MOTILAL NEHRU ,FREEDOM FIGHTER
BORN 1861 MAY 6 - 1931 FEBRUARY 6
மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.
அரசியல்
தனது குடும்பத்தினருடன் நடுவில் அமர்ந்திருக்கும் மோதிலால் நேரு
காஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்கெதிராய் போராடினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928ல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர். இவர் ஐரோப்பிய நாகரிகத்தை பின் பற்றினார் .முன்கோபம் உள்ளவர்.இவர் தமது இருபதாவது வயதில் லாகூரில் காஷ்மீரத்துப் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார் .ஒரு ஆண் மகவைப் பிரசவித்த பின் அந்தப் பெண் இறந்து விட்டாள் .பின் அந்த குழந்தையும் இறந்துவிட்டது .இவரது இரண்டாம் மனைவி துஸ்சூ என்ற பெயருடைய சொரூப ராணியைத் திருமணம் செய்து கொண்டார் .
குடும்பம்
இவரது துணைவியார் பெயர் சொருப் ராணி ஆகும். 1889ல் ஜவகர்லால் நேரு என்ற ஒரு புதல்வரும், 1900ல் பிறந்த விஜயலட்சுமி பண்டிட் மற்றும் 1907ல் பிறந்த கிருஷ்ண ஹுதீசிங் என்ற இரு புதல்விகளும் இவருக்குண்டு.
மோதிலால் நேரு இணையற்ற வாழ்க்கை வாழ்ந்தவர். பிள்ளைப்பாசம் கூட ஒரு
மனிதரை விடுதலைப்போரில் ஈடுபட வைக்கும் என்பதற்கு உதாரணம் அவர். இவரின்
தாத்தா கிழக்கிந்திய கம்பெனியில் வக்கீலாக இருந்தார். இவரின் தந்தை இவர்
பிறப்பதற்கு முன்னரே தவறிவிட போராடி வாழ்க்கையில் முன்னுக்கு வந்தார்
இவர். வக்கீலாக தாத்தாவை போல மாறி ஒரு வழக்குக்கு பத்தாயிரம் பீஸ்
வாங்குகிற அளவுக்கு சிறப்பாக வழக்காடினார்.
ஆனந்த பவனம் என்று தான் வாங்கிய வீட்டுக்கு பெயரிட்டார். அதிலே நீச்சல் குளம் கட்டினார். மின்சார வசதியை ஏற்படுத்தினார். சைக்கிள் பிரிட்டனில்
அறிமுகமானதும் இந்தியாவிற்கு அதை வாங்கிக்கொண்டு வந்துவிட்டார். புலால் உணவு,மது வகைகள் என்று வீட்டில் எப்பொழுதும் நூற்றுக்கணக்கான பேருக்கு
அனுதினமும் விருந்து வேறு வீட்டில் உண்டு. இரண்டு கார்கள்,அதை ஓட்ட ஐரோப்பியர்கள் என்று ஆடம்பரத்தின் உச்சமாக இருந்தார் அவர்.
ஜவகர்லால் நேருவுக்காக தானும் விடுதலைப்போரில் ஈடுபட்டார் . ஆனால் பல விஷயங்களை செய்ய முடியாமல் திணறினார் . நூல் நூற்க வேண்டும் என காந்தி
சொன்னதை செய்யமுடியாமல் நான்கு அணா அபராதம் கட்டும் முறை இவருக்காக வந்தது . காந்தியுடன் முரண்பட்டு இடையே சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்து
சட்டப்பேரவைகளிலும் நுழைந்தார் இவர்.
அப்பொழுது அவருடன் இணைந்து பணியாற்றிய மாளவியா இந்து மகா சபையில் தலைவராகி மோதிலால் நேரு பாரசீகத்தில் பற்று கொண்டவர்,புலால் உணவு சாப்பிடுவபவர் அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர் என்று விஷமமான கருத்துக்களை பரப்பி சுயராஜ்ய கட்சி மற்றும் காங்கிரஸ் மீது வெறுப்பு ஏற்படுமாறு செய்தார்கள். மதவாதம் இன்னமும் வேகமாக வளர அவை வழிவகுத்தன
சிறையில் மகன் மீது கொண்ட பாசத்தால் உள்ளே போனவர் வீட்டு சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்டார் . அதைக்கொண்டு வர சொன்னார் ,நேரு அப்படியே சாப்பாட்டை வெளியே எறிந்து விட்டு ,”அப்பா எத்தனை மக்கள் எளிய உணவு உண்டு நாட்டுக்காக போராடுகிறார்கள்.என கடிந்து இவரை விடுதலைப்போரில் ஈடுபட வைத்தார் .
வெறுந்தரையில் பிள்ளைப்பாசத்துக்காக படுத்து நாட்டு விடுதலைப்போரில் பங்குகொண்டார் மனிதர். நாடு விடுதலை பெறுவதை பார்த்துவிட்டு இறந்துவிட வேண்டும் என்று விரும்பிய அவர் அதற்கு முன்னரே கண்மூடினார். இப்படிப்பட்ட பிள்ளையும்,அப்படிப்பட்ட தந்தையும் இன்றைய அரசியலில் எங்கே தேடுவது ?
No comments:
Post a Comment