Wednesday 21 June 2017

K.V.MAHADEVAN கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்



K.V.MAHADEVAN 

கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்


கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம்



கே. வி. மகாதேவன் ஒரு இசை சரித்திரம் 



கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - சூன் 21, 2001), ஒரு தென்னிந்தியத் 
திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார். 




1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990 இல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.


திரை இசையில் சாஸ்திரிய இசை (செவ்வியல் இசை), நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று பல அம்சங்கள், தேவைக்கு ஏற்றவாறு வழங்கும்.
இவை ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்து, பாடல் வரிகளில் பொதிந்த உணர்வுகள் வெளிப்படும்படியும், பாடலில் இனிமை மேலோங்கும் வண்ணமும் இசை அமைத்தவர், இசை மேதை, 'திரை இசை திலகம்' கே.வி.மகாதேவன். 

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார்.  

.இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர்.  ஆண்டவன் சன்னிதியில் இசை சமர்ப்பித்தவர். மாதம் மூன்று ரூபாயும், 20 படி அரிசியும் தான் சம்பளம்சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்


அறுபதுகளில் எழுந்த புராண பட வரிசைக்கு, நாடக இசையின் தொடர்ச்சியாக, வெற்றிகரமான பாரம்பரிய இசை தந்தவர் அவர். மகாதேவ ராகத்தில் தானே, 'திருவிளையாடல்' நடந்தது! 'தில்லானா மோகனாம்பாள்' திரையில் ஆடியபோது, தஞ்சை தரணியின் நாயன மணத்தோடும் சதிரின் எழிலோடும் சங்கீத மூர்ச்சனைகளைப் படித்தவர், 'மாமா!'



நலம் தானா என்று, சிக்கில் சண்முகசுந்தரத்திடம் அன்று மோகனாம்பாள் கேட்டதில் உள்ள கரிசனை, தமிழகம் எங்கும் இன்றும் ஒலிக்கிறதென்றால், அது நெஞ்சில் இருந்த கனிவு, பண்ணில் விளைந்ததால் தான். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், 'பா' வரிசைப் படங்களில் மெல்லிசை அலை எழுந்தபோது, 'வா, நானும் வருகிறேன்' என்று கைகோர்த்தவர் மகாதேவன். 


இதய கமலம் படத்தில் (1965) அவர் வடித்த இனிய நாதங்கள், இன்றளவும் வசீகரம் குன்றாத ஒலிச்சிற்பங்கள். இப்படி எத்தனையோ!
மகாதேவனை குறைந்தது, மூன்றாவது தலைமுறை இசைக்கலைஞர் என்று கூற வேண்டும். 



கடந்த, 1920ல் பிறந்த மகாதேவனின் இசைப் பாடங்கள், முதலில் அப்பாவிடம் தான் துவங்கின. பிறகு, அப்பாவே தேர்ந்தெடுத்த பூதப்பாண்டி அருணாசல அண்ணாவியிடம் சென்று, குருகுல முறையிலே சில ஆண்டுகள் இசை பயின்றார். 

தனது ௧௩வது வயதில்(15), ஸ்ரீபால கந்தர்வகான சபாவில் சேர்ந்தார் அன்றைய சூழ்நிலையில், இசை அறிந்த ஏழைப் பையன்களுக்கு, பாய்ஸ் கம்பெனிகள் தான் சரணாலயம். மேற்படி சபா அவரை, சென்னையில் அனாதையாக விட்டதால், யானைகவுனியில் ஒரு ஓட்டலில், பில் தொகையை உரக்கக் கூவும் பையனாக வேலை பார்த்தார்.


மாடர்ன் தியேட்டர்சில் சேர்ந்து, 
1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.
ஆனந்தன் அல்லது அக்னி புராண மகிமை (1942), 
பக்த ஹனுமான் (1944), 
தன அமராவதி (1948) ஆகிய படங்களுக்குப் பிறகு, வாய்ப்புகள் அற்றுப் போயின. எச்.எம்.வி., நிறுவனத்தில் சில ஆண்டுகள், இசை அமைப்பாளராகப் பணியாற்றினார்.


