Wednesday 14 October 2020

BABY SAROJA ,CHILD ACTRESS BORN 1931 JANUARY 28 - 2019 OCTOBER 14

 

BABY SAROJA ,CHILD ACTRESS BORN 

1931 JANUARY 28 - 2019 OCTOBER 14



.சரோஜா ராமாமிருதம் (பிறப்பு: 28 ஜனவரி 1931 - இறப்பு: 14 அக்டோபர் 2019[1]) என்பவர் பேபி சரோஜா என்னும் பெயரில் 1930களில் தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை வேடங்களில் நடித்தவர். இவர் பாலயோகினி (1937), தியாகபூமி (1939), காமதேனு (1941) ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[2


வாழ்க்கைச் சுருக்கம்

பிரபல திரைப்பட இயக்குனர் கே. சுப்பிரமணியத்தின் சகோதரர் கே. விசுவநாதன், மற்றும் வத்சலா ஆகியோருக்குப் பிறந்தவர் சரோஜா. தந்தை விசுவநாதன் சென்னையில் சித்திரா டாக்கீசு என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை நடத்தி வந்தார். பேபி சரோஜா நடித்த மூன்று திரைப்படங்களையும் கே. சுப்பிரமணியமே தயாரித்திருந்தார். காமதேனு திரைப்படத்தில் சரோஜாவின் தந்தையும் (கே. பி. வத்சல்), தாயும் கதாநாயகனாகவும் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.[3] அக்காலகட்டத்தில் கலிபோர்னியா மாநிலம் சாந்தா மொனிக்காவைச் சேர்ந்த ஷெர்லி டெம்பிள் என்ற குழந்தை நட்சத்திரம், பிரமாதமான நடிப்பால் உலகப் புகழ் பெற்றிருந்தார். அதே சமயம் இந்தியாவில் சரோஜா அவர்கள் தன் நடிப்புத் திரமையைக் கொண்டு எல்லோராலும் பாராட்டப் பட்டு இந்தியாவின் ஷிர்லி டெம்பிள் என்று மக்களால் போற்றப்பட்டார். மேலும் அப்போது தமிழ்நாட்டில் பிறந்த சில பெண் குழந்தைகளுக்குப் ”சரோஜ” என்று பெயர் சூட்டினார்கள்.[4]




இறப்பு

பேபி சரோஜா மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் 2019 அக்டோபர் 14 ஆம் நாள் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 88.[5][1]


மக்களின் பார்வையில் அதிகம் படாமல் கடந்து போன ஒரு செய்தி இந்தியாவின் முதல் குழந்தை நட்சத்திரம் சரோஜா காலமானார் என்பதாகும். அவரை பற்றிய ஒரு சின்ன பிளாஷ்பேக்.


தமிழ் சினிமாவின் முதல் குழந்தைகளுக்கான திரைப்படமாக 1937ல் வெளியானது பாலயோகினி. இப்படத்தின் மூலம் 5 வயது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பேபி சரோஜா. 1931ல் சென்னையில் மிகப்பெரிய தேசபக்தி மிக்க, கலைக்குடும்பத்தில் பிறந்தவர் பேபி சரோஜா. பக்திப் படங்கள், புராணப் படங்கள், சமூகப் படங்கள் வரும் காலகட்டத்தில் முதலில் வந்த குழந்தைகள் படம் இது. இதனை கே.சுப்ரமணியம் இயக்கினார். இப்படத்தில் சரோஜாவின் நடிப்பு, சொந்த குரலில் பாடிய பாடல்கள் அவரை ஒரே படத்தில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.


