணைப்பும் பள்ளியில் ஆசிரியர்களிடமிருந்து கிடைத்து வந்தது.அதற்காகவே நான் நாள் தவறாமல் பள்ளிக்குச் சென்று விடுவேன். என்னுடைய பல ஆசிரியர்களை இன்றுவரை அப்பா, அம்மா என்றுதான் அழைக்கின்றேன்

 அவர்களும் மறுக்காமல் 'வாடா செல்லம்'

 என்றுதான் அழைக்கிறார்கள்."

"அதுதவிர, அப்போது எனக்குப் பள்ளியில் முக்கியமாக மதிய உணவு கிடைத்தது. ஆம்...சரியான உணவுகூட இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வழியிலும், பள்ளியிலும் மயக்கம் போட்டு விழுந்த நாட்களும் பல உண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்குத் தெரியாது, நான் எந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கு வருகின்றேன்

 என்று... காரணம், எனக்குள் ஆயிரம் துயர் கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தாலும் பள்ளியில் அனைவருடனும் அதைக் காட்டிக் கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் நாளடைவில் என்னுடைய மயக்கத்துக்கான காரணத்தைக் கண்டுபிடித்த ஆசிரியர்கள், என் பின்னணியை அறிந்துகொண்டனர்; அதன் பின் உதவத் தொடங்கினர்." 

"எனக்கு மட்டும் காலை 10 மணிக்கு சத்துணவு கூடத்தில் சாதம் வடித்ததும், சாதமும் வேகவைத்த பருப்பும் போட்டுத் தருவார்கள். இதுதான் எனது காலை உணவு. பிறகு மதிய உணவைப் பள்ளியிலேயே சாப்பிட்டு விடுவேன். அதையே இரவில் சாப்பிடவும் கொடுத்து அனுப்புவார்கள். அதை வீட்டுக்குக் கொண்டுபோய் இரவு சாப்பிட முடியாது. வீட்டில் உள்ளவர்கள் திட்டுவார்கள் என்று பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் எங்காவது வைத்து சாப்பிட்ட பின்னரே வீட்டுக்குச் செல்வேன். இப்படியாக 5-ஆம் வகுப்பு வரை படித்து முடித்தேன்." 

"படிப்பின் மீது எனக்கு இருக்கும் ஆர்வத்தைக் கண்டு, ஆசிரியர்களே என்னை 6-ஆம் வகுப்பில் சேர்த்து விட்டனர். 8-ஆம் வகுப்பு முடித்தவுடன், மே மாத விடுமுறையில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் சேர்ந்து, ஏரி சீரமைக்கும் வேலைக்குச் சென்றேன். அதில் கிடைத்த பணத்தைச் சேமித்து வைத்து 9-ஆம் வகுப்பில் சேர்ந்தேன். மீண்டும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் வேலைக்குச் சென்றேன். அப்போது, 'நீ படித்தது போதும்; தோட்டத்தில் வந்து வேலை பாரு' என்று சித்தப்பாவும், சித்தியும் தொந்தரவு தந்தார்கள். ஆனால் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்து இருந்தேன் நான்.இதனால், என்னை வீட்டை விட்டு வெளியே துரத்தி  விட்டார்கள். பாட்டி லட்சுமியம்மாளும் 'மகன் (சித்தப்பா) சொல்வதுதான் சரி' என்று என்னைக் கைவிட்டு விட்டார்."

"அப்போது, எனக்கு ஆதரவு கொடுத்தது என்னோடு படித்த சக மாணவி பிரேமா. நான் வாழ்நாள் முழுவதும் தோழி பிரேமாவுக்குக் கடமைப்பட்டுள்ளேன். ஆம். நான் 9 மற்றும் 10-ஆம் வகுப்புவரை படித்து முடிக்க, எனக்காக அவரது அப்பாவிடம் பேசி இரண்டு வருடம் அவரது வீட்டில் தங்கிப் படிக்க இடம் கொடுத்தார்."

