LIVE IN NATURE ,NATURALLY

 


LIVE IN NATURE ,NATURALLY 



மாந்தனைக் கொல்வது

*நோயா? அச்சமா?*

1. பாமர மனிதனை விடப்
படிப்பறிவுள்ளவன் விரைவில் இறப்பது ஏன்?

2.அடுப்புப் புகையைப்
பல மடங்கு சுவாசித்த கிழவிகளைவிட 'சிகரட்' புகைத்த பலருக்குப் புற்றுநோய் வருவது ஏன்?

3. கள்ளச் சாராயம் குடித்த கிழவனைவிட
கலர் சாராயம் குடிக்கும் குமரர்கள் பலருக்குக்
கல்லீரல் பாதிப்பு ஏன்?

4.தேள் கொட்டினால் வெறும் வெங்காயத்தைத் தேய்த்துவிட்டு வேலையைத் தொடர்பவன் எங்கே?
எரும்பு கடிக்கு மருத்துவமனைக்கு விரைபவன் எங்கே?

5. நெல் அறுவடை செய்யும்போது விரலை அரிவாள் வெட்டிவிட்டால் கையில் களிமண்ணை அப்பிக்கொண்டு வேலை பார்ப்பவன் எங்கே?
பிளேடு கிழிக்கு ஆன்டிபயோடிக் இட்டு கட்டுப் போடுபவன் எங்கே?

6. அழுக்கு மணலில் விழுந்து பிரண்டு விளையாடிய குழந்தையைவிட
மணலையே தொட்டிராத குழந்தைக்கு நோய் எதிர்ப்பு *ஆற்றல் குறைபாடு* ஏன்?

7. உண்ட கையோடு ஓடிவந்து பிரசவம் பார்த்து ஆரோக்கிய குழந்தையை அள்ளிக் கொடுத்த கிழவிகளின் கையைவிட ஆயிரம் முன்னெச்சரிக்கையோடு அறுவை சிகிச்சை செய்த குழந்தை ஐசியூவில் இருப்பது ஏன்?

*ஏன்? ஏன்? ஏன்?*

காரணம் மிகச் சிறியது.

இயற்கைக்கும் நமக்குமான தொடர்பு இல்லாமல் போனது ஒன்று.

நோயைப் பற்றிய அதிக அறிவோடு இருப்பது மற்றொன்று.

*எங்கள் கிழவிகளுக்குத் தெரிந்தது எல்லாம்...*
தலைவலி, நெஞ்சுவலி, வயிறுவலி கைகால் வலி அவ்வளவுதான்.

ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் உடம்பில் உள்ள 6000 கோடி செல்களுக்கும் தனித்தனியே மருத்துவம் பார்க்கப்படும்.

அதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மனிதனின் வாழ்நாள் அதிகளவு முப்பதாகக் குறைந்துவிடும்.

எந்த நோயும் மனிதனைக் கொல்வதில்லை. அதைப்பற்றிய *அச்சம் (பயம்) தான் அவனைக் கொல்கிறது.*

இயற்கை தனது கோட்பாடுகளை ஒருபோதும் மீறுவதில்லை.

*உடலை அதன் போக்கில் விட்டுவிட்டு* உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்.

அது எதற்காக வடிவமைப்பட்டதோ அதை மிகச் சிறப்பாகச் செய்யும்.

என்னைப் பொறுத்தவரை எவர் ஒருவர் *இயற்கையோடு ஒத்து* ..

அதாவது மனமும் உடலும் இணைந்து செயல்படுகிறாரோ

*அவருக்கு நோய்கள் வருவதில்லை,* அப்படியே வந்தாலும் ஓரிரு நாள்களில் குணமாகிவிடுகிறது.

*நல்ல மழையில் நனையுங்கள்...* அஞ்சி ஓடி ஒளியாதீர்கள்.

வெயிலைக் கண்டு அச்சப்படாதீர்கள்..!

*காற்றைக் கண்டு அஞ்சாதீர்கள்..!*

குளிரில்
வெப்ப உடை (ஸ்வெட்டர்) போட்டுப் பதுங்காதீர்கள்...!

*சுடுதண்ணீரில் ஒருபோதும் குளிக்காதீர்கள்..!*

சின்னச் சின்னத் தொல்லைகளுக்கெல்லாம் மருத்துவரிடம் செல்லாதீர்கள்...!

*இப்படி வாழ்ந்து பாருங்கள்...!*

வாழ்வே இனிமையாகும்..!

நன்றி...
*இயற்கையோடு இணைந்து வாழ்வோம்..!*

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

PARAVAS OF TAMILNADU

MAHARANI SITADEVI OF BARODA the "Indian Wallis Simpson" INTERESTING LIFE STORY OF HER