PABLO PICASSO ,UNCONVENTIONAL ARTIST
BORN 1881 OCTOBER 25 -1973 APRIL 8
பாப்லோ பிக்காசோ (/pɪˈkɑːsoʊ, -ˈkæsoʊ/;[1] எசுப்பானியம்: [ˈpaβlo piˈkaso]; (அக்டோபர் 25, 1881 – ஏப்ரல் 8, 1973) என்பவர்எசுப்பானியா நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற ஓவியர், சிற்பி, அச்சுப்பொறியாளர், மண்பாண்டக் கலைஞர், மேடை வடிவமைப்பாளர், கவிஞர், நாடக ஆசிரியர் ஆவார். இவரது விடலைப் பருவத்தின் பெருமளவு காலத்தை பிரான்சு நாட்டில் கழித்தார். 20 ஆம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் இவரும் ஒருவர். ஜோர்ஜெஸ் பிராக் (Georges Braque) என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.[2][3] பிக்காசோ அவரது ஆரம்ப காலங்களிலேயே அசாதாரண கலைத் திறமையை நிரூபித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில், அவர் பல்வேறு கோட்பாடுகள், உத்திகள், கருத்துக்கள் ஆகியவற்றோடு பரிசோதனை செய்தபோது அவரது பாணி மாறியது. 1906 ஆம் ஆண்டுக்குப் பிறகு, சற்று பழைய கலைஞரான ஹென்றி மிடேசெஸின் போவியம் பணியானது பிக்காசோவை இன்னும் தீவிரமான பாணியை ஆராய உக்குவித்தது, இரண்டு கலைஞர்களுக்கு இடையே பயனுள்ள போட்டி தொடங்கியது, இவர்கள் நவீன பாணி ஒவியக் கலைகளின் தலைவர்களாக விமர்சகர்களால் அடிக்கடி இணைத்துக் கூறப்பட்டனர்.[4][5][6][7]
பிக்காசோ, ஆன்றி மட்டீசு, மார்செல் டச்செம்ப் ஆகிய மூவரும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கக் காலத்தில் நெகிழி ஓவியத்தில் புரட்சி செய்த உலகின் தலை சிறந்த ஓவியர்கள் ஆவார்கள்; ஓவியம், சிற்பம், அச்செடுத்தல், மற்றும் செராமிக்கு ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள்.[8][9][10][11] அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப் படுத்தியவர் பிக்காசோ ஆவார். இவர் தனது 93 ஆவது வயதில் காலமானார்.
பிக்காசோவின் ஆக்கங்கள் பெரும்பாலும் பல்வேறு காலப்பகுதிகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவரது ஆக்கங்களில் மிகவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலம் நீலக் காலம் (1901-1904), ரோசா நிறக் காலம் (1904-1906), ஆப்பிரிக்க தாக்கக் காலம் (1907-1909), பகுப்பாய்வு கியூபிசம் (1909-1912), செயற்கை கியூபிசம் (1912-1919), இது கிரிஸ்டல் காலமாகவும் குறிப்பிடப்படுகிறது. 1910 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 1920 களின் பிற்பகுதியிலும் பிக்காஸோவின் பெரும்பாலான ஆக்கங்கள் ஒரு நியோகிளாசிக்கல் பாணியில் உள்ளது, 1920 களின் நடுப்பகுதியில் அவரது ஆக்கமானது பெரும்பாலும் சர்ரியலிசத்தின் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளது. அவரது பிற ஆக்கங்கள் அவரது முந்தைய பாணிகளின் கூறுகளை ஒருங்கிணைக்கிறது.
பிக்காசோ தன் நீண்ட வாழ்நாள் முழுவதுமான, புரட்சிகரமான கலைச் சாதனைகளுக்காக உலகளாவிய புகழ்பெற்று, மகத்தான செல்வத்தை அடைந்தார், மேலும் 20 ஆம் நூற்றாண்டு கலை மேதைகளில் சிறந்த நன்கு அறியப்பட்ட நபர்களில் ஒருவராக இருந்தார்.
வாழ்க்கை
பாப்லோ பிக்காசோ அவரது சகோதரி லோலாவுடன், 1889
பிக்காசோவின் முழு பெயர் பிபாஸ்ஸோ பப்லோ டியாகோ ஜோஸ் பிரான்சிஸ்கோ டி பாலா ஜுவான் நேபூமுக்கனோ மரியா டி லாஸ் ரெமிடியஸ் சிப்ரியோ டி லா சாண்ட்சிமா டிரினிடாட் ரூயிஸ் ய பிக்காசோ என்பதாகும். பல்வேறு புனிதர்கள் மற்றும் உறவினர்களை கௌரவிப்பதற்கான ஒரு தொடர் வரிசையான [12] பெயராக இது இருந்தது. 1881 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி, எசுப்பானியா (ஸ்பெயின்) நாட்டிலுள்ள மலகா (Málaga) என்னுமிடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா - மரியா பிக்காசோ தம்பதியருக்கு பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார்.[13] அவருடைய தாயார் ஒரு இத்தாலியின் செனோவா[14] பகுதியைச் சேர்ந்த ஒரு இத்தாலிய வம்சாவளியினர். கத்தோலிக்க ஞானஸ்நானம் பெற்றபோதும், பிக்காசோ நாத்திகராக மாறினார்.[15] பிக்காசோவினுடைய குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.
