Posts

Showing posts with the label SUCCESS

SUCCESS -A WORD - MEMORY STONE IN AVM STUDIOS

Image
  SUCCESS -A WORD -  MEMORY STONE IN AVM STUDIOS எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத பெருமை நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு உண்டு . பராசக்தி என்ற அந்த காவியத்தில் முதல் முதலில் திரையில் தோன்றி சரித்திரம் படைத்தார் . முதல் படமே சூப்பர் ஹிட் . முதல் படத்திலேயே கதாநாயகன் . 1950 ல் சுமார் ஜூலை ஆகஸ்டில் ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்து படப்பிடிப்பு தொடங்கி 1952 தீபாவளிக்கு தான் படம் வெளி வந்தது . இரண்டு ஆண்டு போராட்டம் , பல இன்னல்கள்,பூசல்களை தாண்டி வந்து தமிழ் திரையின் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது அந்த படம் . ஏன் ….அரசியல் தலை எழுத்தையே மாற்றி அமைத்தது என்றால் மிகை ஆகாது . அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் பட்ட சோதனைகளை பற்றி அவரே அவரது சுய சரிதத்தில் எழுதி இருக்கிறார் . பராசக்தி வெளி வந்த 50 வது ஆண்டு அந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான AVM நிறுவனம் ஒரு அற்புதமான சாதனையய் செய்தது.இந்த நேரத்தில் நாம் தயாரிப்பாளர் பீ .எ.பெருமாளை பற்றியும் நினைவு கூற வேண்டும் . அந்த இளம் நடிகரை கண்டு பிடித்து அவரை கொண்டுதான் படம் எடுப்பேன் என்று விடாபிடியாய் நின்றவர் அவர் . சிவாஜியும் அவரின் குடும்பமும் என்றுமே தெய்வம...

M.G.R , POLITICAL MYSTERY OF HUGE SUCCESS

Image
M.G.R , POLITICAL MYSTERY OF HUGE SUCCESS "ஏப்ரல் பதினான்காம் தேதி பூஜை வைத்துக்கொள்ளலாம்’’ என்று எம்.ஜி.ஆர் சொன்னபோது, சுற்றி நின்ற அனைவருக்குமே ஆச்சர்யம்தான். ஓரிருவர் அதிர்ச்சியோடு பரஸ்பரம் பார்த்துக்கொண்டனர். காரணம், அப்போது எம்.ஜி.ஆர் திரையுலக சூப்பர் ஸ்டார் அல்ல, தமிழகத்தின் முதலமைச்சர். அ.தி.மு.க என்ற தனிப்பெருங்கட்சியின் தலைவர். ஒட்டுமொத்தத் தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம். அத்தகைய பெரு நட்சத்திரம் மீண்டும் திரையில் மின்ன விரும்புகிறதா? என்று எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, ``படத்துக்கு நான்தான் ஹீரோ, சீக்கிரமா கதை ரெடி பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு எழுந்துபோய்விட்டார் எம்.ஜி.ஆர். என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி? சட்டம் ஒழுங்கு... மக்கள் பிரச்னை...திட்டங்கள்... கோப்புகள்... ரசிகர்கள்... தொண்டர்கள்... எத்தனையெத்தனை நெருக்கடிகள்... எத்தனையெத்தனை பிரச்னைகள். `எப்போது சறுக்குவார் எம்.ஜி.ஆர்?’ என்று கண்கொட்டாமல் காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லா அரசியல் நெருக்கடிகளையும் சமாளிக்...