Posts

Showing posts with the label M.S.SUNDARI BHAI

M.S.SUNDARI BHAI ,ACTRESS BORN 1923 MARCH 2 - 2006 MARCH 12

Image
  M.S.SUNDARI BHAI ,ACTRESS BORN  1923 MARCH 2 - 2006 MARCH 12 தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. 02.03.1923-இல் மதுரையில் பிறந்தவர். ஆர்மோனியம் வாசிப்பார். பல படங்களில் பின்னணி பாடியுமுள்ளார். சுகுண சரஸா படத்தில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து சென்னை வந்தவர். 1939-இல் இப்படம் வெளியானது.  ஜெமினி ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்தில் 18 வருடங்கள் வேலை செய்தார். 150 ரூபாய் மாதச்சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து 3 வருடங்கள் வேலை செய்தார். அதன் பின் ரூ-2000/- வரை சம்பளம் பெற்றார். அந்நேரத்தில் வெளிப்படங்களில் நடிக்க ஆசைப்பட்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனிடம் அனுமதி பெற்று நடித்த முதல் படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகேஷ்வர ராவ் தயாரித்து நடித்த எங்க வீட்டு மகாலட்சுமி. ஜெமினியில் 15 படங்களும் வெளிப்படங்களில் ஏறத்தாழ 60 படங்களிலும் நடித்துள்ளார். 78 வயதுக்கு மேல் வாழந்துள்ளார். இவரது கணவர் தான் கொத்தமங்கலம் சுப்பு (தில்லானா மோகனாம்பாள் படத்திற்குக் கதை வசனம் எழுதியவர்). பழம்பெரும் நடிகர் வி.வி.சடகோபன் முதல் மு.க.முத்து வரை பல்வேறு...