ZHU, RONGJI, CHINESE ,PRIME MINISTER BORN 1928 OCTOBER 1
ZHU RONGJI, CHINESE PRIME MINISTER BORN 1928 OCTOBER 1 சூ சுங்ச்சி (Zhu Rongji, பிறப்பு: அக்டோபர் 1, 1928) சீனாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மார்ச் 1998 இலிருந்து மார்ச் 2003 வரையிலான காலகட்டத்தில் முதலில் சீனாவின் துணைப் பிரதமராகவும் பிறகு பிரதமராகவும் இருந்தவர். கடும் நிர்வாகியாகவும் சீன பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளில் முக்கிய பங்குவகித்தவராகவும் மதிப்பிடப்படுகிறவர். தொடக்க காலம் 1987 இலிருந்து 1991 வரையிலான காலகட்டத்தில் ஷாங்காய் நகரத்தின் மேயராகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்தார். இவரது பதவிக்காலங்களில் ஊழல்களால் புரையோடிப் போயிருந்த கட்சியையும் ஆட்சியையும் சுத்தப்படுத்தும் சோதனை நிறைந்த வேலைகளில் இவர் இறங்கினார். இவரது ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் சீன மக்களிடம் இவருக்கு பெரிய அளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் சீனாவின் அரசுடைமை நிறுவனங்களில் மேற்கொண்ட சீர்த்திருத்த முயற்சிகள் காரணமாகவும் அதிரடியான நடவடிக்கைகள் காரணமாகவும் இவர் மீது கடும் விமர்சனங்களும் உண்டு. 1949 அக்டோபரில் இவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1...