Monday 5 June 2017

CHANDRALEKHA I.A.S , சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசிய ஜெயலலிதா


CHANDRALEKHA I.A.S ,
சந்திரலேகா முகத்தில் ஆசிட் வீசிய ஜெயலலிதா 

ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் 1991-1996



பொதுமக்களை அநாசயமாக அலட்சியப்படுத்தியது. அதற்கு உதாரணம் கும்பகோணம் மகாமகம். ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் அராஜகமாகத் தொடர்ந்தது. அதற்கு எடுத்துக்காட்டு, தராசு பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு, அதன் இரண்டு ஊழியர்களின் உயிர் பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம், தமிழகத்தில் ஆடம்பர அரசியலுக்கு அச்சாரம் போட்டது. அதற்கு விளக்கம் மதுரையில் நடந்த வெற்றி விழா மாநாடு. ஜெயலலிதாவின் முதல் அரசாங்கம் கொடூரங்களின் கோட்டையாக நின்றது. அதன் நிகழ்கால அடையாளம், ஆசிட் வீச்சில் சிதைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின் முகம்.

1992 மே 19-ம் தேதி ஒரு செவ்வாய் கிழமை

அன்று காலையே வெயில் கொளுத்தத் தொடங்கியது. ஊர் முழுவதும் புழுக்கம் நிரம்பி இருந்தது. தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா தனது காரின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார். கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, வெளிக்காற்றை வாங்கிக் கொண்டும், சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் பயணத்தில் சந்திரலேகா ஆசிட் வீச்சுமூழ்கி இருந்தார். அவருடைய கார் எழும்பூர் அருகே வந்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் அந்தச் சாலை சிக்கித் கொண்டிருந்தது. ஊர்ந்து... ஊர்ந்து... மெல்ல நகர்ந்து கொண்டிருந்த வாகனங்கள் ஒரு கட்டத்தில், திணறத் தொடங்கின. அந்த நேரத்தில் சாலையின் ஓரத்தில் ஒரு இளைஞன் பரபரப்பாக அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அவன் எதேச்சையாக சந்திரலேகாவின் கண்களில் தென்பட்டான். ஏனோ... அவனை கவனிக்க வேண்டும் போல் சந்திரலேகாவுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அந்த இளைஞனும் சந்திரலேகாவின் காரை நோக்கியே ஓடி வந்தான். காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் எதையாவது விநியோகிப்பான் என சந்திரலேகா நினைத்துக் கொண்டார். இப்போது அந்த இளைஞன் சந்திரலேகாவின் காரை வெகு அருகில் நெருங்கி இருந்தான். அந்த நேரத்தில் சட்டென சந்திரலேகாவுக்கு மனதில் ஒரு உறுத்தல்... “இவன் வரும் பரபரப்பில் நோட்டீஸை விசிறியடித்தான் என்றால், அது கண்களில் படுமே!” என நினைத்து, வலதுபக்கம் திரும்பி கண்களையும் லேசாக மூடிக் கொண்டார்.

 அடுத்த சில நொடிகளில், 

எரிகிற தீயில் உருக்கப்பட்ட இரும்பு நெருப்புக் குழம்பை முகத்தில் ஊற்றியது போன்ற ஒரு கொடூர வேதனையை சந்திரலேகாவின் மூளை உணர்கிறது. எந்த வார்த்தையாலும் உணர்த்திவிட முடியாத ரணவேதனை அது. சந்திரலேகாவால் குரல் எழுப்பி அலறக்கூட முடியவில்லை. அனைத்தையும் மீறி லேசாகக் கண்களைத் திறந்து அவர் பார்த்தபோது அவருடைய புடவை, ஜாக்கெட்டும் எரிந்து கரும்புகைக் கிளம்பிக் கொண்டிருந்தது.