அன்றைய ஹாலிவுட் பட உலகின் உலகப்புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமாக விளங்கியவர் ஷர்லி டெம்பிள். பேபி சரோஜாவை இந்தியாவின் ஷர்லி டெம்பிள் என்று அழைத்தனர். பாலயோகினி படம் வெளியான பின்பு பிறந்த பல பெண் குழந்தைகளுக்கு சரோஜா என்றே பெயர் வைத்தனர். சரோஜா மை, சரோஜா பவுடர், சரோஜா சாந்து, சரோஜா வளையல் என்று அப்போது சரோஜா பெயரில் அழகு சாதன பொருட்கள் விற்கப்பட்டன.




பாலயோகினியை தொடர்ந்து கல்கி எழுதிய தியாக பூமி படத்தை இயக்கினார் கே.சுப்ரமணியம். தேசபக்தி மிக்க இப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. கே.டி.மகாதேவன், எஸ்.டி.சுப்புலட்சுமி இணைந்து நடித்த இப்படத்தில் பேபி சரோஜாவையும் நடிக்க வைத்தார் .


இந்த படத்திற்கு பிறகு பேபி சரோஜாவின் புகழ் மேலும் உயர்ந்தது. துணிப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என எல்லாவற்றிலும் பேபி சரோஜாவின் படம் அச்சிடப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் எஸ்.ராஜேஸ்வர்ராவ் இசையில், நந்தில் ஜஸ்வந்லால் இயக்கியப் படம் 1941 ல் வெளியான காமதேனு பேபி சரோஜா நடித்த மூன்றாவது படம். அவர் நடித்த கடைசி படமும் இதுதான்.


மூன்றே படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரிட்டிஷ் இந்தியாவின் புகழ்பெற்ற முதல் குழந்தை நட்சத்திரம் என்ற பெயர் பெற்றவர் பேபி சரோஜா. 88 வயது வரை சென்னையில் வசித்து வந்த அவர் கடந்த மாதம் 14ந் தேதி காலமானார்.


சாதாரண ரோஜா அல்ல, சரோஜா!


சென்ற திங்­கட்­கி­ழமை, ‘தமிழ் சினி­மா­வின் முதல் குழந்தை நட்­சத்­தி­ரம்’ என்று பறை­சாற்­றப்­பட்ட பேபி சரோஜா மறைந்து விட்­டார்.


‘இந்­தி­யா­வின் ஷர்லி டெம்­பிள்’ என்று பிர­பல ஹாலி­வுட் குழந்தை நட்­சத்­தி­ரத்­திற்கு நிக­ரா­கத் தென்­னாட்­டில் பேசப்­பட்ட பேபி சரோஜா, தமிழ் சினி­மா­வின் ஆரம்ப பதிற்­றாண்­டு­க­ளில் மூன்றே படங்­க­ளில் நடித்­தா­லும், அவ­ருக்­குக் கிடைத்த வர­வேற்­பால் தமிழ் சினிமா சரித்­தி­ரத்­தின் பக்­கங்­க­ளில் நீங்­காத இடத்­தைப் பெற்­றி­ருக்­கி­றார்.





பேபி சரோஜா, திரு­ம­ண­மா­ன­பின் சரோஜா ராமா­மி­ரு­த­மாகி, தானே மூன்று பேபி­கள் (ஒரு பெண், இரண்டு ஆண்­கள்) பெற்­றெ­டுத்து, 88 வயது தாண்­டிய நிலை­யில் கால­மா­கி­யி­ருக்­கி­றார். சின்ன வய­தி­லேயே பெரிய புகழ் பெற்­று­விட்­டா­லும், பெரி­ய­வள் ஆன­வு­டன், சினிமா புகழ் பெற­வேண்­டும் என்று அவ­ருக்­குத் தோன்­றவே இல்­லை­யாம்.


இன்­றைய தலை­மு­றை­யி­ன­ருக்கு அவ­ரைக் குறித்­துத் தெரி­யாது. அத­னால் தான் ஒரு பிர­பல நாளி­த­ழில் அவ­ரு­டைய படத்­திற்­குப் பதி­லாக இன்­னொரு குழந்தை நடி­கை­யின் படத்­தைப் போட்­டுக் ‘காமெடி’ செய்­து­விட்­டார்­கள்!


