Saturday, 3 October 2020

KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3

 


KADAMBINI GANGULY FIRST DOCTOR IN BRITISH INDIA BORN 1861 JULY 18 - 1923 OCTOBER 3




கடம்பினி கங்கூலி (அ) காதம்பனி கங்குலி (Kadambini Ganguly) (வங்காள: কাদম্বিনী গাঙ্গুলি; 18 ஜூலை 1861 – 3 அக்தோபர் 1923), சந்திரமுகி பாசு இருவரும் பிரித்தானியப் பேரரசின் முதல் இரண்டு இந்தியப் பெண் பட்டதாரிகள் ஆவர். இவர் முதல் மேலை மருத்துவப் பயிற்சிப் பட்டம்பெற்ற தெற்காசியப் பெண் உடலியல் மருத்துவர் ஆவார். ஆனந்தி கோபால் ஜோஷி அதே ஆண்டில் (1886) அமெரிக்காவில் மருத்துவப் பட்டம் பெற்ற பெண் உடலியல் மருத்துவர் ஆவார்.


வாழ்க்கைக் குறிப்பு

கடம்பினி கங்கூலி 1861ல் பிரிட்டிஷ் இந்தியாவில் பீகாரைச் சேர்ந்த பகல்பூரில் பிறந்தார். இவரது சொந்த ஊர் பரிசாலிலுள்ள (பங்களாதேஷ்) சந்ததியாகும்.இவரது தந்தை பிரஜ கிஷோர் பாசு, பகல்பூர் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். பிரம சீர்திருத்தவாதியான அவரது தந்தை அபய் சரண் மாலிக் என்பவருடன் சேர்ந்து பகல்பூர் மகில சமிதி என்ற பெண்கள் அமைப்பை 1863ல் ஏற்படுத்தினார். அது பிரித்தானிய இந்தியாவில் பெண்விடுதலைக்காக உருவாக்கப்பட்ட முதல் இயக்கமாகும்.


கடம்பினி கங்கூலி பங்க மகில வித்யாலயாபள்ளியில் படித்தார். அப்பள்ளி 1878ல் பெத்தூன் பள்ளியுடன் இணைக்கப்பட்டது. பெத்தூன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது 1878ல் கல்கத்தாப் பல்கலைக்கழக நுழைவு தேர்வினை எழுதி அதில் தேர்ச்சியும் பெற்றார். அவ்வாறு வெற்றிபெற்ற முதல் பெண்மணி அவர் ஒருவரே. அவரது முயற்சியைப் பாராட்டும்வகையில் பெத்தூன் கல்லூரியில் 1879ல் முதலில் இடைநிலைப் (FA) படிப்பும் தொடர்ந்து இளங்கலைப் பட்டபடிப்பும் தொடங்கப்பட்டன. இவரும் சந்திரமுகி பாசுவும் பெத்தூன் கல்லூரியின் முதல் பெண் பட்டதாரிகள். இருவரும் இந்தியாவிலும் மற்றும் பிரித்தானியப் பேரரசிலுமே முதல் பெண் பட்டதாரிகளாக ஆனார்கள்.[1]



மருத்துவத்துறை

கங்கூலி கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1886ல் ஜிபிஎம்சி (GBMC – Graduate of Bengal Medical College) பட்டம் பெற்று மருத்துவராகப் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். இவரும் ஆனந்தி கோபால் ஜோஷியும் மேற்கத்திய மருத்துவம் பயின்ற முதல் இந்தியப் பெண் மருத்துவர்கள். 1881ல் அபலா போஸ் என்ற பெண்மனி நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்றுங்கூட கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடமளிக்க மறுத்துவிட்டனர். அதனால் அவர் மெட்ராஸ் (இப்பொழுது - சென்னை) மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் படிப்பை முடித்து மருத்துவப் பட்டம் பெறவில்லை. கங்கூலி அவரது ஆசிரியர்களிடமிருந்தும் சமூகத்தின் பழமைவாதிகளிடமிருந்தும் பலவிதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. அவர் 1892ல் மேற்படிப்புக்காக ஐக்கிய ராச்சியத்துக்குச் சென்று எல்ஆர்சிபி (LRCP) – எடின்பர்க், எல்ஆர்சிஎஸ் (LRCS ) - கிளாஸ்கோ, ஜிஃப்பிஎஸ் (GFPS) - டப்ளின் ஆகிய மருத்துவப் பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பினார். லேடி டுஃபெரின் மருத்துவமனையில் சிறிது காலம் வேலை பார்த்துவிட்டுப் பிறகு சொந்த மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டார்.



சமுதாயப் பணிகள்

1883ல் கடம்பினி பிரம்ம சீர்திருத்தவாதியும் பெண்விடுதலைக்குப் போராடியவருமான துவாரகநாத் கங்கூலியைத் திருமணம் செய்தார். அதற்குப்பிறகு ஆசிரியர்கள், பழமைவாதிகளின் எதிர்ப்பை மீறி காதம்பனி மருத்துவம் படித்தார். இதன் மூலம் தெற்காசியக் கல்லூரி ஒன்றில் அலோபதி மருத்துவம் படித்த முதல் பெண் என்ற பெருமையை காதம்பனி பெற்றார். ஆனந்திபாய் அமெரிக்காவிலும் காதம்பானி கல்கத்தா மருத்துவக்கல்லூரியிலும் ஒரே ஆண்டில் மருத்துவம் பட்டம் பெற்றனர்.