சட்டென செயல்பட்ட சந்திரலேகாவின் டிரைவர் பிரேம்குமார், காரை விட்டு இறங்கி அந்த இளைஞனை துரத்திப் பிடித்தார். சந்திரலேகா ரோட்டில் இறங்கி வேதனையில் துடித்தார். அப்போது, அவரைத் தாண்டிச் சென்ற எந்தக் காரும் அவருக்காக நிற்கவில்லை. ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குப் போனார். வேதனையும் இயலாமையும் சூழ்ந்திருந்த அந்தச் சூழலிலும் சந்திரலேகாவின் மனமும் புத்தியும், இது சதித்திட்டம் என்று அவரை எச்சரித்தது. இதைச் செய்தவர்கள் கொன்று கூவத்தில் வீசவும் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த சந்திரலேகா, நினைவை மட்டும் இறுக்கிப்பிடித்துக் கொண்டார். அவர் மருத்துவமனையில் இருந்தபோது, நெருங்கிப் பழகிய அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் வட்ட நண்பர்கள் என யாரும் அவரை வந்து பார்க்கவில்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நலனுக்குப் பொறுப்பு மாநில முதலமைச்சர்தான். 

அவர்களுக்கு விடுமுறையை அனுமதிக்கும் அதிகாரம் படைத்தவர் மாநில முதல்வர்தான். அப்படி இருந்தும், தனது அரசாங்கம் நடக்கும் மாநிலத்தில், தனக்கு கீழ் பணியாற்றும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆசிட் வீச்சுக்கு ஆளாகி மருத்துவமனையில் இருந்தபோதும், ஜெயலலிதா அவரைப் போய்ப் பார்க்கவில்லை. ஆறுதலாக ஒரு அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. ஆனால், 

அதன்பிறகு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில், யாராவது ஒரு அதிகாரி கையெழுத்துப் போட மறுத்தால், “பாத்துப்பா... உன் முகத்துல ஆசிட் அடிச்சிரப்போறாங்க” என்று பேச ஆரம்பித்தனர்..

யார் அழகு : ஜெ.-சந்திரலேகா நடத்திய நீயா? நானா?
சந்திரலேகா

1992 காலகட்டத்தில் சந்திரலேகா டிட்கோ சேர்மனாக இருந்தார். அந்த நேரத்தில் ஸ்பிக் நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகளை அரசாங்கம் வைத்திருந்தது. அவற்றையும் தாங்களே வாங்கிவிட வேண்டும் என ஸ்பிக் நிறுவனத்தின் உரிமையாளர்களான ஏ.சி முத்தையாவும் எம்.ஏ.சிதம்பரமும் துடித்தனர். அந்த நேரத்தில் அரசாங்கமும் பங்குகளை விற்க முடிவு செய்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பது என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அந்தச் சிக்கலுக்குள்தான் கண்ணுக்குத் தெரியாத ஊழல் ஒன்று ஊடுருவி இருந்தது. 1992 ஜனவரி 24-ம் நாள் அரசின் வசம் உள்ள ஸ்பிக் பங்குகளை, அந்த நிறுவனத்துக்கே விற்பனை செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவை அரசாங்கம் எடுத்தபோது, ஒரு பங்கின் விலை 80 ரூபாய். அதன்பிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்படுகிறது. அந்த ஒப்பந்தம் போடப்பட்டபோது (1992 மார்ச் 23-ம் தேதி) ஒரு பங்கின் விலை 210 ரூபாய். ஏறத்தாழ 3 மடங்கு அளவுக்கு பங்கின் விலை உயர்ந்திருந்தது. ஆனால், அரசாங்கம் 80 ரூபாய்க்கே ஸ்பிக் நிறுவனத்துக்கு பங்குகளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டியது. அதற்கு டிட்கோ சேர்மன் சந்திரலேகா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 


