Posts

Showing posts with the label WATER ISSUE

PAKISTAN WATER ISSUE பாகிஸ்தானுக்கு ஒப்பந்தப்படி உள்ள தண்ணீர் மட்டுமே தரப்படும்: சிந்து நதி நீர்ப் பகிர்வில் இந்தியா முடிவு

Image
PAKISTAN WATER ISSUE பாகிஸ்தானுக்கு  ஒப்பந்தப்படி உள்ள  தண்ணீர் மட்டுமே தரப்படும்: சிந்து நதி நீர்ப் பகிர்வில் இந்தியா முடிவு சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவு தண்ணீரை மட்டுமே பாகிஸ்தானுக்கு வழங்குவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் மோடி, நாட்டில் ரத்தமும், நீரும் ஒரே நேரத்தில் ஓட முடியாது என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். SUTLEJ RIVER FROM INDIA பாகிஸ்தானுக்கான நதிநீர்ப் பங்கீடு குறித்தும், அதில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இறுதியில் ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும் மூன்று நதிகளில் இந்தியாவுக்கு உள்ள உரிமைகளை முழுமையாகப் பயன்படுத்துவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதைத்தவிர, ஜீல...