ஐம்பதுகளில் நிலைமாறி, பல வெற்றிகள் குவிந்தன. 
டவுன் பஸ் (1955), 
முதலாளி (1957), 
மக்களைப் பெற்ற மகராசி (1957), 
தை பிறந்தால் வழி பிறக்கும் (1958), 
சம்பூர்ண ராமாயணம் (1958) போன்ற படங்களின் பாடல்கள், இன்றும் மக்கள் இசையாக உலவி வருகின்றன.


எம்.ஜி.ஆரின் திரைப் பயணம் நெடுக, மகாதேவனின் இசைத் தடங்கள் பதிந்தன. மெட்டுக்குப் பாடல் என்றில்லாமல், பாடலுக்குப் பொருத்தமான மெட்டு, வாத்திய இசை என்று  மகாதேவன் செயல்பட்டதால், அவர் இசையில் மருதகாசியின் பாடல்கள் மணம்பரப்பின, 

கண்ணதாசனின் வரிகள் உன்னதத்தைத் தொட்டன. சங்கராபரணம் தந்து (1980), கர்நாடக இசைக்கு மக்கள் ரசனையில் இடம் உண்டு என்பதையும், தெலுங்கு திரைப்பட இசையில் தனக்கு ஒரு தனியிடம் உண்டு என்பதையும் காட்டினார் 


மகாதேவன். பாடல்களின் இனிமையைப் போலவே, மகாதேவனுக்கும், அவருடைய உதவி இசை அமைப்பாளரான டி.கே.புகழேந்திக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் நட்பின் ராகம் ஒலித்தது. மிகப்பெரிய வெற்றிகள் நிறைந்த, நெடிய சாதனை சகாப்தத்தை, யார் மனதையும் புண்படுத்தாமல் மகாதேவன் செய்து முடித்தார்.

முதன்மைக் கட்டுரை: கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
விருதுகள்[தொகு]

சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1967, கந்தன் கருணை) (இவ்விருதின் முதல் பெறுநர்)






சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு விருது (1969, அடிமைப் பெண்)










சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருது (1980, சங்கராபரணம்)


சிறந்த இசையமைப்பாளருக்கான பில்ம்பேர் விருது (தெலுங்கு) (1992, சுவாதி கிரணம்)
கலைமாமணி விருது
மறைவு[தொகு]
கே. வி. மகாதேவன் 2001 சூன் 21 இல் தனது 83வது அகவையில் சென்னையில் காலமானார்.[



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எஸ்.பி.பியை மிரட்டிய இசைமேதை இசைமேதை கே.வி.மகாதேவன் 
36 வருடம் கழித்து வெளிவரும் உண்மை! 



சுமார் 36 வருடங்களுக்கு முன் தெலுங்கில் வெளியாகி ஓராண்டு தொடர்ந்து ஓடி வெற்றி பெற்றதுடன், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசூல் சாதனை புரிந்து நான்கு தேசிய விருதுகளையும் வாங்கி குவித்த படம் தான் ‘சங்கராபராணம்’. கே.விஸ்வநாத் இயக்கி, கே.வி.மகாதேவன் இசையமைத்த தற்போது இந்தப்படம் டி.டி.எஸ் மற்றும் டிஜிட்டல் என இன்றைய நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் இடம்பெற்றிருந்த 12 பாடல்களும் நவீன தொழில்நுட்பத்துடன் அதேசமயம் மாறாத இசையுடன் உருவாகி இருகின்றன. 36 வருடங்களுக்கு முன் அந்த ‘சங்கராபரணம்’ படத்தில் பாடிய எஸ்.பி.பி, ஜானகி, வாணி ஜெயராம் மூவரும் இந்தப்படத்தில் பாடியுள்ளனர்.


இதுபற்றி எஸ்.பி.பி சொல்லும்போது

“இந்தப்படம் தெலுங்கில் உருவானபோது நான் பல படங்களில் பிசியாக பாடிக்கொண்டிருந்த நேரம்.. அப்போது என் வீட்டிற்கு வந்த 

இசைமேதை கே.வி.மகாதேவன் அண்ணா என் தந்தையிடம் ஒழுங்கா அவனை இந்தப்படத்துல பாடிக்கொடுத்துட்டு மற்ற படத்துல பாடச்சொல்லுங்க என அன்பாக மிரட்டினார். 

என் தந்தையும் அவனுக்கு நல்லா பாடவரலைன்னா அவன் கன்னத்துல அறைந்து பாடவைங்க என்றார். 

