MOTILAL NEHRU ,FREEDOM FIGHTER BORN 1861 MAY 6 - 1931 FEBRUARY 6
MOTILAL NEHRU ,FREEDOM FIGHTER BORN 1861 MAY 6 - 1931 FEBRUARY 6 மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார். அரசியல் தனது குடும்பத்தினருடன் நடுவில் அமர்ந்திருக்கும் மோதிலால் நேரு காஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்...