The house where Picasso was born, in Málaga
பிக்காசோ சிறுவயதில் ஓவியத்தில் திறமைபெற அவருடைய தாயார் ஒரு காரணமாக இருந்தார்.[16] தனது ஏழு வயதிலேயே ஒரு முறையான தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை பிக்காசோ வரைந்தார். அவருடைய தந்தை ஓர் ஓவியராகவும், உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். பதினான்கு வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காசோ நன்கு கற்றுக்கொண்டார்.
1891 இல் பிக்காசோவினுடைய குடும்பம் கொருணா என்ற பகுதிக்குக் குடிபெயர்ந்தது. நான்கு ஆண்டுகள் பிக்காசோவின் தந்தையார் அங்குள்ள ஓவியப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அங்குதான் தனது மகனின் முடிவுறாத புறா ஓவியத்தைக் கண்ணுற்றார். அது புதிய பாணியைக் கொண்டிருந்தது. மேலும் அபொக்ரைபா என்ற கதையைத் தழுவியதாகவும் இருந்தது. 13 வயதே ஆன தனது மகனின் ஓவியத் திறமையைக் கண்ட ரூயிஸ் மிகுந்த வியப்புக்குள்ளானார்.[17]
காலப்பகுப்பு
பிக்காசோவின் ஆக்கங்களைப் பல்வேறு காலப்பகுதிகளாகப் பிரித்துக் குறிப்பிடுவது வழக்கம். பிக்காசோவின் பிற்காலப் படைப்புக்கள் தொடர்பான இத்தகைய காலப்பகுதிகள் பற்றிச் சரியான இணக்கம் இல்லாவிட்டாலும், பின்வருவன பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பகுப்புக்களாகும்.
நீலக் காலம்
நீலக் காலம் (1901-1904), இக்காலத்தைச் சேர்ந்த இவரது ஓவியங்கள் பெரும்பாலும் நீலநிறச் சாயை கொண்டவையாகக் காணப்பட்டன. எசுப்பானியாவில் இவர் மேற்கொண்ட சுற்றுப்பயணம், நண்பரொருவரின் இறப்பு ஆகிய நிகழ்வுகள் இவரது இக்கால ஓவியங்களில் செல்வாக்குச் செலுத்தியதாகக் கூறப்படுகின்றது. கழைக் கூத்தாடிகள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், கலைஞர்கள் போன்றவர்கள் இக்காலத்தில் இவர் வரைந்த ஓவியங்களில் பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டனர்.
ரோசா நிறக்காலம்
ரோசா நிறக்காலப்பகுதி (1904-1906), இக்காலத்தைச்சேர்ந்த இவரது ஓவியங்கள் ரோசா நிறச் (pink) சித்திரங்கள் ஆகும். இளைஞர்கள், தலைமுடி வாரும் பெண், நீச்சல் வீரர்கள், குடும்பம், வானர மனிதர்கள் என்பன இக்கால கட்டத்தில் வரையப்பட்ட ஓவியங்களாகும்.
ஆப்பிரிக்க காலம்
ஆப்பிரிக்கச் செல்வாக்குக் காலப்பகுதி (1908-1909), ஆப்பிரிக்கக் கலைப் பொருட்களிலிருந்து கிடைத்த அகத் தூண்டல்களின் அடிப்படையில் உருவான ஓவியங்களே இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்களில் முதன்மை பெற்றிருந்தன.
கனிசுகவாத காலம்
பகுப்பாய்வுக் கியூபிசம் (1909-1912), இது பிக்காசோவும், பிராக்கும் இணைந்து உருவாக்கிய ஓவியப் பாணியாகும். இந்த ஓவியங்கள் மண்ணிறத் தன்மை கொண்ட ஒரு நிற ஓவியங்களாக இருந்தன. இவ்வோவியங்களில் கருவாக அமைந்த பொருட்களை வடிவங்களின் அடிப்படையில் பிரித்தெடுத்து வரையும் பரிசோதனைகளாக அமைந்திருந்தன. இக்காலப் பகுதியில் இவ்விரு ஓவியர்களினதும் ஓவியங்கள் ஒன்றுபோலவே அமைந்திருந்தன.
திரைப்படங்களில் பிக்காசோ
த மிஸ்டரி அப் பிக்காசோ
பிகாசோவின் வாழ்வையும் படைப்புக்களையும் குறித்து சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதிக சிறப்பு வாய்ந்த திரைப்படம் த மிஸ்டரி அப் பிக்காசோ ஆகும். இது 1955 ஆம் ஆண்டு வெளியாகியது. பிகாசோவை நேரடியாக ஓவியங்கள் வரையச் செய்து அதனை திரைப்படமாக்கினார்கள். ஓவியங்களை திரைப்படமாக்குவது என்பதில் இத்திரைப்படம் முன்மாதிரியாகவுள்ளது.
