Thursday 22 October 2020

AMIT SHAH , PRESIDENT OF BJP BORN 1964 OCTOBER 22

 

AMIT SHAH , PRESIDENT OF BJP 

BORN 1964 OCTOBER 22



.அமித் சா அல்லது அமித் ஷா (ஆங்கில மொழி: Amit Shah, பிறப்பு:1964) பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர்.[1] மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். ஆனால் 2010இல் அவர் உத்தரவின் பேரில் குசராத் மாநில காவல்துறையால் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட காவல்துறை மோதல் கொலைகள் வழக்கின் காரணமாகத் தன் அமைச்சர் பதவியைத் துறக்க நேர்ந்தது.[2][3][4] 2014 இந்திய நாடாளு மன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பரப்புரை மேலாளராக நியமிக்கப்பட்டார்.[5] இத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய சனதா கட்சி பெரும் வெற்றி அடைந்ததற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையுமே காரணம் என்ற கருதப்படுகிறது.[6]


பிறப்பு, கல்வி, பணி


அமித் சா 1964 ஆம் ஆண்டில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு தொழில் அதிபர் ஆவார். பயோவேதியியலில் இளையர் பட்டம் பெற்றார்.[3] சிலகாலம் பங்குச் சந்தைத் தொழிலில் ஈடுபட்டார். குசராத்து மாநில நிதிக் குழுமத்தில் தலைவராகவும் ஆமதாபாது மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி செய்தார்.


அரசியல் வாழ்க்கை


தொடக்கத்தில் இராட்டிரிய சுயம்சேவக் சங்க உறுப்பினராகவும், பாரதிய சனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற அமைப்பின் தலைவராகவும் இருந்தார். 1985இல் நரேந்திர மோதியின் கீழ் இளைஞர் அணியில் பணியாற்றினார். பின்னர் பா.ஜ.க.வில் இணைந்தார். குசராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராகப் பலமுறை பணி செய்தார்.[7] 2002ஆம் ஆண்டில் நரேந்திர மோதி அமைச்சரவையில் குசராத்து மாநில உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். 2005ஆம் ஆண்டில் நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலை வழக்கில் அமித் சா மீது குற்றம் சாட்டப் பட்டது. 2007 ஆம் ஆண்டில் அமைந்த அமைச்சரவையிலும் அமைச்சரானார். 2009 ஆம் ஆண்டில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட சிக்கலில் அமித் சாவின் பெயர் அடிபட்டது. காவல்துறை மோதல் வழக்கில் சிக்கிய அமித் சா குசராத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதனால் அவர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பப்பட்டார். சொராப்தீன் சேக் கொலை வழக்கில் இருந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.



2014 இந்திய பொதுத் தேர்தல்

சூன் 2013 இல் உத்தரப் பிரதேசத் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக அமர்த்தப்பட்டார்.[8][9] ஓராண்டுக் காலம் அங்கு தங்கி பா.ஜ.க. வளர்ச்சிக்காகக் கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். 2014 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யின் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு அமித் சாவின் உழைப்பும் சாதுரியமும் திறமையும் காரணங்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.[10][11] உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதால் அமித் ஷா அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]

No comments:

Post a Comment