சுமார் எண்­பது ஆண்­டு­க­ளுக்கு முன் வந்த ‘பால­யோ­கினி’ என்ற படத்­தில் சிறு­மி­யாக அறி­மு­க­மான பேபி சரோஜா சக்கை போடு போட்­ட­தால்­தான், தமிழ்­நாட்­டில் திரும்­பிய பக்­க­மெல்­லாம் குழந்­தை­க­ளுக்கு ‘சரோஜா, சரோஜா’ என்று பெயர் வைத்­தார்­கள் என்­பது சினிமா சரித்­திர ஐதீ­கம்.


இதற்கு ஏதா­வது அத்­தாட்சி உண்டா என்று கேட்­கி­றீர்­களா? ‘நாற்­பது வருட தமிழ் சினிமா’ என்ற தலைப்­பில் ‘இல்­லஸ்­டி­ரே­டெட் வீக்லி’ என்ற பிர­பல ஆங்­கில பத்­தி­ரி­கை­யில் ஏப்­ரல் 20, 1962ல் எழு­திய நிரு­பர் கோபா­ல­கி­ருஷ்­ணன், ‘‘தங்­கள் மகள் ‘பால­யோ­கினி’ என்ற படத்­தில் வந்த பேபி சரோ­ஜா­வைப்­போல் சுட்­டி­யாக இருக்­க­வேண்­டும் என்று நினைக்­காத தமிழ்­நாட்­டுப் பெற்­றோர்  இருந்­தி­ருக்­க­மாட்­டார்­கள்’’ என்று எழு­தி­யது ஒரு சின்ன சான்று.


இந்த எதிர்­பார்ப்­பு­டன் பெயர் சூட்­டப்­பட்­டுத்­தானோ என்­னவோ, ஒரு (ஈ.வி.) சரோஜா திரைப்­ப­டங்­க­ளில் ‘ஆடோ ஆடு’ என்று ஐம்­ப­து­க­ளி­லும் அறு­ப­து­க­ளி­லும் ஆடி­னார்.   இன்­னொரு (எம்) சரோஜா, தங்­க­வே­லு­வு­டன் கைகோர்த்­துக்­கொண்டு, ‘மன்­னார் அண்ட் கோவி’ன் வண்­ட­வா­ளங்­க­ளைத் தண்­ட­வா­ளத்­தில் ஏற்­றி­னார்! இவர்­கள் இரு­வ­ரும் முன்பே மறைந்து விட்­டார்­கள்...


எப்­பவோ ஒரு சில படங்­க­ளில் நடித்த ஒரு ‘குழந்தை’ நடி­கை­யின் மறைவு அவ்­வ­ளவு பெரிய சங்­க­தியா, செய்­தியா என்று கேட்­க­லாம். கேப்­ப­தில் தப்­பில்லை. ஏனென்­றால் பேபி சரோஜா அதை­யெல்­லாம் தாங்­கு­வாள். அவ்­வ­ளவு திறமை உடை­ய­வள். அவள் முகத்­தில் உணர்ச்­சி­கள் காட்­சிக்­குக் காட்சி மாறும். நன்­றாக நடிப்­ப­தோடு சிறப்­பாக பாட­வும் செய்­வாள்.  நல்ல திற­மை­சாலி. அத­னால்­தான் ஒரு சிறந்த இயக்­கு­ந­ரால் நல்ல படங்­க­ளில் நடிக்­க­வைக்­கப்­பட்ட போது அவள் வைரம் போல் மின்­னி­னாள். இதை­யெல்­லாம் இன்­றும் கூட யார் வேண்­டு­மா­னா­லும் பார்த்­துக் கொள்­ள­லாம். ஒரு காலத்­தில் புனே­வில் உள்ள திரைப்­பட ஆவண காப்­ப­கத்­தில் மட்­டும் இருந்த, பேபி சரோஜா முக்­கிய வேடத்­தில் நடித்த ‘தியாக பூமி’ இப்­போது யூ டியூ­பில் கூட இருக்­கி­றது. என்ன, பிரதி சில இடங்­க­ளில் மங்­க­லாக இருக்­கும். ஆனால் இரு­ளில்­தானே நட்­சத்­தி­ரம் தெரி­யும்!