சுர்வைவிங் பிக்காசோ
1996 இல் சுர்வைவிங் பிக்காசோ எனும் திரைப்படம் ஜேம்ஸ் ஐவரி இயக்கத்தில் இஸ்மாயில் மெர்சன்ட் தயாரிப்பில் வெளியானது. இதில் ஆண்டனி ஹாப்கின்ஸ் பிகாசோவாக நடித்திருந்தார்.
பிக்காசோ : த மான் அண்ட் ஹிஸ் வோர்க்
பிக்காசோ : த மான் அண்ட் ஹிஸ் வோர்க் என்ற படம் இரண்டு பாகங்களாக வெளிவந்திருக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
சிறுவயதில் திறமையாக ஓவியங்கள் வரைந்ததால் பிகாசோவுக்கு ஓவியக் கல்லூரியில் சேர அனுமதி கிடைத்தது. தைலவண்ண ஓவியங்களை வரைவதில் ஈடுபாடு காட்டினார். அவர் ஸ்பெயினில் இருந்து பாரிசிற்கு இடம்பெயர்ந்தார். நண்பரின் அறையை பகிர்ந்துகொண்டு ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களை நீலவண்ண ஓவியங்கள் என வகைப்படுத்துகின்றார்கள். அதாவது ஓவியத்தின் பிரதான நிறமாக நீல நிறம் அமைந்திருந்தது. தனிமையும் துக்கமும் இந்த நிறத்தை இவர் தெரிவு செய்ய காரணமாக இருந்திருக்கிறது. அவரது நெருக்கமான பெண் தோழியாக பெர்னாண்டோ ஆலிவர் காணப்பட்டார். பின்னர் பிகாசோவிற்கு ஈவா கோவல் என்ற பெண்ணோடு நட்பு உருவானது. அதன்பின் ஒல்காகோக்லவோ என்ற ரஷ்ய பாலே நடன பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைத் திருமணம் செய்து கொண்டார் பிக்காசோ. அவர்களுக்கு பாப்லோ என்ற மகன் பிறந்தான்.
தொண்ணூறு வயதில் பிக்காசோ
பப்லோ பிக்காசோ தன் தொண்ணூறாவது பிறந்த நாளை பொதுமக்களுடன் கொண்டாடினாராம். தொண்ணூறு வயதிலும் அவரின் தூரிகை காயவில்லை. அந்த 90 ஆவது பிறந்தநாள் விழாவில் கடந்த ஒரு மாதத்தில் தான் வரைந்த எட்டு ஓவியங்களை பாரிஸ் ஜாவர் அருங்காட்சிக்கு வைத்து அசத்தினாராம் பிகாசோ. தொண்ணூறு வயதிலும் அயராது உழைத்து நம்பிக்கையுடன் சாதனைப்பட்டியலை நீளச்செய்தவர் பிக்காசோ. அதனால் தான் வரலாற்றில் தனக்கு என்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார் பிகாசோ.
இறப்பு
இவர் தனது 93 ஆவது வயதில் காலமானார். அவரது உடல் பிரான்ஸின் தெற்கில் உள்ள வாவெனார்கஸ் கிராமத்தில் உள்ள செட்யூ என்ற இடத்தில் உள்ள அவரது ஸ்டுடியோ வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஆக்கங்கள்
இவரது ஆக்கங்கள் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவையாகும். அவற்றில் 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் என்பன அடங்கும். இவை பிரான்சின் பாரிஸ் அரும்பெருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவரது பிரபல படைப்புக்களாவன: அவிக்னோக் பெண், பர்ட்டாட் சிடின் சித்திரம், பெண் குதிரையில் உள்ள சிற்பம், குட்டையான நடனக்காரர், நோயாளிக் குழந்தை, இத்தாலியப் பெண்கள், அழும் பெண், மனிதனின் மூன்று யுகங்கள், பெண்ணின் உடல், கிட்டார், இரண்டு குழந்தைகள், மரத்தின் கீழ் நாய் மற்றும் குவர்னிகா.
குவர்னிகா
இது பிக்காசோவால் வரையப்பட்ட பிரபல ஓவியமாகும். முதலாம் உலக மகா யுத்தத்தில் குவர்னிகா நகருக்கு குண்டு வீசப்பட்டதை மையமாகக் கொண்டு இது வரையப்பட்டது. 'கொலாச்'சித்திர வேலைப்பாட்டை பயன்படுத்தி இதனை அலங்காரம் செய்துள்ளார். யுத்தத்தின் கொடூரத்தன்மை, தனிமை, புலம்பல் ஆகிய வெளிப்பாடுகள் இச்சித்திரத்தின் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியம் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment