Posts

Showing posts with the label shop

GROCERY SHOP IN ARIYALUR - TURNOVER 100 CRORES

Image
  GROCERY SHOP IN ARIYALUR -  TURNOVER 100 CRORES ரூ.500 டு ரூ.100 கோடி... மளிகை வியாபாரத்தில் கலக்கும் கந்தசாமி! - இது அரியலூர் அதிசயம்! பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித்தர நூறு பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம்... பிரீமியம் ஸ்டோரி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே குடிகாடு என்ற மேலணிக்குழி கிராமத்துக்குப் போனால், ஒரு மளிகைக் கடையில் மட்டும் மாபெரும் கூட்டம். கடையின் முன் நிறைய வாகனங்கள். இது என்ன விநோதம் என்று நினைத்து உள்ளே போனோம். அங்கே நாம் பார்த்த காட்சி இன்னும் விநோதம். பில் போட 20 பேர், பணம் வாங்க 10 பேர், பொருள்களைக் கட்டித்தர 100 பேர் என நாம் பார்த்த காட்சி ரகளை ரகம். நம்மூரில்தான் இப்படியொரு மெகா மளிகைக் கடையா என்று நினைத்து, அங்கிருந்த ஊழியர்களை நாம் அணுக, அந்த மளிகைக் கடையின் சொந்தக்காரர் கந்தசாமியின் முன்பு நம்மைக் கொண்டுபோய் நிறுத்தினார்கள். 40 ஆண்டுகளுக்கு முன் வெறும் 500 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட பெட்டிக்கடை, இன்று ‘சண்முக விலாஸ் குடிகாடு மளிகைக் கடை’யாக சுமார் ரூ.100 கோடி டேர்ன்ஓவர் செய்யும் அளவுக்குச் செழித்து வளர்ந்த வரலாற்றை ...

சூரத் காப்பிக் கடை

Image
СУРАТСКАЯ КОФЕЙНАЯ : சூரத் காப்பிக் கடை மூலம் : லியோ டால்ஸ்டாய் தமிழில் : மா. புகழேந்தி ஒரு காலத்தில் சூரத் நகரத்தில் ஒரு காபிக் கடை இருந்தது, அங்கே உலகின் எல்லா மூலையில் இருந்தும் பல வெளி நாட்டு வணிகர்கள் வந்து சந்தித்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள். ஒரு நாள் ஒரு பாரசீக தத்துவ ஞானி அங்கு வந்தான். தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைக் கடவுளைப் பற்றிப் படித்தும் பேசியும் ஆராய்ந்தும் எழுதியும் கழித்திருந்தான். இவ்வாறு அதிகப்படியாகச் செய்ததினால், சிந்திக்கும் திறனில் பிறழ்ந்திருந்தான், குழப்பமுற்றிருந்தான், கடவுள் என்ற ஒன்று இருப்பதையே நம்ப முடியாமல் போனான். இதைக் கேள்விப்பட்ட ஷா பாரசீகத்திலிருந்து அவனைத் துரத்திவிட்டான். வாழ்க்கை முழுதும் தர்க்கம் செய்தே களைத்துவிட்ட இந்தத் தத்துவ ஞானி எல்லாவற்றையும் சந்தேகம் கொள்ளலானான். அவைகளைப் புரிந்து கொள்வதற்குப் பதிலாக தனது சொந்தக் கருத்தையே மறந்து விட்டான். அவன் கருத ஆரம்பித்தான், இந்தப் பேரண்டத்தினை வேறு எந்தச் சக்தியும் இயக்குவிக்கவில்லை என்று. அந்தப் பாரசீகன் ஓர் ஆப்பிரிக்க அடிமையைக் கொண்டிருந்தான், அந்த அடிமை அவனது முதலா...