பேபி சரோஜா தமிழ் சினி­மா­வுக்கு வரு­வ­தற்­குக் கார­ண­மாக இருந்­த­வர், அவ­ளு­டைய பெரி­யப்­பா­வான  பிர­பல திரை இயக்­கு­நர் கே. சுப்­பி­ர­ம­ணி­யம்.


மவு­னப்­ப­டங்­க­ளுக்கு  கதை­கள் எழு­திக் கொண்­டி­ருந்த கிரி­மி­னல் லாய­ரான சுப்­பி­ர­ம­ணி­யம், தன்­னு­டைய முதல் பேசும் பட­மான ‘பவ­ளக்­கொ­டி’­­­யில் தியா­க­ராஜ பாக­வ­த­ரை­யும் எஸ்.டி.சுப்­பு­லட்­சு­மி­யை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வர். தான் இயக்­கிய கதா­நா­ய­கியை பாகஸ்­த­ரா­கக்­கொண்டு அவர் அமைத்த மத­ராஸ் யுனை­டெட் ஆர்­டிஸ்ட்ஸ் கார்ப்­ப­ரே­ஷன் என்ற தயா­ரிப்பு ஸ்தாப­னத்­தின் வாயி­லாக அவர் எடுத்த முதல் படம், ‘பால­யோ­கினி’ . இந்­தப் படத்­தில்­தான் அவர் தன்­னு­டைய தம்பி மக­ளான ஏழு வயது சரோ­ஜாவை அதே பெய­ரில் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். ‘‘லட்ச ரூபாய் செல­வில் அவர் எடுத்த படத்­திற்கு  நூறு ரூபாய் பரிசு ஏற்­ப­டுத்தி, பொது ஜனங்­க­ளி­ட­மி­ருந்து தம் கதைக்கு சரி­யான முடிவை தெரிந்து கொண்­டார்,’’ என்ற ஒரு அரிய செய்தி, 1951ல் வந்த ஒரு ‘குண்­டூசி’ இத­ழில் ஒளிந்­து­கொண்­டி­ருக்­கி­றது.


பிரா­மண வித­வை­கள் அனு­ப­விக்­கும் துன்­பங்­கள், பிரிட்­டிஷ் ஆட்­சி­யின் கீழ் நில­விய வேலை­யில்லா திண்­டாட்­டம், ஆங்­கி­லே­ய­ரின் கைக்­கூ­லி­யான ஒரு உதவி கலெக்­ட­ரின் மனி­தா­பி­மா­ன­மற்ற, ஒழுக்­க­மற்ற செயல்­பா­டு­கள், போலீ­சா­ரின் கொடு­மை­யான போக்கு, ஜாதிய கொடு­மை­கள் என்று அன்­றைய சமூ­கத்­தில் நில­விய பல தீமை­களை உணர்ச்­சி­க­ர­மான சிறந்த திரைக்­க­தை­யின் வாயி­லாக நன்­றாக முன்­வைத்­தார் இயக்­கு­நர் சுப்­பி­ர­ம­ணி­யம். படத்­தில் பல சிறு­மி­களை அவர் அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.


இவர்­க­ளில் பேபி ருக்­மணி (பின்­னா­ளில் குமாரி ருக்­ம­ணி­யாக ‘ஸ்ரீவள்­ளி’­­­யில் அசத்­தி­ய­வர், நடிகை லட்­சு­மி­யின் தாய்), பிரு­க­தாம்­பாள், பால­ச­ரஸ்­வதி (சில படங்­க­ளில் நடித்­த­பின், ஐம்­ப­து­க­ளில் பின்­ன­ணிப் பாட­கி­யாக தடம் பதித்­த­வர்), பேபி சரோஜா முத­லி­யோர்


இடம்­பெற்­றார்­கள்.    