"பத்தாம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்தேன். மீண்டும் ஆசிரியர்கள் உதவினார்கள். ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பேசி இலவசமாக தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். பள்ளி நிர்வாகமும் என் சூழ்நிலையை உணர்ந்து கொண்டு இரண்டு வருடங்கள் இலவசமாக விடுதியில் தங்கிப் படிக்க உதவி செய்தது. முக்கியமாகப் பள்ளியின் முதல்வர் சம்பத்குமார் சாருக்கு நன்றி சொல்லவேண்டும்."

"தனியார் பள்ளி என்பதால் மாதந்தோறும் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடக்கும். என் சார்பாக, என் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் கூட்டத்துக்கு மாதம் ஒரு ஆசிரியர் என முறை வைத்து வந்து கலந்துகொள்வார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் கடைக்குச் செல்லும்போது பேப்பர், பேனா, பென்சில் தீர்ந்து இருக்கும் என்று வாங்கி வந்தும் தருவார்கள். என்னுடைய ஆசிரியர்கள் அனைவரின் உதவியால் அவர்கள் எதிர்பார்த்தது போலவே ப்ளஸ்-டூ தேர்வில் 1,166 மதிப்பெண் எடுத்தேன். மெடிக்கல் கட்-ஆப் 198.25 எடுத்தேன். ஆனால், எனக்கோ பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்பதுதான் விருப்பம். அப்போதுதான் அன்பு காட்டும் ஆசிரியர்களுடனேயே இருக்க முடியும் என்று முடிவு செய்திருந்தேன்". 

"'மருத்துவம் வேண்டாம்' என்றும் 'முடியாது' என்றும் எவ்வளவோ போராடிப் பார்த்தேன்; ஆனால், என்னுடைய ஆசிரியர்கள் விடவில்லை. 'மருத்துவப் படிப்பு படித்தே ஆக வேண்டும்' என்று என்னை முதல்முறையாக அடிக்கவும் செய்தனர். அன்பின் மிகுதியால், அவர்களே விண்ணப்பம் வாங்கி வந்து என்னை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டனர். ஆனால், மருத்துவம் படிக்கவும், கட்டணம் செலுத்தவும் வசதி இல்லை.

 அப்போது நெல்லை கலெக்டராக இருந்த கருணாகரன் சார் உதவி செய்தார். கலெக்டர் கொடுத்த உதவித் தொகையை என்னுடைய பேராசிரியர் சுனிதா, எனக்குத் தேவையானபோது கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்ததுடன், அவருடைய காசையும் சேர்த்து என்னை மருத்துவர் ஆக்குவதற்கு உதவி செய்தார்."

"2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தேன். 'எங்கே போவது...?' என்று தெரியாமல் பிறந்த ஊரான கோவிந்தாபுரம் வந்தேன். ஆனால், சித்தப்பாவின் மகன்களோ, 'சொத்து, கித்துன்னு வந்தா ஒரே வெட்டு... உயிரோடு இருக்க மாட்டே' என்று மிரட்டி அனுப்பினார்கள். அதனால், நண்பர்கள் உதவியுடன் அலேசிபம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கினேன்." 

"நான் படித்த உத்தனப்பள்ளியில் சிவபிரகாஷ் என்ற பெயரில் கிளினிக் வைத்தேன். என்னைத் தேடி வரும் ஏழை மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்குக் குறைவான கட்டணத்தில் இப்போது மருத்துவம் பார்த்து வருகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் எனக்குத் தேவையான உடைகளை உள்ளூர் கடைகளில் வாங்கினேன். பிறகு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், துணிகளை வைக்கப் பீரோ, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் போன்றவற்றை வாங்கியுள்ளேன்".