“சந்திரலேகாவிடம் நானே பேசுகிறேன்” என்று சொல்லி தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டார். அந்தத் தொலைபேசி உரையாடலில், “ஜெயலலிதா சொன்னதை சந்திரலேகா மறுக்க... சந்திரலேகா சொன்னதை ஜெயலலிதா எதிர்க்க...” என இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. கடைசியில் அந்த வாக்குவாதம், ‘யார் அழகு : நீயா? நானா?” என்ற இடத்தில் வந்து நின்றது. ஒருகட்டத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா, “முகத் தோற்றம்தான் முதலமைச்சராவதற்கு அடிப்படைத் தகுதி என்றால், நானும் முதல்வராகியிருப்பேன்” என்று கூறியதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது. அதில் காயம்பட்ட ஜெயலலிதா சந்திரலேகாவுக்குத் தக்க பாடம் புகட்டக் காத்திருந்தார். அந்த நேரத்தில்தான் அவர் மீது ஆசிட் அடிக்கப்பட்டது. அதில் டிரைவரிடம் பிடிபட்ட இளைஞன் பெயர் சுடலை என்கிற சுர்லா என்று சொல்லப்பட்டது. 5 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வழக்கு கடுமையாகப் போடப்பட்டு இருந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சுர்லா மீதும் குற்றம் நிருபிக்கப்படவில்லை. கடைசிவரை சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்ட வழக்கில் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பது வெளி உலகத்துக்கு தெரியாமலே போனது. பெண்களை பழிவாங்க ஆசிட்டை கையில் எடுக்கும் புதிய-கொடூர கலாச்சாரம் ஒன்று தமிழகத்துக்கும் தமிழக அரசியலுக்கும் அறிமுகம் ஆனது.

ஜெயலலிதாவின் கொடுங்கனவு நடராசன்!

இத்தனை அட்டூழியங்களையும் ஒரு சேர சேர்த்து நடத்திய ஜெயலலிதாவை, நடராசனின் நடவடிக்கைகள் மட்டும் கொடுங் கனவாய்த் சசிகலா,அனுராதா, தினகரன்,ந்டராசன்துரத்திக் கொண்டே இருந்தன. நடராசன் தன் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார் என்ற அச்சத்திலேயே ஜெயலலிதா நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார். அதனால், ‘நடராசனோடு எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது’ என தன் கட்சிக்காரர்களை, தன் கட்சியின் எம்.எல்.ஏ-க்களை, எம்.பி-க்களை, மந்திரிகளை எச்சரித்துக் கொண்டே இருந்தார். அவர்களை நடராசன் பக்கமே அண்டவிடவில்லை ஜெயலலிதா. நடராசனின் மனைவி சசிகலாவுக்கும் அதே கட்டளையைப் பிறப்பித்திருந்தார் 

ஜெயலலிதா. தன் தோழியின் விருப்பப்படியே சசிகலாவும் நடராசனை முற்றிலுமாக வெட்டி விட்டிருந்தார். ஜெயலலிதாவின் சொல்லை சசிகலா எந்த அளவுக்கு கறாராகப் பின்பற்றினார் என்றால், நெருங்கிய உறவுகளுக்குள் நடந்த டி.டி.வி.தினகரனின் திருமண விழாவில் கூட நடராசனோடு சசிகலா ஒரு வார்த்தைகூட பேசவில்லை. சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரனின் திருமணம், 1992 அக்டோபர் 30-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்றது. சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாதான் மணமகள்.

நெருங்கிய சொந்தங்களுக்குள் நடைபெற்ற திருமணத்தில் ஜெயலலிதா கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், அவர் வரவில்லை. திருமணம் நடைபெற்ற ‘குருதயாள் சர்மா’ கல்யாண மண்டபத்துக்கு கட்சிக் கரை வேட்டிகள் யாரும் வரவில்லை. எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களும் வரவில்லை. ஆனால், அதிகாரிகள் வந்திருந்தனர். டாமின்
தியானேசுவரன், முதலமைச்சர் பாதுகாப்பு அதிகாரி பழனிவேல் என ஆரம்பித்து போலீஸ் அதிகாரிகள் எக்கச்சக்கமாக குவிந்திருந்தனர். 

அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட சசிகலாவும் நடராசனும் பேசிக் கொள்ளவே இல்லை. ஆனால், நடராசன் உறவினர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு, ஏதோ ஒரு ஜோக்கை சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். அவற்றை ஓரத்தில் நின்று கவனித்துக் கொண்டிருந்த சசிகலா, நடராசனின் ஒரு ஜோக்கைக் கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அதிகபட்சமாக தினகரனின் திருமண விழாவில் சசிகலா, நடராசனின் சந்திப்பு அந்தச் சிரிப்போடு முடிந்தது.

No comments:

Post a Comment