அதன்பின் இந்தப்பாடலுக்காக மிகவும் பயிற்சி எடுத்து பாடினேன். அதுதான் எனக்கு தேசியவிருதையும் வாங்கித்தந்தது” என்கிறார் பெருமிதத்துடன்.



# கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவிலில் (1918) பிறந்தவர். தந்தை கோட்டுவாத்திய இசைக் கலைஞர். சிறு வயதிலேயே இவருக்கு இசையில் நாட்டம் இருந்ததால் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை.

# தந்தையிடம் இசை பயின்றார். பிறகு பூதபாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக குருகுல முறையில் சில ஆண்டுகள் இசை பயின்றார். அங்கரை விஸ்வநாத பாகவதரின் குழுவில் இணைந்து டெல்லி, மும்பை, ஹைதராபாத், நாக்பூர் ஆகிய நகரங்களில் கச்சேரி செய்தார்.

# ஸ்ரீபாலகந்தர்வ கான சபாவில் 13 வயதில் சேர்ந்தார். பெண் வேடமேற்று பாடி, நடித்தார். வேறு சில நாடக கம்பெனிகளிலும் நடித்தார். சென்னையில் சில காலம் ஒரு ஹோட்டலில் வேலை செய்தார். நாடக ஆசிரியர் சந்தானகிருஷ்ண நாயுடு சிபாரிசில் வேல் பிக்சர்ஸ் ஸ்டுடியோவில் வேலை கிடைத்தது.

# பிரபல இசை அமைப்பாளர் டி.ஏ.கல்யாணம் இவரது இசை ஞானத்தை அடையாளம் கண்டு தன் உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார். 1940-ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நிரந்தர இசை அமைப்பாளராகச் சேர்ந்தார். 1942-ல் மனோன்மணி திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார்.

# 1950-களின் மத்தியில் டவுன் பஸ், முதலாளி, மக்களைப் பெற்ற மகராசி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பேரும் புகழும் பெற்றார். பாடலுக்குப் பொருத்தமான இசையை வழங்குவது இவரது சிறப்பம்சம். சுமார் ரகப் படங்கள்கூட, கண்ணதாசன் வரிகளாலும், இவரது இசையமைப்பாலும் தோல்வியைத் தழுவாமல் தப்பித்தன.

# தமிழகத்தில் மட்டுமின்றி, தெலுங்கு மண்ணிலும் பெரிதும் கொண்டாடப்பட்ட இசை அமைப்பாளராக முத்திரை பதித்தார். இவரது நீண்ட நெடிய இசைப் பயணத்தில் யார் மனதும் புண்படும்படி இவர் நடந்துகொண்டதே இல்லை.

# ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசை சூழலுக்கு ஏற்ப கச்சிதமாகப் பொருந்தும் வகையில் இசையமைத்தார். பாடலாசிரியர்கள் விரும்பும் இசையமைப்பாளர் என்றும் புகழப்பட்டார்.

# ‘திரையிசைத் திலகம்’ என்று போற்றப்பட்ட இவருடைய பாடல்கள் சங்கீத நுட்பம் நிறைந்ததாக இருக்கும். திரை இசையில் சாஸ்திரிய இசை, நாட்டுப்புற இசை, மெல்லிசை என்று ஒவ்வொன்றிலும் தனி முத்திரை பதித்தார்.

# மதன மோகினி திரைப்படத்தில் பி.லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். கந்தன் கருணை, சங்கராபரணம் படங்களுக்காக இவருக்கு சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய விருதுகள் கிடைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். தமிழில் 218 படங்களுக்கு இசை அமைத்தார்.

# தனது அற்புதமான இசையமைப்பில் ஏராளமான பாடல்களை வழங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற கே.வி.மகாதேவன் 83 வயதில் (2001) மறைந்தார்.


- ராஜலட்சுமி சிவலிங்கம்



இசை என்பது அழகான கவிநயம் மிக்க விஷயங்களை தெய்வீகமான வழியில் இதயத்துக்கு எடுத்துச் சொல்வது." - பாப்லோ காஸல்ஸ்.