"மருத்துவத்தில் எம்.டி படிக்க வேண்டும் என்று ஆசை. அதற்காக, நுழைவுத் தேர்வு எழுத இரவு நேரத்தில் இப்போது படித்து வருகின்றேன். இந்தச் சமயத்தில்தான், கடந்த ஜூன் மாதம் பள்ளிக்கூடம் திறந்த உடன், என்னுடைய ஆசிரியர் கனவை நிறைவேற்றிக்கொள்ள விரும்பினேன். நான் படித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசினேன். 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் மற்றும் அறிவியல் பாடம் நடத்தச் சொல்ல, நடத்தி வருகின்றேன். மருத்துவத்தில் கிடைக்காத நிம்மதி ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும்போது எனக்குக் கிடைக்கிறது."

"இதற்காகத் தினமும் காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்குச் சென்று, மாணவர்களுக்குத் தமிழ் அல்லது அறிவியல் வகுப்புப் பாடம் நடத்தி முடித்துவிட்டு, பிறகு எனது கிளினிக் வந்து மருத்துவம் பார்க்கிறேன்" 

"தாய், தந்தை வைத்த பெயர் கலையரசன். பிறகு எனக்குப் பிடித்த நடிகரான ரஜினி பெயரை முன்னால் சேர்த்துக்கொண்டு ரஜினி கலையரசன் என்று ஆக்கிக்கொண்டேன். ஆனால், எனக்கு என்று முகவரி கிடையாது. நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியால் கல்லூரி விடுதி முகவரியை வைத்து, ஆதார் கார்டு பெற்றுள்ளேன். இனிதான் எனக்கான முகவரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்படுத்தி, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வாங்கவேண்டும். நான் படித்த மருத்துவப் படிப்பைப் பதிவுசெய்ய வேண்டும்" 

போராட்டமே வாழ்க்கையாய் வாழ்க்கையே போராட்டமாய் வாழும் ரஜினி கலையரசன் பேசப் பேச நமக்கு நம்பிக்கை வெளிச்சங்கள் தெரியத் துவங்கின. கூடவே கண்ணீரும்...

எப்போதும் முயற்சி வெற்றி யை கொடுக்கும்
பலரின் அன்பும் பாசமும் அவரை உன்னத நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

வாழ்க வளர்க அவரின் தொண்டும் வளர்ச்சி யும்...!!!💝💝🙏💝💝

Sunday, 24 June 2018

ELIZABETH BLACKWELL ,AMERICA`S FIRST DOCTOR ,GOT DEGREE ON 1849 JUNE 24







ELIZABETH BLACKWELL ,AMERICA`S FIRST 
DOCTOR ,GOT  DEGREE ON 1849 JUNE 24



அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர் Elizabeth Blackwell 1849 JUNE 24

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவரும், பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடியுமான எலிசபெத் பிளாக்வெல் (Elizabeth Blackwell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1821) பிறந்தார். தந்தை சர்க்கரை ஆலை உரிமையாளர். 1830-ல் குடும்பம் நியூயார்க் நகரில் குடியேறியது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒஹியோவுக்கு இடம்பெ யர்ந்தனர். தந்தை 1838-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

l குடும்ப செலவை சமாளிக்க, சகோதரிகளுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் தொடங்கினார் எலிசபெத். பள்ளியை வெற்றிகரமாக நடத்தமுடியாததால், டியூஷன் வகுப்புகள் எடுத்தார். சிறுகதைகள் எழுதினார். இசை கற்றார். மகளிர் உரிமை தொடர்பான போராட்டங்கள், பிரச்சாரங்களில் பங்கேற்றார்.

l இவரது தோழி ஒருவர் பிறப்புறுப்பு தொற்றுக்காக ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றார். ஒரு பெண் டாக்டர் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று இவரிடம் வேதனையுடன் கூறினார். ‘நீ ஏன் மருத்துவம் படிக்கக் கூடாது’ என்றும் கேட்டார். அதுவே மருத்துவம் படிக்கும் உந்துதலை இவரிடம் ஏற்படு த்தியது.

