Posts

Showing posts with the label ACID ATTACK

CHANDRALEKHA I.A.S , சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசிய ஜெயலலிதா

Image
CHANDRALEKHA I.A.S , சந்திரலேகா  முகத்தில் ஆசிட் வீசிய ஜெயலலிதா  ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் 1991-1996 பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம், தமிழகத்தில் ஆடம்பர அரசியலுக்கு அச்சாரம் போட்டது. அதற்கு விளக்கம் மதுரையில் நடந்த வெற்றி விழா மாநாடு. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் கொடூரங்களின் கோட்டையாக நின்றது. அதன் நிகழ்கால அடையாளம், ஆசிட் வீச்சில் சிதைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின் முகம். 1992 மே 19-ம் தேதி ஒரு செவ்வாய் கிழமை .  அன்று காலையே வெயில் கொளுத்தத் தொடங்கியது. ஊர் முழுவதும் புழுக்கம் நிரம்பி இருந்தது. தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா தனது காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார். கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, வெளிக்காற்றை வாங்கிக் கொண்டும், சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணத்தில் சந்...