"நீலமலைத் திருடன்"  -  சந்திரலேகாவுக்கு பிறகு ரஞ்சனுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த படம்.தாய்க்குப் பின் தாரம் படத் தயாரிப்பின் போது எம்.ஜி. ஆருடன் தனக்கிருந்த நட்பில் ஏற்பட்ட விரிசலால் அவரைத் தனது அடுத்த படத்தில் நடிக்க வைக்க தயங்கிய தேவர் ரஞ்சனை வைத்து எம்.ஜி.ஆர். இல்லாமலும் தன்னால் ஹிட் கொடுக்க முடியும் என்று நிரூபித்தார். இருப்பவர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு உதவும் திருடன் வேடம் ரஞ்சனுக்கு. 

படத்தின் வெற்றிக்கு மகாதேவனின் இசை சரியான பக்க பலமாக இருந்தது.  காட்சிகளின் விறுவிறுப்புக்கு சரியான ஈடுகொடுத்த பின்னணி இசையாலும், பாடல்களுக்கு அமைத்த இனிமையான மெட்டுக்களாலும் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தார் கே.வி. மகாதேவன்."உள்ளம் கொள்ளை போகுதே"  அஞ்சலிதேவிக்காக ஜிக்கி பாடிய பாடலுக்கு மகாதேவன் அமைத்த மெட்டும், இசையும் கேட்பவர்கள் உள்ளத்தை உண்மையாகவே கொள்ளை கொள்ளத் தவறவில்லை.  என்றாலும் இன்று வரை "நீலமலைத் திருடன்" என்றதும் சட்டென்று நினைவுக்கு வரும் பாடல் "சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா - தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா." - என்ற மருதகாசியின் பாடல்தான். 



சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் இந்த அற்புதமான காலத்தை வென்று நிற்கும் தத்துவப் பாடலை - வெகு அருமையாக ஜனரஞ்சகமாக அமைத்து டி.எம். சௌந்தரராஜன் அவர்களை அற்புதமாக பாடவைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.குதிரையின் குளம்பொலி இசையுடன் கிட்டாரின் மீட்டலுடன் பாடல் துவங்கும் போதே மனதை பாடலின் பக்கம் திருப்பி விடுகிறது.   

"எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை

இடறவைத்து தள்ளப்பார்க்கும் குழியிலே

அத்தனையும் தாண்டிக் காலை முன்வையடா

நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா."   - மருதகாசியின் மணியான வரிகள் கே.வி. மகாதேவனின் இசையில் கேட்கும்போது தளர்ந்த மனதுக்குள்ளும் தன்னம்பிக்கை ஊற்றெடுக்கிறதே.  

"நீலமலைத் திருடன்" - படத்தில் முக்கிய வேடமேற்றவை ஒரு நாயும், குதிரையும் தான். வில்லனின் அடியாட்கள் கதாநாயகனை கட்டிலோடு  கட்டிப்போட்டு அடைத்து வைத்திருக்க அவனைக் காப்பாற்ற நாய், குதிரை மீது சவாரி செய்தபடி வரும் காட்சி திரை அரங்குகளில் மிகுந்த வரவேபையும், கைதட்டலையும், விசில் ஒலியையும் கிளப்பி அதிரவைத்தது.  இந்தக் காட்சிக்கு கே.வி. மகாதேவன் அமைத்த பின்னணி இசை மிக முக்கியமான ஒரு காரணமாக அமைந்தது. "நீலமலைத் திருடன்" வெளிவந்த அதே வருடம் - சொல்லப்போனால் "நீலமலைத் திருடன்" படத்துக்கு முன்னதாக கே.வி. மகாதேவனின் அற்புதமான இசை அமைப்பில் வெளிவந்த படம் தான் "ராஜராஜன்".



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். - பத்மினி இணைந்து நடித்த இந்தப் படத்தில் எம்.என்.நம்பியார், பி. எஸ். வீரப்பா, லலிதா, எம்.ஜி. சக்ரபாணி ஆகியோரும் நடித்திருந்தனர்.இந்தப் படம் கே.வி. மகாதேவனின் சிறந்த இசைக்காவே பேசப்பட்ட படம்.ஆரம்ப காலப்படங்களில் எம்.எம். மாரியப்பாதான் எம்.ஜி.ஆருக்காக முதலில் பின்னணி பாடியவர்.அவருக்கு அடுத்து ஐம்பதுகளின் இறுதிவரை அவருக்காக பாடியவர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள்தான். 