l 12 மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தார். ஆண்கள் மட்டுமே மருத்துவம் படித்த காலம் என்பதால், இவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதி யாக, நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் இவரது விண்ணப்பம் ஏற்கப்பட்டது. ‘ஒரு பெண்ணை சேர்ப்பதா, வேண்டாமா?’ என்று 150 மாணவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

l படிப்பின்போதும் பல பிரச்சினைகளை எதிர்கொ ண்டார். அனைத் தையும் சமாளித்து 1849-ல் மருத்துவப் பட்டம் பெற்றார். அமெரிக் காவிலேயே முதன்முதலாக மருத்துவம் பயின்ற பெண் என்ற பெருமை பெற்றார்
JUNE 24.

l உயர்கல்விக்காக ஐரோப்பா சென்றார். அப்போதும் நிராகரிக்கப் பட்டார். பாரீஸில் உள்ள லாமெடர்னைட் என்ற மருத்துவமனையில், மருத்துவர் என்பதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

l ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும்போது இவரது கண்ணில் ரசாயன திரவம் பட்டதால், ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். இதனால், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற ஆசை நிராசையானது. பின்னர், நியூயார்க் திரும்பியவர், மருத்துவப் பணியைத் தொடங்கினார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராளமான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரைகளை எழுதினார்.

l பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்த தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். ஒரு மருத்துவமனை திறந்தார். இவரது தங்கையும் மருத்துவம் படித்து, அமெரிக்காவின் 3-வது பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உதவினார்.

l இங்கிலாந்து அரசால் ‘பெண் டாக்டர்’ என்று 1865-ல் அங்கீ கரிக்கப்பட்டார். இவரது தீவிர முயற்சியால், ‘லண்டன் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் ஃபார் வுமன்’ என்ற கல்வி நிறுவனம் 1874-ல் தொடங் கப்பட்டது. லண்டன் மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

l கடும் போராட்டங்கள், தடைகள், சவால்கள், அவமானங்களை சந்தித்தாலும் அனைத்தையும் வென்று, பெண்களின் மருத்துவக் கல்வி உரிமையை நிலைநாட்டிய எலிசபெத் பிளாக்வெல் 89-வது வயதில் (1910) மறைந்தார்.

Sunday, 1 April 2018

ANANDHI GOPALRAO JOSHI , FIRST FEMALE DOCTOR OF INDIA BORN 1865 MARCH 31





ANANDHI GOPALRAO JOSHI ,

FIRST FEMALE DOCTOR OF INDIA

BORN 1865 MARCH 31


ஆனந்தி கோபால் ஜோஷி (அல்லது ஆனந்திபாய் ஜோஷி) (பி. மார்ச் 31, 1865 – இ. பெப்ரவரி 26, 1887) ஐரோப்பிய மருத்துவத்தில் முதலாவதாகப் பட்டம் பெற்ற இரு இந்தியப் பெண்களில் இவர் ஒருவர். மற்றொருவர் கடம்பினி கங்கூலி.[1] அப்பட்டம் பெற்ற முதல் இந்துப் பெண்மணி இவர்தான்.[2]

வாழ்க்கைக் குறிப்பு
மகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர். கோபால்ராவ் ஜோஷி கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். கொஞ்சகாலஞ்சென்று ஜோஷி அலிபாக்கிற்கும் அடுத்து கொல்கத்தாவிற்கும் பணி மாற்றுதலாகிச் சென்றார். அவர் யமுனாவின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பெண்கல்வி ஆதரவாமகாராஷ்டிராவிலுள்ள பூனாவில் ஒரு பணக்கார வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஆனந்திபாய்க்கு பெற்றோர் இட்ட பெயர் யமுனா. இவருக்கும் கோபால்ராவ் ஜோஷிக்கும் திருமணம் நடந்தபோது இவருக்கு 9 வயதுதான். முதல் மனைவியை இழந்த கோபால் ஜோஷி இவரைவிட 20 வயது மூத்தவர். கோபால்ராவ் ஜோஷி கல்யாணில் அஞ்சல் குமாஸ்தாவாக வேலை பார்த்தார். கொஞ்சகாலஞ்சென்று ஜோஷி அலிபாக்கிற்கும் அடுத்து கொல்கத்தாவிற்கும் பணி மாற்றுதலாகிச் சென்றார். அவர் யமுனாவின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் மற்றும் பெண்கல்வி ஆதரவாளர்.