பிரா­மண வித­வை­கள் மொட்டை அடித்­துக் கொண்டு ஒதுங்கி வாழ­வேண்­டும் என்ற சமூ­கக்­கட்­டுப்­பாடு இருந்த காலத்­தில், சீதா­லட்­சுமி என்ற வித­வை­யைத் அதே பாத்­தி­ரத்­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் நடிக்க வைத்­தது அவர் மீது வம்பு வழக்­கு­க­ளுக்கு வகை செய்­தது. ஆனால் இரு­த­ய­மற்ற சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கு இடம் கொடுக்­கக்­கூ­டாது என்­ப­தில் சுப்­பி­ர­ம­ணி­யம் உறு­தி­யாக இருந்­தார்.


கடை­சி­யில், சமூ­கத்­தின் பிரச்­னை­க­ளுக்கு  ‘பால­யோ­கி­னி’­­­யில் தீர்­வாக ஒலிக்­கி­றது, பேபி சரோ­ஜா­வின் குழந்­தைத்­தன்மை கலந்த குரல். உச்­சக்­கட்­டத்­தில் சிறுமி சரோ­ஜா­வுக்கு கொடுத்த ஸ்தான­மும், அவள் படத்­தில் அழ­கா­கப் பாடிய, ‘கண்ணே பாப்பா, மிட்­டாய் வாங்­கித் தரு­கி­றேனே நான்’ என்ற பாட­லும் நல்ல வர­வேற்­பைப் பெற்­றன. ‘ஜாவோ ஜாவோ ஏ மேரே சாதோ’ என்று ‘பூரண் பக்த்’ என்ற இந்தி படத்­தில் கே.சி.டே  பாடிய பாட­லின் மெட்­டிற்கு எழு­தப்­பட்ட தமிழ்ப் பாடலை நன்­றா­கக் கற்று, தன்­னு­டைய மழைலை மாறாத குர­லில் பாடி­யி­ருந்­தாள் பேபி சரோஜா.


 ‘பால­யோ­கினி’ என்ற ஒரே படத்­தில் சரோ­ஜா­வின் புகழ் உச்­சத்­திற்­குப் போனது. அவள் தோற்­ற­மும், நடிப்­பும், பாட்­டும் அப்­படி. சரோ­ஜா­வின் அழ­கை­யும் சாமர்த்­தி­யத்­தை­யும் கண்டு பிர­மித்த தமி­ழர்­கள், தாங்­கள் பெற்ற ரோஜாக்­க­ளுக்­கும் ‘சரோஜா’ என்று பெயர் வைக்­கத் தொடங்­கி­னார்­கள். பின்­னா­ளில், அந்த வகை­யில்­தானோ என்­னவோ கே. சுப்­பி­ர­ம­ணி­யம் கன்­ன­டத்­தில் எடுத்த ‘கச்­ச­தே­வ­யானி’ படத்­தின் வாயி­லாக ஒரு ‘கன்­ன­டத்­துப் பைங்­கிளி’, சரோ­ஜா­தேவி என்ற பெய­ரில் தமிழ்­நாட்­டுக்கு வந்து சேர்ந்­தது!


பெரும் சங்­கீத நட்­சத்­தி­ர­மான தியா­க­ராஜ பாக­வ­த­ரின் ‘சிந்­தா­ம­ணி’­­­யும், ‘அம்­பி­கா­ப­தி’­­­யும் ரசி­கர்­க­ளைக் கொள்­ளைக் கொண்ட 1937ல், சென்னை பிலிம் லீக் நடத்­திய சினிமா தேர்­த­லில், பேபி சரோஜா ஓங்கி நின்ற ‘பால­யோ­கி­னி’­­­யும் முன்­ன­ணி­யில் நின்­றது!