அந்த வகையில் இந்தப் படத்தில் கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி எம். ஜி.ஆருக்காக சீர்காழி கோவிந்தராஜனும், பத்மினிக்காக ஏ.பி. கோமளாவும் பாடிய பாடல் ஒன்று இன்றுவரை காலத்தை வென்று நிலைத்து நிற்கிறது."நிலவோடு வான் முகில் விளையாடுதே"  என்று துவங்கும் இந்தப் பாடலை வெகு அற்புதமான மிஸ்ர யமன் (யமன்கல்யாணி என்றும் சொல்லலாம்) என்ற ராகத்தில் அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
பொதுவாக திரைப்படப் பாடல்களில் சுத்தமான கர்நாடக சங்கீதம் என்பது எம்.கே. தியாகராஜ பாகவதர் காலத்தோடு வழக்கத்தில் இருந்து மறைந்துவிட்டது.  அதற்குப் பிறகு  ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் வர ஆரம்பித்தன.   அதாவது குறிப்பிட்ட ராகத்தின் ஸ்வரங்களை எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கிராமிய மெட்டுக்களையோ அல்லது மேற்கத்திய இசையையோ கலந்து கொடுக்க ஆரம்பித்த காலகட்டம் அது.  என்றாலும் கையாள எடுத்துக்கொண்ட ராகத்திலிருந்து மாறாமல் அதை அனுசரித்தே பாடல்கள் அமைந்தன.  

அந்த வகையில் இந்த "நிலவோடு வான் முகில் விளையாடுதே" பாடல் கே.வி. மகாதேவனின் இசை மகுடத்தில் ஒரு வைரக்கல் என்றால் அது மிகை அல்ல. கர்நாடக இசை மேதை காலம் சென்ற ஜி.என். பாலசுப்ரமணியம் அவர்களது பிரபலமான பாடலான "ராதா சமேதா கிருஷ்ணா" என்ற பாடல் இதே மிஸ்ர யமன் ராகத்தில் அமைந்த பாடல் தான்.  

"நிலவோடு வான் முகில் விளையாடுதே" பாடல் முதல் நாள் மாலையில் ஓலிப்பதிவு ஆரம்பித்து விடிய விடிய அனைவரும் உழைத்து மறுநாள் காலையில் முடிந்த பாடல் - என்று அதனை சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து பாடிய பாடகி ஏ.பி. கோமளா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார். 

பாடலைக் கேட்கும்போது வான்முகில் நிலவோடு மட்டும் விளையாடவில்லை. நம் மனங்களோடும் விளையாடுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. நீங்களும் கேட்டுத்தான் பாருங்களேன்.   

அடுத்து "ஆடும் அழகே அழகு"  லலிதா- பத்மினி இணைந்து ஆடும் நடனத்துக்கான பாடல்.பி. லீலா - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இருவரும் இணைந்து பாடிய இந்தப் பாடலை இயற்றியவர் யார் தெரியுமா?  கே.வி. மகாதேவனின் உதவியாளராக இருந்த டி.கே. புகழந்தி அவர்கள்தான். 

இந்த நடனப் பாடலை ஒரு ராகமாலிகையாக விஜய நாகரி, நடபைரவி, குந்தலவராளி, சிந்துபைரவி ஆகிய ராகங்களில் அருமையாக அமைத்திருக்கிறார் கே.வி. மகாதேவன்.  சுத்தமான கர்நாடக சங்கீதத்தில் அமைந்த இந்தப் பாடலின் ஒவ்வொரு சரணங்களுக்கும் இடையில் வரும் இணைப்பிசையும்,  ஒரு ராகத்திலிருந்து இன்னொரு ராகத்துக்கு மாறும் அழகும்..  மகாதேவனின் திறமைக்கு ஒரு அற்புதமான சான்று.   

இதே போல இன்னொரு டூயட் பாடல் -  "இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே"  -  சீர்காழி கோவிந்தராஜன் - ஏ.பி. கோமளாவின் குரல்களில் ஒரு உற்சாகப் பாடலாக அமைந்திருக்கிறது.  ஆபேரி ராகத்தின் அடிப்படையில் இந்தப் பாடலை கே.வி. மகாதேவன் அமைத்திருக்கிறார்.  பொதுவாக திரை இசையில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம் இது.  ஹிந்துஸ்தானியில் பீம்ப்ளாஸ் என்று இதனைச் சொல்வார்கள். 