அந்தக்காலத்தில் பிராமணர்களிடையே சமஸ்கிருதம் படிப்பதுதான் பழக்கமாக இருந்தது. ஆனால் கோபால் ஹரி தேஷ்முக் (புனை பெயர்: லோக்ஹிதவாதி) எழுதிய சமூக சீர்திருத்தக் கட்டுரைகளின் தொகுப்பான ஷாதபத்ரேயைப் படித்திருந்த ஜோஷி சமஸ்கிருதத்தைவிட ஆங்கிலம் பயில்வதே அவசியம் என்று கருதினார். தன் மனைவிக்குப் படிப்பிலிருந்த ஆர்வத்தைக் கண்டுகொண்ட அவர் ஆனந்திபாய் கல்வி பயிலவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் உதவினார். ஆனந்திபாயின் 14 வது வயதில் அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை மருத்துவ வசதியில்லாததால் பத்தே நாட்களில் இறந்து போனது.குழந்தையின் மரணம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மருத்துவராக வேண்டுமென்ற எண்ணம் அவருக்குள் தீவிரமாக எழுந்தது.

மருத்துவப் படிப்பை நோக்கி

கோபால்ராவ் ஆனந்திபாயை மருத்துவம் படிப்பதற்கு ஊக்கமளித்தார். ராபர்ட் வைல்டர் என்ற கிறித்தவ மறைபணியாளருக்கு 1880ல் கோபால்ராவ் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் ஆனந்திபாய்க்கு அமெரிக்காவில் மருத்துவம் படிப்பதில் இருந்த ஆர்வத்தை விளக்கி அதற்கு உதவும்படியும் தனக்கும் அமெரிக்காவில் ஏதாவது ஒரு பொருத்தமான வேலை வாங்கித்தரவும் கோரியிருந்தார். தம்பதிகள் இருவரும் கிறித்தவ மதத்திற்கு மாறினால் அவர்களது விருப்பத்தினை நிறைவேற்றுவதாக வைல்டர் நிபந்தனை விதித்தார். ஆனால் மதம் மாறுவதற்கு கோபால்ராவ் தம்பதிகள் உடன்படாததால் அவர்கள் விருப்பம் நிறைவேறவில்லை.

கோபால்ராவ் எழுதிய கடிதத்தை வைல்டர் தனது பத்திரிக்கையான பிரின்ஸ்டன்ஸ் மிஷினரி ரெவ்யூவில் வெளியிட்டார். நியூ ஜெர்சியின் ரோசலைச் சேர்ந்த தியோடிசியா கார்பெண்டர் பல் மருத்துவரைப் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது அதனைப் படிக்க நேர்ந்தது. ஆனந்திபாய்க்கு மருத்துவம் படிப்பதில் இருந்த அதீத ஆர்வமும் கோபால்ராவ் தன் மனைவியின் விருப்பத்தற்கு அளித்த ஆதரவும் தியோடிசியாவின் மனதைத் தொட்டன. ஆனந்திபாய் அமெரிக்காவில் தங்குவதற்கு இடமளிக்க முன் வந்தார். இருவருக்குமிடையே கடிதப் பரிமாற்றம் தொடர்ந்தது. கடிதங்களில் அவர்கள் மற்ற விஷயங்களோடு இந்து மதக் கலாச்சாரத்தைப் பற்றியும் விவாதித்தனர்.