‘பால­யோ­கினி’ வாயி­லாக பேபி சரோஜா அடைந்த புக­ழுக்கு ஒரு வழக்­கும் சான்­றாக இருக்­கி­றது.  காதர்  இஸ்­மா­யில் கம்­பெனி என்ற இறக்­கு­மதி நிறு­வ­னம் ஜப்­பா­னி­லி­ருந்து சந்­தன சோப்பை இறக்­கு­மதி செய்து, அதை ‘சரோஜா சாண்­டல் சோப்’ என்ற பெய­ரில் விற்­பனை செய்து வந்­தது. சுதே­சிப் பொருட்­களை மட்­டும் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்ற கொள்கை உடைய இயக்­கு­நர் சுப்­பி­ர­ம­ணி­யம், சரோ­ஜா­வின் பெயர் ஜப்­பான் சோப்பை விற்­கப் பயன்­ப­டு­வ­தற்கு எதி­ராக வழக்­குப் போட்டு அதை நிறுத்­தி­னார்! இந்த செய்தி, என்­னு­டைய முன்­னாள் கணி­தப் பேரா­சி­ரி­யர் எம்.ஆர். ரங்­க­ரா­ஜன் எழு­திய கே.சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் வாழ்க்கை சரி­தத்­தில் உள்­ளது.


பேபி சரோஜா முக்­கிய பாத்­தி­ரத்­தில் நடித்த அடுத்த படம், ‘தியாக பூமி’. கல்­கி­யின் தொடர் நாவ­லின் அடிப்­ப­டை­யில் எடுக்­கப்­பட்ட இந்­தப் படம், இரு­பது வாரங்­கள் ஓடிய பிறகு பிரிட்­டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளால் தடை செய்­யப்­பட்­டது.  


‘தியாக பூமி’­­­யில் பேபி சரோஜா நடித்த சாரு என்ற பாத்­தி­ரம் இடம்­பெற்ற ஒரு காட்­சி­யைக் கல்கி இப்­படி விவ­ரித்­தார்:


‘‘அன்று சாயங்­கா­லம்... சாரு சாவ­டிக்­குப்­பத்­திற்­குத் திரும்­பிய போது, குதித்­துக்­கொண்டு வீட்­டிற்­குள் போனாள்.


‘தாத்தா, தாத்தா, இன்­னிக்கு ஒரு சமாச்­சா­ரம் நடந்­தது. உனக்கு அதைச் சொல்­லவே மாட்­டேன்,’ என்­றாள்!


‘நீ சொல்­லாம போனா நானும் கேட்­கவே மாட்­டேன்’, என்­றார் சாஸ்­திரி!


‘நீ கேக்­காம போனா நான் அழு­வேன்’, என்­றாள் சாரு!


அவ­ரு­டைய மடி­யில் உட்­கார்ந்­து­கொண்டு, ‘தாத்தா, இன்­னிக்கு ஒரு மாமி­யைப் பாத்­தோம். ரொம்ப ரொம்ப நல்ல மாமி’, என்று சொல்­லி­விட்டு, சற்று மெது­வான குர­லில், ‘அந்த மாமி என்­னைக் கட்­டிண்டு முத்­த­மிட்டா, தாத்தா’, என்­றாள்’’.


கல்கி இப்­படி வர்­ணிக்­கும் காட்­சி­யில்,  குழந்தை சாருவை முத்­த­மிட்ட மாமி, வேறு யாரும் இல்லை. சாருவை பெற்­றெ­டுத்த தாய்­தான்! ஆனால் இந்த சங்­கதி அந்த நல்ல மாமிக்கோ, அவ­ளால் முத்­த­மி­டப்­பட்ட சாரு­வுகோ தெரி­யாது! அந்த ‘ரொம்ப நல்ல மாமி’­­­யின் நிஜ­மான தந்தை, தன்னை சாரு­வின் வளர்ப்பு தாத்­தா­வா­கக் கரு­திக்­கொண்­டி­ருக்­கும் சம்பு சாஸ்­தி­ரி­தான் !