அடுத்து ஆர். பாலசரஸ்வதியின் தாலாட்டும் குரலில் 'கலையாத ஆசைக் கனவே" என்ற பாடல் - சங்கராபரண ராகத்தின் அடிப்படையில் அமைந்த பாடல் இது.   படத்தில் உற்சாகமாக சூழலிலும், சோகச் சூழலிலும் என்று இரண்டு முறை இந்தப் பாடல்  இடம்பெறும்.  பாலசரஸ்வதியின் மென்மையான குரலில் மயிலறகால் மனதை வருடுவது போல வருடிச் செல்லும் பாடல் இது.  இப்படிப் பாடல்களுக்கு கர்நாடக இசையின் அடிப்படையில் இசை அமைப்பதை பெரிதும் விரும்பினார் கே.வி. மகாதேவன். "எந்தப் பாடலாக இருந்தாலும் அதற்கு கர்நாடக இசையின் 'டச்' இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் தான் இசை அமைக்கவேண்டும் என்று கருதுபவன் நான். அப்படித்தான் என்னால் "டியூன்" போடவே முடியும்." என்று அவரே சொல்லி இருக்கிறார்.



அது மட்டும் அல்ல.  "திரை இசைப் பாடல்களுக்கு நமது கர்நாடக இசை பொருந்துவதைப் போல வேறு எதுவும் பொருந்துவதில்லை" என்று தனது அபிப்பிராயத்தை "பொம்மை" மாத இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் தெரியப் படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன்."ராஜராஜன்" படத்தின் பாடல்களில் மட்டும் அல்ல பின்னணி இசையிலும் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் கே.வி. மகாதேவன். எம்.ஜி.ஆர் - எம்.ஜி.ஆர் - எதிரிகளுடன் மோதும் இந்த  சண்டைக் காட்சிக்கான பின்னணி இசையே அதற்கு சரியான சான்று.  

இப்படிப் படத்துக்குப் படம் தனது இசையால் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்து முன்னேறிக்கொண்டிருந்தார் கே.வி. மகாதேவன்.
எம்.ஜி.ஆர். - சிவாஜி இருவரும் உச்ச நட்சத்திரங்களாக முன்னேறிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் படத் தயாரிப்பு என்பது மிகுந்த பொருட்செலவையும், நேரத்தையும் விழுங்கக்கூடியது என்ற நிலைமையே இருந்து வந்தது.. 

குறைந்த பொருட்செலவில் தரமான படங்களை தயாரிப்பது என்பதைக் கற்பனை செய்து பார்க்கவே தயாரிப்பாளர்கள் தயங்கிய நேரம் அது.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் அதிபர் சுந்தரம் அவர்களின் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த வி. சீனிவாசன் என்ற  இளைஞரை இயக்குனராக வைத்து தயாரிப்பாளர் எம்.ஏ. வேணு அவர்கள் குறுகிய காலத் தயாரிப்பாக ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்தார். பராசக்தியில் சிவாஜி கணேசனுடன் அறிமுகமாகி மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்த எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக முதன்முதலாக அறிமுகமானார் தேவிகா.



இந்தப் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கே.வி. மகாதேவனுக்கு கிடைத்தது.1957- தீபாவளிக்கு வெளிவந்த குறைந்த பொருட்செலவில் குறுகிய காலத்தயாரிப்பாக வெளிவந்த இந்தப் படம் அதே தீபாவளிக்கு வெளிவந்த உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடுகொடுத்து பெருவெற்றி பெற்று அனைவரது புருவங்களையும் உயரவைத்தது. அதோடு நிற்கவில்லை.  அந்த ஆண்டுக்கான சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக ஜனாதிபதி விருதையும் பெற்று அனைவரையும் புருவங்களை உயர்த்த வைத்தது. படத்திற்கு கே.வி. மகாதேவன் அமைத்த இசை பெரிதும் பேசப்பட்டு பாடல்கள் இன்று வரை நீங்காத இடத்தை பிடித்தன.அதிலும் எஸ்.எஸ்.ஆர் பாடுவதாக டி.எம்.எஸ். பாடிய பாடல் படம் வெளிவந்த புதிதில் அரங்கை விட்டு வெளியே வந்த அனைவராலும் முணுமுணுக்கப் பட்டது. 

அந்தப் படம் தான் "முதலாளி".
பாடல் "ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே."


(இசைப் பயணம் தொடரும்..)






No comments:

Post a Comment