கொல்கத்தாவிலிருந்தபோது ஆனந்திபாயின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. பலவீனம், விடாத தலைவலி, எப்போதாவது வரும் காய்ச்சல், சில சமயங்களில் மூச்சுத்திணறல் என்று அவர் சிரமப்பட்டார். தியோடிசியா அமெரிக்காவிலிருந்து மருந்துகள் அனுப்பியும் பலனில்லாமல் போனது. 1883ல் கோபால்ராவிற்கு ஸ்ரீராம்பூருக்கு மாற்றலாகியது. அப்போது அவர் தனது மனைவியை மட்டும் மருத்துவம் படிக்க அமெரிக்கா அனுப்ப முடிவு செய்தார். உடல்நலம் குன்றியநிலையிலும் மனைவி படித்து மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனந்திபாய் சற்றுத் தயங்கினாலும் பிற பெண்களுக்கு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டிய அவசியத்தை கோபால்ராவ் அவருக்கு விளக்கி அமெரிக்கா செல்வதற்கு அவரைச் சம்மதிக்க வைத்தார்.


பென்சில்வேனியாவிலிருந்த பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கும்படி தார்பார்ன் மருத்துவத் தம்பதியினர் ஆனந்திபாய்க்கு ஆலோசனை கூறினர். (உலகில் பெண்களுக்கு மருத்துவக் கல்வியளிக்க தொடங்கப்பட்ட முதல் துறை) மேற்கத்திய நாட்டில் மேற்படிப்புக்குச் செல்ல ஆசைப்பட்ட ஆனந்திபாயை இந்து வைதீகவாதிகள் பழித்தனர். பாராட்டி ஊக்கப் படுத்திய கிருத்துவர்களோ மதம் மாறத் தூண்டினர். ஸ்ரீராம்பூர் கல்லூரிக் கூடத்தில் ஆனந்திபாய் மக்களைக் கூட்டி அவர்களிடம் தனது மருத்துவராகும் கனவையும் அதை நிறைவேற்றத் தானும் தனது கணவரும் சந்திக்கும் பிரச்சனகளையும் விளக்கிப் பேசினார். இந்தியாவில் பெண்மருத்துவர்களின் அத்தியாவசியத்தையும் இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கவேண்டுமென்ற தனது குறிக்கோளையும் அவர்களுக்குப் புரிய வைத்தார். எந்தக் காலத்திலும் தான் கிருத்துவ மதத்திற்கு மாறமாட்டேன் என்று உறுதியும் அளித்தார். அவரது பேச்சு எங்கும் பரவி நாடு முழுவதிலிருந்தும் அவருக்கு பண உதவி வர ஆரம்பித்தது. அப்போதைய இந்திய வைசிராய் அவரது படிப்பிற்காக ரூபாய் 200 அளித்தார்.

அமெரிக்காவில் மருத்துவப் படிப்பு
1883ல் ஆனந்திபாய் கொல்கத்தாவிலிருந்து நியூயார்க் நகருக்குக் கப்பலில் புறப்பட்டார். தார்பார்ன் தம்பதியினருக்குப் பழக்கமான ஆங்கிலப் பெண்மணிகள் இருவர் அவருக்குத் துணையாக உடன் பயணம் செய்தனர். தியோடிசியா நியூயார்க்கில் அவரை வரவேற்றார். ஆனந்திபாய் பெண்கள் மருத்துவக் கல்லூரிக்கு (பென்சில்வேனியா) விண்ணப்பித்தார்.[3] விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அக்கல்லூரித் தலைவர் ரேச்சல் போட்லி, அவரைக் கல்லூரியில் சேர்த்துக்கொண்டார். ஆனந்திபாய் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தபோது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும் பழக்கமில்லாத உணவும் அவரது உடல் நலத்தை மிகவும் மோசமாக்கின. காச நோய் அவரைத் தாக்கியது. அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி அவர் மார்ச் 11, 1886ல் மருத்துவப் பட்டம் (எம். டி) பெற்றார். அவரது ஆராய்ச்சிக் கட்டுரையின் தலைப்பு - ஆரிய இந்துக்களின் தாய்மை மருத்துவம். மருத்துவராகப் தேர்ச்சி பெற்ற அவருக்கு விக்டோரியா மகாராணி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.