பாட்டு, நடிப்பு, நாட்­டி­யம் என்று பல­வித உருக்­க­மான காட்­சி­க­ளில் பேபி சரோஜா ‘தியாக பூமி’­­­யில் அற்­பு­த­மாக நடித்­தாள். கே. சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் திரைக்­கதை, வச­னம், இயக்­கம் மற்­றும் தயா­ரிப்­பில் உரு­வான ‘தியாக பூமி’­­­யின் கதை­யில் சில ஓட்­டை­கள் இருந்­தா­லும்,  தர­மான நடிப்பு, அள­வான சங்­கீ­தம், நல்ல வச­னங்­கள், வித்­தி­யா­ச­மான கிளை­மேக்ஸ், தேசிய போராட்­டத்­தின் எழுச்சி, அடுக்கு மொழி வச­னங்­கள் இல்­லாத சீர்த்­தி­ருத்­தம் என்று பல சிறந்த அம்­சங்­கள் இருந்­தன. இவற்­றின் நடு­நா­ய­க­மாக சாரு­வாக நடித்த பேபி சரோ­ஜா­வின் கவர்ந்­தி­ழுக்­கும் வசீ­கர பிம்­பம் ஜொலித்­தது. இந்­துஸ்­தானி மெட்­டில் அவள் பாடிய, ‘சொல்லு காந்தி தாத்­தா­வுக்கு ஜே ஜே ஜே’ என்ற பாட­லும் வெற்றி அடைந்­தது.


கடை­சி­யாக, ‘காம­தேனு’ (1941) என்ற படத்­தில் பேபி சரோஜா நடித்­தாள். இதை இயக்­கி­ய­வர், இந்தி சினி­மா­வில் தலை­யாய இயக்­கு­நர்­க­ளில் ஒரு­வ­ராக கருத்­தப்­பட்ட நந்த்­லால் ஜஸ்­வந்த்­லால். ஆனால் படம் நல்ல வர­வேற்பை பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்லை.


‘காம­தே­னு’­­­விற்­குப் பிறகு, இரண்­டாம் உல­கப் போரின் பீதி சென்­னை­யில் பர­வி­ய­தால், குடும்­பத்­தா­ரு­டன்  பாப­நா­சம் சென்­றாள் பேபி சரோஜா. அங்கே கர்­நா­டக இசை, வீணை வாசிப்பு, சமஸ்­கி­ருத மொழி பயிற்சி ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்­டாள். பிறகு ெபங்­க­ளூரு வாசம், மத்­திய சங்­கீத கல்­லூ­ரி­யில் இசை மற்­றும் ஓவி­யப் பாடம், 1955ல் திரு­ம­ணம், 35 வரு­டங்­கள் மும்பை வாசத்­திற்­குப் பிறகு மீண்­டும் சென்னை என்று வாழ்க்கை வட்­டம் நிறை­வ­டைந்­தி­ருக்­கி­றது.   பேபி சரோ­ஜா­வின் மர­ணத்­தால் உறங்­கிக்­கொண்­டி­ருந்த அந்­தக் காலத்து நினை­வு­கள் மீண்­டும் வலம் வரு­வ­தற்­கான வாய்ப்­பும் வந்­தி­ருக்­கி­றது. சுட்­டி­யான குட்­டீஸ் வரு­வார்­கள், போவார்­கள். ஆனால் வெகு­ஜன ஊட­க­மான சினி­மா­வின் முதல் சுட்­டி­யான குட்டி, பேபி சரோ­ஜா­தான் என்ற சரித்­தி­ரம் அப்­ப­டியே இருக்­கும்.

No comments:

Post a Comment