கடம்பினியும், துவாரகநாத் கங்கூலியும் பெண்விடுதலைக்காகவும் இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்த நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்த பெண்களின் பணிவரைமுறைகளைச் சீர்திருத்தவும் பாடுபட்டனர். 1889ல் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆறு பிரதிநிதிகளில் கடம்பினி கங்கூலியும் ஒருவர். வங்காளப் பிரிவினைக்குப் பிறகு 1906ல் கல்காத்தாவில் மகளிர் மாநாட்டை நடத்தினார். 1908ல் தென்னாப்பிரிக்காவிலுள்ள டிரான்ஸ்வாலில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட வேலையாட்களுக்கு அனுதாபமும் ஆதரவும் தெரிவிக்கும் வண்ணம் கல்கத்தாவில் ஒரு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்து அதற்குத் தலைமை தாங்கி நடத்தினார். அந்தப் பணியாளர்களூக்கு உதவிசெய்ய சங்கங்கள் அமைத்து நிதி திரட்டினார். 1914ல் கல்கத்தாவுக்கு வந்த மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்த சதாரன் பிரம சமாஜ் நடத்திய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.


எட்டுக் குழந்தைகளுக்குத் தாயான கங்கூலி வீட்டுப்பணிகளுக்கும் அதிகநேரம் செலவிட நேரிட்டது. அவர் தையற்கலையிலும் தேர்ந்தவராயிருந்தார்.


அமெரிக்க வரலாற்றாளரான டேவிட் கோப்ஃப்[2] கடம்பினி கங்கூலியைப் பற்றிக் கூறுவது:


துவாரகநாத் கங்கூலியின் மனைவியான கடம்பினி திறமையானவரும் முற்போக்கு சிந்தனை கொண்டவருமாவார், அவர்கள் இருவரும் பரஸ்பர அன்பும் பாசமும் அறிவுமுடைய தம்பதிகள்.வங்காள சமுதாயத்தில் பெண் விடுதலைக்குப் பாடுபட்ட பிரம மற்றும் கிருத்துவப் பெண்களுக்கிடையே கங்கூலி வித்தியாசமானவர். சூழ்நிலைகளைத் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய தனது தனித்திறமையால் வங்காளப் பெண்களின் விடுதலைக்காக செயற்பட்ட சதாரன் பிரமோக்களுக்கு அவர் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தார்



KADAMBINI GANGULY ,BRITISH EMPHIRE`S 
FIRST LADY DOCTOR GRADUATED  1886
DIED 1923 OCTOBER 3




Kadambini Ganguly (Bengali: কাদম্বিনী গাঙ্গুলি) (18 July 1861 – 3 October 1923) and Chandramukhi Basu were the first two female graduates from India and the entire British Empire. She was also the first South Asian female physician, trained in western medicine, to graduate in South Asia. Anandi Gopal Joshi, another Indian, graduated as a physician the same year (1886) in the United States.

Early life[edit]

The daughter of Brahmo reformer Braja Kishore Basu, she was born on 18 July 1861 at Bhagalpur, Bihar in British India. The family was from Chandsi, in Barisal which is now in Bangladesh. Her father was headmaster of Bhagalpur School. He and Abhay Charan Mallick started the movement for women's emancipation at Bhagalpur, establishing the women's organisation Bhagalpur Mahila Samiti in 1863, the first in India.


Kadambini started her education at Banga Mahila Vidyalaya and while at Bethune School (established by Bethune) in 1878 became the first woman to pass the University of Calcutta entrance examination. It was partly in recognition of her efforts that Bethune College first introduced FA (First Arts), and then graduation courses in 1883. She and Chandramukhi Basu became the first graduates from Bethune College, and in the process became the first female graduates in the country and in the entire British Empire.[1]

Medical education and profession[edit]

Ganguly studied medicine at the Calcutta Medical College. In 1886, she was given a Graduate of Bengal Medical College degree. She thus became one of the two, Anandi Gopal Joshi being the other, Indian women doctors who qualified to practice western medicine. Also another Indian woman by the name of Abala Bose passed entrance in 1881 but was refused admission to the medical college and went to Madras (now Chennai) to study medicine but never graduated.


Kadambini overcame some opposition from the teaching staff, and orthodox sections of society. She went to the United Kingdom in 1892 and returned to India after qualifying as LRCP (Edinburgh), LRCS (Glasgow), and GFPS (Dublin). After working for a short period in Lady Dufferin Hospital, she started her own private practice

Social activities[edit]

In 1883 she married the Brahmo reformer and leader of women's emancipation Dwarkanath Ganguly. They were actively involved in female emancipation and social movements to improve work conditions of female coal miners in eastern India. She was one of the six female delegates to the fifth session of the Indian National Congress in 1889, and even organised the Women's Conference in Calcutta in 1906 in the aftermath of the partition of Bengal. In 1908, she had also organised and presided over a Calcutta meeting for expressing sympathy with Satyagraha – inspired Indian labourers in Transvaal, South Africa. She formed an association to collect money with the help of fundraisers to assist the workers.

Personal life[edit]

As the mother of eight children, she had to devote considerable time to her household affairs. She was deft in needlework.

The noted American historian David Kopf[2] has written, "Ganguli's wife, Kadambini, was appropriately enough the most accomplished and liberated Brahmo woman of her time. From all accounts, their relationship was most unusual in being founded on mutual love, sensitivity and intelligence… Mrs. Ganguli's case was hardly typical even among the more emancipated Brahmo and Christian women in contemporary Bengali society. Her ability to rise above circumstances and to realize her potential as a human being made her a prize attraction to Sadharan Brahmos dedicated ideologically to the liberation of Bengal's women."[3]





No comments:

Post a Comment