1886ன் இறுதியில் ஆனந்திபாய் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்தியாவில் அவருக்கு அமோகமான வரவேற்புக் கிடைத்தது. கோலாப்பூர் சமஸ்தானத்திலிருந்த ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

பெப்ரவரி 26, 1887ல் 22 வயதுகூட நிரம்பாத ஆனந்திபாய் காலமானார். அவரது மரணத்தால் நாடு முழுவதும் துயரத்தில் மூழ்கியது. அவரது அஸ்தி தியோடிசியா கார்பெண்டருக்கு அனுப்பப்பட்டது. தியோடிசியா அதனை நியூயார்க்கில் தங்களது குடும்ப கல்லறைத் தோட்டத்தில் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இவரைப் பற்றிய புத்தகங்கள்
1888ல் கரோலின் வெல்ஸ் ஹீலி டால் எழுதிய ஆனந்திபாயின் வாழ்க்கை வரலாறு.[4].
ஆனந்திபாயின் வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தூர்தர்ஷன் இந்தித் தொடர் - ஆனந்தி கோபால். ( இயக்கம் - கமலாக்கர் சாரங்)
ஸ்ரீகிருஷ்ண ஜனார்தனன் ஜோஷியின் மராத்தி புனைவுப் புதினம் - ஆனந்தி கோபால். இப்புதினத்தை ஆஷா தாம்லே ஆங்கிலத்தில் சுருக்கி மொழிபெயர்த்தார். மேலும் இப்புதினம் ராம் ஜி. ஜோக்லேகரால் அதே பெயரில் நாடகமாக்கப்பட்டது.

Monday, 26 February 2018

INDIA FIRST FEMALE DOCTOR ANANDBHAI GOPALRAO JOSHI DIED 1887 FEBRUARY 26




INDIA FIRST FEMALE DOCTOR 
ANANDBHAI GOPALRAO JOSHI 
DIED 1887 FEBRUARY 26




Anandibai Gopalrao Joshi (Marathi: आनंदीबाई गोपाळराव जोशी) (31 March 1865 – 26 February 1887) was one of the earliest Indian female physicians.[1][2] She was the first woman of Indian-origin to study and graduate with a 2 years diploma in medicine in the United States. She is also believed to be the first woman to set foot on American soil from India.[3] She has many variations of spelling of her name, including; Anandibai Joshee and Anandi Gopal Joshee

Early life[edit source]

Joshi was born as Yamuna, in Kalyan of the Thane district in present-day Maharashtra, to an orthodox Hindu family. Her family used to be landlords in Kalyan but lost their economic wealth. As that was the practice at that time, Yamuna was married at the age of nine to Gopalrao Joshi, a widower almost twenty years her senior, due to pressure laid by her family.

After marriage, her husband renamed her Anandi.[citation needed] Gopalrao Joshi worked as a postal clerk in Kalyan. Later, he was transferred to Alibag, and then, finally, to Calcutta (today, Kolkata). He was a progressive thinker, and supported education for women, which was not very prevalent at the time.[4] It was common for Brahmins in those times to be proficient in Sanskrit. However, influenced by Lokhitawadi's Shat Patre, Gopalrao regarded learning English as more pragmatic than learning Sanskrit. Noticing Anandibai's interest, he helped her receive an education and learn English.[citation needed]


At the age of fourteen, Anandibai gave birth to a boy, but the child lived only for ten days because the medical care necessary for his survival was unavailable. This situation proved to be a turning point in Anandibai's life, and inspired her to become a physician.[5]

Towards a medical career[edit source]


Gopalrao encouraged Anandibai to study medicine. In 1880, he sent a letter to Royal Wilder, a well-known American missionary, stating Anandibai's interest in studying medicine in the United States, and inquiring about a suitable post in the US for himself[citation needed]. Wilder offered to help if the couple would convert to Christianity. This proposition, however, was not acceptable to the Joshi couple.

