AKSARA HASAN ,ACTRESS BORN 1991 OCTOBER 12

 

AKSARA HASAN ,ACTRESS BORN 1991 OCTOBER 12




அக்சரா ஹாசன் (பி. 12 அக்டோபர் 1991) திரைப்பட நடிகை, திரைக்கதை ஆசிரியர், உதவி இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவராவார். இவர் பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசனின் மகளாவார். ஏழாம் அறிவு, 3 ஆகிய திரைப்படங்களில் நடித்த சுருதி ஹாசன், இவரது மூத்த சகோதரியாவார். மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்து விட்டார்

சொந்த வாழ்க்கை
அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4]

ஆரம்பகால வாழ்க்கை
அக்சரா ஹாசன், அக்டோபர் 12, 1991 அன்று சென்னையில் நடிகர்கள் கமல்ஹாசன், சரிகா தம்பதிக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தார்.[5][6] இவரது தந்தை தமிழ் வம்சாவளியையும், அவரது தாயார் மராத்தி மற்றும் ராஜ்புட் வம்சாவளியையும் சேர்ந்தவர்களாவர்.[7] சூர்யாவுடன் ஏழாம் அறிவு திரைப்படத்திலும், தனுஷ் உடன் 3 திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த நடிகை சுருதி ஹாசன் இவரது மூத்த சகோதரியாவார். அக்சரா ஹாசன் தனது பள்ளிப்படிப்பை



சென்னையிலும், பின்னர் பெங்களூர் இண்டஸ் சர்வதேச பள்ளியிலும் பயின்றவராவார்.[8] அக்சரா சென்னையில் அபாகஸ் மாண்டிசோரி பள்ளி யில் படித்தார் .பின்னர் லேடி ஆண்டாள் ஸ்கூலில் படித்தார் .இவ்வமையம் இவருடைய தாயும் ,தந்தையும் பிரிய நேரிட்டதால் இவர் தன் அன்னையுடன் மும்பையில் வசிக்க நேரிட்டது . மற்றொரு உடன் பிறப்பு ஸ்ருதி ஹாசன் சென்னையிலேயே தந்தையுடன் தங்கி விட்டார்

திரைப்பட வாழ்க்கை
2015 ஆம் ஆண்டில் ஷமிதாப் என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் உடன் நடித்தார். இதற்கு முன்னதாக மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் நடிக்க மறுத்து விட்டார். பின்னர் தமிழில் அஜித்குமார் உடன் விவேகம் படத்தில் நடித்தார். தன்னுடைய தந்தை இயக்கி வந்த சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குனர் ஆக பணிபுரிந்தார். ஆனால் அப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 2019 ஆண்டில் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான ஜீ5 என்ற இணைய செயலி யில் Fingertip என்ற இணையதள நாடக தொடரிலும் நடித்தார்.

பிரத்தியேக வாழ்க்கை




அக்சரா ஹாசன் அவரது தாயாருடன் மும்பையில் வசித்து வருகிறார்.[4] இளமையிலேயே கடவுள் நம்பிக்கையை இழந்தார் .தற்போது புத்த மத கோட்பாடுகளில் கவனம் செலுத்தி வருகிறார் .சென்னையில் உள்ள ஹாட் ஷூ டான்ஸ் கம்பெனியில்தான் அக்சரா பால் ரூம் டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளார். அக்சரா, இங்கிலாந்தின் பால் ரூம் தொழில்முறை நடனக் கலைஞர்கள் பயிற்சி அமைப்பு நடத்திய முதலாவது பரீட்சை தேறியுள்ளார்

.
.

Comments

Popular posts from this blog

DACOITS OF CHAMBAL

List of Muhammad's Wives and Concubines

PARAVAS OF TAMILNADU