Posts

Showing posts with the label Vaikom

Vaikom Muhammad Basheer வைக்கம் முகமது பஷீர் மலையாள இலக்கிய படைப்பாளி

Image
Vaikom Muhammad Basheer  வைக்கம் முகமது பஷீர்  மலையாள இலக்கிய படைப்பாளி வைக்கம் முகமது பஷீர் (பிறப்பு. 19 ஜனவரி 1908 - இறப்பு. 5 ஜூலை 1994) மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளில் ஒருவர். கேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப்பறம்பு என்ற ஊரில் பிறந்தார். இளம்வயதிலேயே சுதந்திரப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் நாடோடியாக வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். வாழ்க்கையில் பலவிதமான அனுபவங்கள் வழியாகச் சென்றவர் பஷீர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூபி துறவி, சூதாட்டவிடுதி ஊழியர், திருடர் ஆகியபல தொழில்களைச் செய்திருக்கிறார். கடுமையான வறுமையைச் சந்தித்திருக்கிறார். ஆரம்பத்தில் இடதுசாரிகளுடன் ஒத்துழைத்தார். பின்னர் இஸ்லாமிய சூபி மரபை ஏற்றுக்கொண்டவர் ஆனார். ஒருங்கிணைந்த இந்தியாவை தன் தேசமாக ஏற்றுக்கொண்ட பஷீர் கடைசிவரை பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கவில்லை. காந்தியவாதியாக கடைசிவரை வாழ்ந்தார். @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ சிறுகதை - பூவன் பழம் வைக்கம் முஹம்மது பஷீர் தமிழில் : சுரா "பூவன் பழம்' என்ற இந்தக் கதையை ...

Vaikom Muhammad Basheer வைக்கம் முகமது பஷீர் எழுதிய -தன் காதல் கதை

Image
Vaikom Muhammad Basheer வைக்கம் முகமது பஷீர் எழுதிய சிறுகதை -தன் காதல் கதை காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்! பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்! பேனாவின் முனை...

Vaikom Muhammad Basheer எழுத்தாளர் வைக்கம் முகமதுபஷீர்

Image
Vaikom Muhammad Basheer  எழுத்தாளர்   வைக்கம் முகமதுபஷீர்  "ஒரு இனம், வைக்கம் முகமதுபஷீர் மூலம் புதையுண்டு கிடந்த தங்கள் மன முகங்களை வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது. பஷீர் நேர்மாற்றி, அவருடன் ஒப்பிட்டு பேச நம் மொழியில் யாரும் இல்லை. மேலும் அவருடைய எழுத்து முற்போக்கு இலக்கியத்தின் அசலுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. புதிய தலைமுறை அதைப் படிக்க வேண்டும். தமிழின் இன்றைய தேவை அது." (மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி) Vaikom Mohammed Basheer மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமானவரும் தலைச்சனுமான பஷீர், இந்திய இலக்கியத்தை உலக மேடைக்கு கொண்டு சென்ற மிக முக்கியமான பிரதிநிதி. இயல்பான இலக்கிய நடையும், வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. தமிழில் அவரை ஒத்துக்கூற எழுத்தாளர்கள் இல்லை. தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தில் காணப்படும் ஒரு வித இறுக்கம் (அவர்கள் எழுத்தைப் பொறுத்தமட்டில்), பஷீருக்கு நேர்மாறான ஒன்று. மலையாளத்தில் அவருடன் ஒத்துப் போகும் எழுத்தாளர் என்றால் கவிஞர் குஞ்ஞுன்னியைச் சொல்லலாம். பஷீரின் மிகைப்படுத்தல் இல்லாத வழக்கு, இயல்பு வாழ்க்கையி...