Wilder published the correspondence in his Princeton's Missionary Review. Theodicia Carpenter, a resident of Roselle, New Jersey, happened to read it while waiting to see her dentist. Anandibai's desire to study medicine, and Gopalrao's support for his wife impressed her, and she wrote to them offering Anandibai accommodation in America. An exchange of many letters between Anandibai and Theodicia ensued in which they discussed, among other things, Hindu culture and religion.

While the Joshi couple was in Calcutta, Anandibai's health was declining. She suffered from weakness, constant headaches, occasional fever, and, sometimes, breathlessness. Theodicia sent her medicines from America, without results. In 1883, Gopalrao was transferred to Serampore, and he decided to send Anandibai by herself to America for her medical studies despite her poor health. Though apprehensive, Gopalrao convinced her to set an example for other women by pursuing higher education.

A physician couple named Thorborn suggested Anandibai to apply to the Women's Medical College of Pennsylvania. On learning of Anandibai's plans to pursue higher education in the West, orthodox Hindu society censured her very strongly. Many Christians supported her decision, but they wanted her to convert to Christianity.

Anandibai addressed the community at Serampore College Hall, explaining her decision to go to America and obtain a medical degree. She discussed the persecution she and her husband had endured. She stressed the need for Hindu female doctors in India, and talked about her goal of opening a medical college for women in India. She also pledged that she would not convert to Christianity. Her speech received publicity, and financial contributions started pouring in from all over India.

In America[edit source]

Anandibai Joshee graduated from Women's Medical College of Pennsylvania (WMC) in 1886. Seen here with Kei Okami (center) and Tabat Islambooly (right). All three completed their medical studies and each of them was the first woman from their respective countries to obtain a degree in Western medicine.
Anandibai travelled to New York from Calcutta by ship, chaperoned by two English female acquaintances of the Thorborns. In New York, Theodicia Carpenter received her in June 1883. Anandibai wrote to the Women's Medical College of Pennsylvania, asking to be admitted to their medical program,[6] (which was the second women's medical program in the world). Rachel Bodley, the dean of the college, enrolled her.

Anandibai began her medical education at age 19. In America, her declining health worsened because of the cold weather and unfamiliar diet. She contracted tuberculosis.[5] Nevertheless, she graduated with an MD on 11 March 1886; the topic of her thesis was "Obstetrics among the Aryan Hindus". On her graduation, Queen Victoria sent her a congratulatory message.[5]

Return to India[edit source]
In late 1886, Anandibai returned to India, receiving a hero's welcome. The princely state of Kolhapur appointed her as the physician-in-charge of the female ward of the local Albert Edward Hospital.

Anandibai died early the next year on 26 February 1887 before turning 22. Her death was mourned throughout India. Her ashes were sent to Theodicia Carpenter, who placed them in her family cemetery in Poughkeepsie, New York.

Bibliography[edit source]
In 1888, American feminist writer Caroline Wells Healey Dall wrote Joshi's biography.[4][7]

Doordarshan, an Indian public service broadcaster aired a Hindi series directed by Kamlakar Sarang named "Anandi Gopal" based on her life.[citation needed]

Shrikrishna Janardan Joshi wrote a fictionalised account of her life in his Marathi novel Anandi Gopal. It has also been adapted into a play of the same name by Ram G. Joglekar.[citation needed]

Marathi writer Dr. Anjali Kirtane has done extensive research on the life of Dr. Anandibai Joshi and has written a Marathi book titled 'Dr. Anandibai Joshi, Kaal ani Kartutva' (meaning: Dr. Anandibai Joshi, her times and accomplishments) published by Majestic Prakashan, Mumbai. The book contains very rare photographs of Dr. Anandibai Joshi.[citation needed]

Legacy[edit source]
The Institute for Research and Documentation in Social Sciences (IRDS), a non-governmental organization from Lucknow, has been awarding the Anandibai Joshi Award for Medicine in reverence for her early contributions to the cause of advancing medical science in India.[8]

In addition, the Government of Maharashtra has established a fellowship in her name for young women working on women’s health.